(Reading time: 5 - 10 minutes)

தம்பி தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழன் கிடையாது 

டேய் நீ என்ன முதல்ல இருந்து வர 

உங்க பேரு என்ன 

முத்து 

உங்க அப்பா பேரு என்ன 

நம்பி 

எப்படி கையெழுத்து போடுங்க 

N.முத்துன்னு போடுவேன் 

அது என்ன ஆங்கில இனிஷியல். நீ என்ன வெள்ளைகாரனுக்கா பிறந்த? இப்போ பதில் சொல்லு பாக்கலாம் என்று மேசையை ஓங்கி அடித்தார் .அதில் வைக்கப்பட்டிருந்த கத்தி அவர் கையை கிழித்து விடுகிறது

ஓ வென அலறுகிறார் 

அண்ணே O ஆங்கில வார்த்தை தமிழ்ல குத்துங்க 

ஆ 

வாங்க வாங்க ஹாஸ்பிடல் போலாம் 

சீன் 3 :

ரொம்ப வலிக்குது டாக்டர் 

அண்ணே டாக்டர் இங்கிலிஷ் வார்த்தை. தமிழ்ல கூப்பிடுங்க 

தமிழ்ல டக்குனு வரலையேடா 

டக்குன்ற வார்த்தை தமிழ்ல எங்கே இருக்கு 

ஐயோ கொல்லுறானே 

சிஸ்டர் பேஷண்ட்டை அழைச்சிட்டு போய் பர்ஸ்ட் எயிட் பண்ணுங்க 

அண்ணே எழுந்திருங்கண்ணே நாம போகலாம் 

ஏண்டா 

ஒரே இங்கிலீஷிலே பேசிட்டு இருக்காங்க. வாங்க ஏதாச்சும் நாட்டு வைத்தியர் கிட்ட போய் பச்சிலை மருந்து கட்டிக்கலாம் 

ரொம்ப வலிக்குதுடா 

டாக்டர் நீங்க தமிழரா வந்தேறியா 

என் தாத்தா காலத்துல இருந்தே இங்கே தான் இருக்கோம். தமிழர் தான்பா 

அண்ணே டாக்டர் மேல எனக்கு சந்தேகமா இருக்கு. அவரு தமிழரா இல்லையான்னு கண்டுபிடிங்க 

அது வந்து தம்பி யார் வேணும்னாலும் தமிழ்நாட்டுல வாழலாம் .இங்கிலிஷ் பேசலாம் ஆனா தமிழ்நாட்டை நான் மட்டும் தாண்டா ஆளுவேன் 

இதை முன்னாடியே சொல்ல கூடாதா 

வலியில இப்போ தாண்டா தோணுச்சு 

டாக்டர் நீங்க சிகிச்சை ஆரம்பிங்க 

டாக்டர் ஊசி எடுத்து பாட்டிலில் உள்ள மருந்தை உறிஞ்சினார் 

டாக்டர் இந்த மருந்து எங்கே இருந்து வருது 

அமெரிக்காவுல இருந்து வருது 

அண்ணே உலகத்தையே அடிமை படுத்துற அமெரிக்காவுல தயாரிக்க மருந்து போட்டு தான் நீ உயிர் வாழணுமா இங்கிலீஷிலே இனிசியலே போடா கூடாதுன்னு சொன்ன தன்மான சிங்கம் அண்ணே நீ .வாண்ணே போலாம் 

அது வந்து தம்பி 

எழுந்திரிண்ணே .அமெரிக்காகாரன் உயிர் பிச்சை போட்டு தான் நீ உயிர் வாழணும்னா அப்படிபட்ட உயிரே உனக்கு வேணாம் 

ஓ வலிக்குதுடா 

தமிழ்ல  கத்துண்ணே நீ பாட்டுக்கு O P Q ன்னு இங்கிலீஷிலே கத்திட்டு இருக்க 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.