(Reading time: 2 - 4 minutes)

சிறுகதை - ம‌னைவி அமைவ‌தெல்லாம் - பூவேந்தன்

Wife

நேற்று இர‌வு 

சுகா "அப்பா நாளைக்கு டூர் போறோம்பா, காலைல‌ 6.30க்கு ஸ்கூல்ல‌ இருக்க‌னும்ப்பா"

ச‌ரிடா நான் வ‌ரேன்...

காலைல‌ சீக்கிர‌ம் எழுந்துக்க‌ப்பா

ச‌ரிடா 

ன்று காலையில்  5.15க்கு

சுகா

"அப்பா.. அப்பா.. எழுந்திருப்பா..

என்ன‌டா 

சொன்னேன்ல‌..

ஆமா , நீ அதுக்குள்ள‌ குளிச்சிட்டியா...

ஆமாம்பா மிஸ் 6.30க்கு ஸ்கூல்ல‌ இருக்க‌ சொன்னாங்க‌

ச‌ரி ச‌ரி இதோ கெள‌ம்பிடுறேன்

அப்பா எதாச்சும் வாங்கி சாப்பிட‌ காசு வேணும் 

என்கிட்ட‌  இல்லை அம்மாட்ட வாங்கிக்கோ 

ச‌ரிப்பா

ம‌னைவி "என்கிட்ட‌ சில்ல‌ரை இல்ல‌ இந்தாங்க‌ 500ரூபா நீங்களே‌ மாத்தி கொடுங்க‌"

காலைல‌ யார் த‌ருவா சில்ல‌ரை ச‌ரி குடு , வந்து ஆபிஸ் CAB வேற‌ புடிக்க‌னும்

குளிச்சு முடிச்சு உடுத்தி புற‌ப்ப‌ட்டு ஆட்டோ புடிச்சு ஸ்கூல் போக‌ 6.45 ஆச்சு 

ஆட்டோ வெயிட்டிங்ல‌ போட்டு, மிஸ்கிட்ட‌ எங்க‌ டூர் எப்போ ரிட்ட‌ர்ன் எல்லாம் விசாரிச்சு அவ‌ன‌ ப‌ஸ்ல‌ ஏத்திட்டு bye சொல்லி, வெயிட்டிங் ஆட்டோல‌ திரும்பி மெயின் ரோட்க்கு வ‌ந்து ஆட்டோ க‌ட் ப‌ண்ணிட்டு காசு கொடுத்த‌போது ஞாப‌க‌ம் வ‌ந்த‌து

அட‌ராமா அவ‌ன் செல‌வுக்கு ப‌ண‌ம் கேட்டானே ம‌ற‌ந்துட்டோமே 

ம‌ணி வேற‌ ஆச்சு 

ஆன‌து ஆக‌ட்டும்னு திட்டினா ப‌ர‌வால்ல‌ன்னு ம‌னைவிக்கு ஃபோன் ப‌ண்ணேன்

ஏம்மா 

சொல்லுங்க

திட்டாத‌ அவ‌ச‌ர‌த்துல‌ அவனுக்கு ப‌ண‌ம் கொடுக்க‌ ம‌ற‌ந்துட்டேன்

என‌க்கு தெரியும் ப‌த‌ட்ட‌த்துல‌ நீங்க‌ ம‌ற‌ந்துடுவிங்க‌ன்னு

நான் வேணும்னா திரும்ப‌ போய்

வேண்டாம் நான் 100ரூ கொடுத்திருக்கேன்

எப்போ

நீங்க‌ அவ‌ச‌ர‌மா குளிக்க‌ போனிங்க‌ளே அப்போ

ஐ ல‌வ் யு டி

ரொம்ப‌ ஃபீல் ப‌ண்ணாம‌ ஆபிஸ் போங்க‌

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.