(Reading time: 11 - 22 minutes)

ஸ்ரீதர் பேசிக் கொண்டே போக கணேஷ் ராம் அதிர்ந்து கொண்டிருந்தான்.

‘வர்ஷினி ஹாஸ்பிடல்னா கௌரி ஹாஸ்பிடலா’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போது ஸ்ரீதரின் அடுத்த கேள்வி கணேஷின் சந்தேகம் அனைத்தையும் தெளிவாக்கியது.

“நீங்களும் வருண் அண்ணா ஐ மீன் வர்ஷினியோட அண்ணா என்கேஜ்மன்ட்க்கு தான் போறீங்களா சார். நானும் அங்கே போக தான் கிப்ட் வாங்க வந்தேன். எங்க அக்கா என்கேஜ்மன்ட் போலவே கேம்ஸ் எல்லாம் அரேஞ் செய்திருக்கா வர்ஷினி. இன்னிக்கு அந்தாக்ஷரிக்கு நீங்க எந்த சைட் சார் பாட போறீங்க” அவன் வளவளவென பேசிக் கொண்டே இருந்தான்.

கணேஷ் ராமிற்கு இருப்பு கொள்ளவில்லை. உடனடியாக அவனுக்கு வர்ஷினியை பார்க்க வேண்டியிருந்தது.

“ஸ்ரீதர் நான் ஹாஸ்பிடல் போகணும். சோ கெளம்பறேன். விழாவில பார்க்கலாம்” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டான்.

தனது காரை செலுத்தியபடியே வருணுக்கு போன் செய்தான்.

“வருண் உங்களை டிஸ்டர்ப் செய்துட்டேனா நீங்க எங்க இருக்கீங்க மண்டபத்திலா”

கணேஷின் கால் வந்த சமயம் தான் வர்ஷினியிடம் ஒழுங்காக விழாவிற்கு தயாராகு என்று சொல்ல்லிக் கொண்டிருந்தான்.

அறையை விட்டு வெளியே வந்த வருண், “வீட்ல தான் இருக்கேன் கணேஷ்” என்று பதில் கூறினான்.

“நான் உங்க வீட்டுக்கு பக்கத்தில் தான் இருக்கேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா உங்க வீட்டுக்கு வரலாமா”

“என்ன கணேஷ் இது. பெர்மிஷன் எல்லாம் கேட்டுகிட்டு. ப்ளீஸ் கம்” வருண் சொல்லவும் விரைந்து அவர்கள் இல்லம் நோக்கி காரை செலுத்தினான் கணேஷ்.

“வெல்கம் வாங்க வாங்க” மிகுந்த அன்போடு உபசரித்தான்.

“சாரி நீங்க ரெடி ஆகி கொண்டிருக்கும் சமயத்தில் வந்து டிஸ்டர்ப் செய்துட்டேன்” என்று மன்னிப்பு கேட்டவன் அங்கே ஹாலில் மாட்டியிருந்த புகைப்படங்களை நோக்கினான்.

சிரித்துக் கொண்டும், தன் அத்தை மாமவை கட்டிக் கொண்டும், வருணை செல்லமாய் சீண்டிக் கொண்டும் அங்கே சட்டத்திற்குள் இருந்து அவனைப் பார்த்து கண்சிமிட்டிக் கொண்டிருந்தது வர்ஷினியே தான். அவனது அர்ஷு தான்.

கணேஷின் பார்வை சென்ற இடத்தை நோக்கிய வருண் படத்தில் இருந்தவர்கள் பற்றி அறிமுகம் சொன்னான்.

“இவங்க என் பேரெண்ட்ஸ். இவ என் தங்கை அம்மு நான் சொன்னேனே என் அத்தை அவங்க பொண்ணு”

“இவங்க மெடிகல் பைல் தான் அன்னிக்கு என்கிட்டே டிஸ்கஸ் செய்தீங்க இல்லையா”

“ஆமா கணேஷ்” வருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சரோஜினி அம்மா கையில் பழச்சாறுடன் வந்தார்.

வருண் கணேஷ் இவருவரிடமும் பழச்சாறு அடங்கிய கண்ணாடி கோப்பைகளை தந்துவிட்டு, “ பாப்பா மேல தானே இருக்கு தம்பி. பாப்பாக்கும் ஜூஸ் கொண்டு போய் கொடுக்கவா” என வினவினார்.

“இல்ல சரோம்மா... அவளுக்கு லேசா ஜூரம் இருக்கு. ஜூஸ் வேண்டாம்” வருண் மறுக்க உள்ளே சென்று விட்டார் சரோஜினி.

“அர்ஷுக்கு பீவரா” மனதில் நினைத்தவன் அவளைக் காண துடித்தான்.

அவள் மீது அவனுக்கு கோபம் இருந்ததே இல்லை. ஆனால் ஏன் இப்படி எந்த காரணமும் சொல்லாமல் பிரிந்து சென்றாள் என்ற வருத்தம் இருந்தது.

ஆனால் தன்னவள் காய்ச்சலில் இருக்கிறாள் என்று தெரிந்ததும் அவளை அள்ளி அணைத்து அரவணைக்க தவித்தான்.

“என்னாச்சு வருண் அவளுக்கு” என்று சட்டென கேட்டுவிட்டவன் உடனேயே சுதாரித்து ‘அவங்களுக்கு’ என்றான்.

அவன் முக பாவங்களும் அதில் தெரிந்த தவிப்பும் வருணுக்கு எல்லாவற்றையும் உணர்த்தி விட்டிருந்தது.

“பெருசா ஒன்னும் இல்லை. லேசா வைரல் தான். இப்போ கிளம்பிட்டு இருக்கா. கணேஷ் நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் செய்ய முடியுமா ப்ளீஸ்” வருண் சொல்லவும் அப்போதும் ராமிற்கு நிம்மதி ஏற்படவில்லை. இருப்பினும் வருண் உதவி கேட்கவே என்ன என்று வினவினான்.

“டைம் ஆச்சு. நாங்க மண்டபம் போகணும். அம்மு கிளம்ப லெட் ஆக்குவா. அவளே டிரைவ் செய்றேன்ன்னு சொன்னா. நான் தான் பீவர் இருக்கதால இருந்து கூட்டிட்டு போகலாம்னு வெயிட் செய்றேன். அப்பா வேற ரெண்டு தடவை கால் செய்துடாங்க” சொல்லிவிட்டு தயங்கினான் வருண்.

“சொல்லுங்க வருண். நான் என்ன ஹெல்ப் செய்யணும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.