(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - என்னவளே - 01 - கோமதி சிதம்பரம்

ennavale

சின்னய்யா, வெளில உங்கள பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு என்று கூறிய வேலையாளை யோசனையோடு பார்த்தான் ரிஷி.

யார் என்று கேட்டீங்களா? என்று கேட்ட ரிஷியின் குரல் வெளியில் நின்று கொண்டு இருந்த கீதாவின் காதில் விழுந்ததும் பட்டென்று எழுந்து நின்று விட்டாள்.

கடவுளேயே இந்த குரல் அவர் உடையது அல்லவா?  அப்படி என்றால் இந்த வீட்டிற்கும் அவர்க்கும் என்ன சம்பந்தம்?  தான் இந்த வீட்டிற்கு வந்து இருக்கும் நோக்கம் அவர்க்கு தெரிந்தால்? தன்னை என்னவென்று நினைப்பார்? 

ஒருவேளை நான்தான் தவறாக அவர் குரல் என்று எண்ணிவிட்டேனோ? இல்லை  இல்லை இது அவர் குரல்தான்.

தன் உயிரில்  மூச்சை கலந்து இருக்கும் குரலை உயிர் உள்ளவரை அவள் மறக்கப்போவது இல்லை. பேசாமல் இங்குஇருந்து சென்று விடலாமா? என்று எனும் போதேயே மடியில் இருந்த குழந்தை உறக்கத்தில் எதோ கனவு கண்டு சிரித்தது.

அதை கண்ட கீதாவிற்கு அழுகைதான் வந்தது. கடவுளேயே, இந்த குழந்தையின் சிரிப்பை நிரந்தரமாக  வேண்டும் என்றால் ரிஷியின் கண்களில் கண்ணீர் வரத்தான் வேண்டும். இதை நினைக்கும் போதேயே கீதாவின் மனதில் வலி ஏற்பட்டது.

என்னவானாலும் சரி, இந்த வீட்டு வாரிசை இங்கு சேர்த்துவிட்டு நாம் சென்று விட வேண்டியது தான். நான் செய்ய போகும் காரியம் இனி எப்பொழுதும் ரிஷியின் வாழ்வை பாதிக்கக்கூடாது என்று மனதிற்குள் முடிவு எடுத்து கண்ணீரை துடைத்து கொண்டாள்.

அவளது முடிவை , உடைப்பது போன்று ரிஷியின் காலடி சப்தம் அவள் நெஞ்சை அதிரவைத்தது, கண்களில் இருந்து கண்ணீர் வரவா என்று அழைப்பு விடுத்தது.

மனதில் உறுதியை  வரவழைத்து கொண்டு கையில் மூன்று மாத குழந்தையுடன் தான் இஷ்ட தெய்வத்தை எல்லாம் வேண்டியபடி கீதா நின்றுகொண்டு இருந்தாள்.

அவளை அங்கு கண்டதும், தான் மனதில் எழுந்த மகிழ்ச்சியை கட்டுபடுத்த வழி தெரியாமல் ரிஷி ஆனந்த அதிர்ச்சி அடைந்தான். கண்டேன் சீதை என்பது போன்ற நிலையில் avan இருந்தான்.

கண்டிப்பாக, ஒரு நாள் என்னை தேடி வருவாள் என்று காத்து கொண்டு இருந்தவன். இதோ, இன்று மூன்று வருடம் கழித்து என்னை தேடி வந்து இருக்கிறாள்.

அவளது குழந்தை தானமான  அழகு இன்னும் அப்படியே இருந்தது.  அவளது இடை வரை நீண்ட கூந்தல் இன்னும் அவளை அழகுற காட்டியது. அவளது பளிங்கு நிறம் சற்று நிறம் குறைந்து இருந்தது. முன்பு இருந்ததை விட இப்பொழுது மெலிந்து இருந்தாள்.

தான்பட்ட கஷ்டத்தினை அவளும் அனுபவித்து இருப்பாளோ? அப்படி என்றால் என்னிடம் சொல்லாமல் விலகிது ஏன்? என பல  கேள்விகள் அவன் மனதில் எழுந்தாலும் அவளின் அழகை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

கீதா  ரிஷி  காலடி  சப்தம் நின்றும், ஏன் அவர் இன்னும் ஏதும் பேசவேயில்லை என்று தன் தலையை மெல்ல  தூக்கி பார்த்தாள். 

அங்கே , அவளையே வாய்த்த கண் வாங்காமல் கண்களில் காதலுடன் ரிஷி பார்த்து கொண்டு இருந்தான். அந்த காதல் கொண்டு கண்களில் தன்னையே மறந்து நின்று விட்டாள். 

அவனது கம்பிரமான  ஆறடி உயர அழகு இன்றும் அப்படியே இருந்தது. ஓடி சென்று அந்த மார்பில் தஞ்சம் கொள்ள வேண்டும் என்று துடித்த மனதை கட்டுப்படுத்த  முடியாமல் தவித்து கொண்டு இருந்தாள்.

அதில் கிடைக்கும் பாதுகாப்பு இனி தனக்கு ஒருபோதும்  கிடைக்காதே என்ற ஏக்கம் அவளது கண்களில் கண்ணீரை கொண்டு வந்தது.

"அண்ணலும் நோகின்னால் அவளும் நோகின்னால் " என்று நின்று கொண்டு இருந்தவர்களை கீதாவின் மடியில் இருந்து குழந்தை சிணுங்கி தானும் இங்கு இருப்பதை அவர்களுக்கு நினைவூட்டியது.

அப்போதுதான், இருவரின் கவனமும் குழந்தையிடம் சென்றது..

எவ்வளவு நேரம் தன் நின்ற நிலையெண்ணி கீதாவிற்கு தன் மீதேயே எரிச்சல் ஏற்பட்டது. தான் இங்கு வந்து இருப்பதேயே  குழந்தைக்காக தான். அதை விட்டு விட்டு தன் சொந்த வாழ்கையை நினைப்பது தவறு அல்லவா.

அது மட்டும் இன்றி,  தனது நிலை அறிந்தால் ரிஷி கண்டிப்பாக  தன்னை வெறுக்க கூடும் என்பதும் தெரிந்ததேயே. இனியும் தன்னால் அவர்  வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட கூடாது. அதற்கு அவரது  வெறுப்பை நான் சம்பாதித்தேயே ஆக வேண்டும்.

இப்பொழுது தான் கூற போவது தெரிந்தால், காதல் கொண்டு என்னை நோக்கிய கண்கள் கொலை வெறியுடன் பார்க்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.

யோசித்து கொண்டு இருந்தவளின்க வனம் கலைக்கும் வண்ணம், இந்த குழந்தை ஏது? என்ற ரிஷியின் க ம்பிர குரல் அவள் காதில் கேட்டது.

மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு அங்கு இருந்த ஷோபாவில் குழந்தையை வசதியாக படுக்க வைத்தாள். அமைதியாக அவளையே பார்த்துக்கொடு இருந்தான் ரிஷி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.