(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 46 - தேவி

vizhikalile kadhal vizha

செந்தில் தன் காதில் கேட்டத்தை நம்ப முடியாமல் செழியனை பார்த்தான்.

“மச்சான் .. என்னடா சொல்ற..? “

“எனக்கும் மலருக்கும் பேசி முடிச்சாச்சுன்னு சொல்லுறேன்.. விளங்குதா இல்லியா?”

“அது எப்படிலே..? காலையிலே உங்கப்பாகிட்டே பேசின சரி.. அதுக்குள்ளே எப்படி மலர் வீட்டிலே பேசின? மொத தங்கச்சி ஊர்லேதானே இருக்கு? போன்லே பேசி முடிச்சுட்டீங்களா?”

செழியன் விவரம் சொல்ல வருகையில், அவன் அப்பா

“எலேய்.. செந்தில் அங்கிட்டு என்ன உன் சிநேகிதனோட ரகசியம் பேசிட்டு இருக்க? உள்ளார வா..” என

“போட்டார்டா உங்க அப்பா செக் போஸ்ட்... இனிமே உன்கிட்ட விஷயத்த வாங்கின மாதிரிதான்” என்று புலம்பியவன்,

“இதோ வந்துட்டேன் மாமா” என்றபடி உள்ளே அவர் எதிரில் அமர்ந்தான்.

செழியனும் உள்ளே வந்து அமர,

“என்ன செழியன் காதை கடிச்சுட்டு இருக்க?”

“இல்ல.. நீங்க போன சோலி நல்லபடியா முடிஞ்சுதான்னு விசாரிச்சுட்டு இருக்கேன்”

“நான் நினைச்சது, என் மவன் நினைச்சது எல்லாமே நல்லபடியா முடிஞ்சுட்டுலே”

“என்ன மாமா சொல்லுதீங்க?”

“ஆமாலே .. நான் எந்த வீட்டு பொண்ணு செழியனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கனும்னு நினைச்சேனோ , அந்த பொண்ணுதான் அவம் விரும்பின பொண்ணும்”

“அட.. இது நல்ல விஷயமாச்சே.. அப்போ கல்யாணம் பேசி முடிச்சுட்டீங்களா?”

“பேசி முடிக்க என்ன? நான் ஊர்லேர்ந்து கிளம்பும் போது செழியனுக்கு கல்யாணம் பேசி முடிச்சு உப்பு தாம்பூலம் மாத்தி தான் திரும்பனும்ன்னு நினைச்சேன்.. இப்போ அதே நடந்துச்சு”

“மலர் வீட்டிலே எப்படி இங்க வந்தாங்க...?”

“நான் சொன்ன நமசிவாயம் ஐயாவோட பேத்திதான் மலர்”

“எலேய்.. செழியா.. நிஜமாவே நீ அதிர்ஷ்டகாரண்டா.. உங்க அப்பா விருப்பமும் நிறைவேத்தி, உன் விருப்பமும் நடத்திகிட்ட..”

“இவங்க ரெண்டு பேரும் தான் ஜோடின்னு அந்த முருகன் கணக்கு போட்டுட்டான்.. அதான் எல்லாம் நல்லபடியா நடந்து இருக்கு“

“அதுவும் சரிதான் .. அப்போ கல்யாணம் எப்போ? செழியா உன் ரிசர்ச் முடிய இன்னும் நாலு மாசம் ஆகுமா..? அதுக்கு பொறவு தானே ஏற்பாடு ஆரம்பிக்கணும்” என

“எலேய்.. வாய வச்சு சும்மா இருக்கா மாட்டியா? நானே இருக்குற அம்புட்டு பேரையும் சரிகட்டி ரெண்டு மாசத்திலே கல்யாணம் வைக்க சொல்லிட்டு வந்து இருக்கேன்.. இவம் வேற ஏத்தி விடுதான்”

“சரி மாமா நான் கிளம்புதேன்.. “

“பலகாரம் சாப்பிட்டு போ செந்தில் “ என செழியன் அம்மா சொல்ல,

“இருக்கட்டும் அத்தை.. வீட்டுலே செல்வி காத்துட்டு இருப்பா.. அதோட இங்கன வாறதே ரொம்ப நாள் கழிச்சுன்னுட்டு, அம்மா வேற நான் வர வரைக்கும் உக்காந்தே இருக்கும். “

“சரியா. நாளைக்கு கோவில்லே நம்ம பூசைக்கு ஏற்பாட்டு பண்ணிருக்கு.. செல்வி, மதனி எல்லாத்தையும் கூட்டிகிட்டு விரசாவே வந்துரு..”

“சரி அத்தை..”

“அம்மா. நான் செந்திலோட கொஞ்ச தொலைவு நடந்துட்டு வாரேன்... நீங்க எனக்கு எடுத்து வச்சுட்டு படுக்க போங்க..”

“சரி யா.. ரொம்ப தொலைவு போக வேணாம்.. கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கு.. ஜாக்கிரதையா இரு”

இருவரும் வாசலுக்கு வர,

“டேய் .. நேரம்டா.. இன்னைக்கு காலையில் வீட்டிலே பேசி, சாயங்காலம் நிச்சயம் வச்ச ஒரே லவ் மேரேஜ் உன்னோடது தான்.. கின்னஸ்லே போடலாம்டா..”

“கண்ணு வக்காதலே.. காலையில் உள்ளுக்குள் உதறின உதறல் எனக்குதான் தெரியும்... “

“உன்னை பார்த்தா அப்படி எல்லாம் தெரியலேயே”

“என்னை விடுடா.. இன்னிக்கு மலர் என்ன போடு போட்டா தெரியுமா..? நான் எல்லாம் எதிர் பார்க்கவே இல்லை”

“மலர் தைரியசாலி தாண்டா.. என்ன அது தைரியத்த அனாவசியமா வெளிலே காட்டிகிரதில்ல”

“அது சரிதான்.. வீட்டிலே அம்மா, தங்கச்சி கிட்டே போனதும் சொல்லிடு.. இல்லாட்டா காலையில் கோவிலில் பார்த்ததும் அம்மா சொல்லும்போது, நான் சொல்லலையேன்னு சண்டைக்கு வருவாங்க..”

“சரி செழியா.. காலையில் பார்க்கலாம்.. நீயும் வீட்டுக்கு நேரத்தோட வீட்டுக்கு போ”

செந்தில் வீடு மூன்று தெரு தள்ளி இருந்தது. இவன் இவர்கள் தெரு முனை வரைக்கும் அவனோடு சென்று விட்டு திரும்பி நடந்து வந்து கொண்டு இருந்தான்.

பொதுவாக இங்கே ஊரில் இருக்கும்போது செல் போன் பயன் படுத்த மாட்டான். தேவைபட்டால் பேசி விட்டு உடனே வைத்து விடுவான். அதனால் வீட்டை விட்டு வெளியில் வரும்போது கையோடு எடுத்து வருவது கிடையாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.