(Reading time: 17 - 34 minutes)

ஆனால் இன்று மலரிடம் பேச வேண்டும் போலிருக்க, கையில் போன் எடுத்து வந்து இருந்தான்.

அந்த தெரு கடைசியில் ஒரு காலி இடம் இருக்க, அது சின்ன பிள்ளைகள் விளாயாடும் இடமாக இருக்கும். முதலில் புதர் மண்டி இருந்த அந்த இடத்தை, செழியன் வரும்போது கவனித்து , ஊரில் உள்ள அவனை போன்ற இளைஞர்களை வைத்து சுத்தபடுத்தி, நல்ல மணல் பரப்பி வைத்தான். அதோடு அங்கே மரக்கன்று நட்டு வைத்து அதை பாதுகாக்கும் பொறுப்பை அங்கு விளையாடும் சிறுவர்களிடமே ஒப்படைக்க, அவர்கள் அதை நன்றாக பராமரித்து இப்போது நிழல் தரும் மரமாக வளர்ந்து இருக்கிறது.

அவர்களின் ஈடுபாட்டை பார்த்தவர்கள், அந்த இடத்தில் , ஷட்டல் நெட், வாலிபால் நெட் எல்லாம் கட்டிக் கொடுத்ததோடு, அந்த மரத்தடியில் சிமென்ட் இருக்கைகள் அமைத்து கொடுத்து இருக்கிறார்கள்.

இப்போது அங்கே வந்து அமர்ந்தவன் , மலருக்கு போன் செய்ய, சில ரிங்குகளுக்கு பின் மலர் போன் எடுத்தாள்.

“ஹலோ “ என

“விழி டியர், சாரி.. இந்த முறை மட்டும் “ என்று கூற, என்ன என்று புரியாமல் மலர் விழித்தாள்.

“என்ன ஆச்சு ?” என வினவ, பதில் சொல்லாமல் போனில் முத்தம் கொடுத்தான்.

இதுவரை செழியன் அவளிடம் பேசுவதோ, நடந்து கொள்வதோ லிமிட் தாண்டி இருக்காது. காதலர்கள் என்றாலும் அவர்கள் பேச்சுக்கள் தங்கள் விருப்பு , வெறுப்போ அல்லது பொது விஷயங்களோ பற்றிதான் இருக்குமே தவிர, அதை தாண்டி செல்லாது.

அங்கே மலரின் முகமோ இதை எதிர்பாராமல் சிவந்தது. அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவள் அமைதியாக இருக்க, தன்னை கட்டுபடுத்தியவனாக,

“ரொம்ப சந்தோசமா இருக்கு விழிமா.. “

“என்ன இளா? “

“இன்னிக்கு உன் பாட்டி கிட்ட நம்ம காதலுக்காக நீ பேசினது, அதுவும் அவங்கள எடுத்து எரிஞ்சு பேசாமல், இதமா பேசி கன்வின்ஸ் செய்தது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. எனக்கு கொஞ்சம் பயம் தான்.. நாம ரொம்ப கஷ்டபடனுமோன்னு.. ஆனால் அவங்க புரிஞ்சிகிட்டது ரொம்ப சந்தோஷமா இருந்தது.”

“நான் உங்க மேலே ரொம்ப கோபமா இருக்கேன்.. “

“ஏன்?”

“பின்ன.. என் தங்கச்சிய பொண்ணு பார்க்க வந்ததும் இல்லாம, அங்கியே வச்சு என்னை பிடிச்சு இருக்குன்னு சொல்றீங்க..? இது நல்லவா இருக்கு..”

“நோ..மா... மீ பாவம்.. எங்க அப்பா இன்னிக்கு காலையில் தான் அதையே சொன்னார்.. நான் மாட்டேன்னு மறுத்துட்டு, நீ உங்க வீட்டிலே பேசின மாதிரி நானும் பக்கம் பக்கமா வசனம் பேசி , எங்க அப்பாவ கரெக்ட் பண்ணிட்டு, அந்த பொண்ணு வீட்டிலேயும் நேராவே சொல்லிட்டு வரலாம்னு தான் வந்தேன்.. வந்தா உங்க ஆச்சிய பார்த்தவுடன் ஜெர்க் ஆகிட்டேன்.. சரி வந்தது வரட்டும்ன்னு ஸ்ட்ரைட் டீல் உங்க ஆச்சி கிட்டே கேட்டுட்டேன்.. எப்படி நம்ம திறமை..?”

“ரொம்பதான்.. அதுக்கு முன்னாடி என்னை பத்தி யோசிக்கலையா?”

“யோசிச்சேண்டா... அதான் நான் கேக்குற மாதிரியே கேட்டேன்.. ஆனால் நீ உள்ளே வந்து பேசுவேன்னு நான் எதிர்பார்க்கல”

“ஹ்ம்ம்.. நானும் கொஞ்சம் அவசரபட்டுடேனோன்னு தோனுச்சு... ஆனால் இந்த சான்ஸ் திருப்பி கிடைக்குமோ இல்லியோன்னு தான் ஆச்சி கிட்டே பேசிட்டேன்..”

“எனக்கு அது ரொம்ப பிடிச்சதுடா.. எப்படியும் உங்க வீட்டுலே சம்மதிக்க வச்சிடலாம்ன்னு நம்பிக்கை இருந்தது. ஆனால் எதிர்பார்க்காதது உங்க தாத்தாவோட சாய்ஸ் நான்தான்னு. இப்போ எல்லோருமே சந்தோஷமா இருக்காங்க...”

“அது உண்மைதான்”

“சரி.. சரி.. இதே சந்தோஷத்தோட மாமாக்கு ஒரு உம்மா கொடேன்..”

“ஹலோ... நமக்கு நடுவில் இன்னும் ஒரு கல்யாணம்ன்னு ஒரு கோடு இருக்கு.. கோட்டுக்கு அந்த பக்கம் நீங்களும், இந்த பக்கம நானும் இருக்கணும்.. தாண்டனும்னு நினைச்சா சேதாரம் அதிகம் ஆகும் .. பீ கேர்புல்.. “

“ஓகே. டார்லிங்.. குட் நைட்.. நாளைக்கு அப்பா கோவிலுக்கு போகணும்னு சொல்லிருக்காங்க.. சோ அனேகமா நம்ம அடுத்த மீட்டிங் காலேஜ்லே தான் இருக்கும்.. பாய்..”

“குட் நைட் “

“குட் நைட் வித் ஸ்வீட் ட்ரீம்ஸ்.. அட்லீஸ்ட் ட்ரீம்லேயாவது மாமாவா நல்லா கவனி”

“நல்லாதானே ... கவனிச்சிட்டா போச்சு..” என சிரித்தபடி போனை வைத்தாள்..

“ஆத்தி.. இவ ட்ரீம்லே எப்படி கவனிக்க போறான்னு தெரியலையே... ஹ்ம்ம்.. செழியா.. நீயும் குடும்பஸ்தானாக தயாரகிக்கோ..” என்று தனக்குள்ளே பேசியபடி வீட்டிற்கு சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.