(Reading time: 17 - 34 minutes)

அவர்களின் கூர்மையை வியந்தவன், சிரித்துக் கொண்டே “ஆமாம்.. “ என, வகுப்பறையே கூச்சல் போட்டது.. அவர்களின் ஆரவாரம் கண்டு சற்று நேரம் சிரித்துக் கொண்டவன், பிறகு

“ஷ்.. அமைதி.. பிரின்சிபால் வந்துற போறார்.. “ என,

பிறகு முதலில் பேசிய மாணவனே மீண்டும்

“சார்.. உங்க வுட் பி .. என்ன பண்றாங்க.. ? இந்த ஊர் தானே?” என்று வினவ

“உங்களுக்கு எல்லாம் அவங்கள நல்லா தெரியும் “ என

இப்போது வகுப்பறையே ஆவலாக யார் என்று தெரிய காத்து இருந்தனர்.

“நம்ம மலர்விழி மேடம் தான் என் வருங்கால மனைவி “ என, இப்போது மீண்டும் ஒரு கூச்சல் கிளம்பியது..

“சார்.. அப்போ லவ் மேரேஜா.. “ என்று வினவ,

சற்று சிரிப்போடு “லவ் கம் அரேஞ்சுட் மேரேஜ்.. “ என்றவன் “ஸ்டுடென்ட்ஸ் .. போதும் .. என்னை பற்றிய விவரங்கள்.. .. நாம சப்ஜெக்ட் போகலாம்.. “ என்றவன், வழக்கம் போல், கிளாஸ் எடுக்க ஆரம்பித்தான்.

நாட்கள் ஒரு வகையில் வேகமாகவும், காதலர்களுக்கு எப்போதடா திருமண நாள் நெருங்கும் என ஏக்கமாகவும் நகர, மலர், செழியன் இருவரும் தங்கள் வேளையில் மும்மரமாகினர்.

அதிலும் செழியன் முக்கியமான சிலவற்றிற்கு மட்டும் மலரோடு சென்று பர்சேஸ் செய்து வர, மீதி நேரத்தில் தன் ரிசர்ச் வேலையை முடித்தான்.. என்னதான் எல்லோரிடமும் ஜம்பமாக முடித்து விடலாம் என்று சொல்லி இருந்தாலும், அது சற்று கஷ்டமே. எனவே வெகு மும்மரமாக அந்த வேலை முடித்தான்.

அவன் திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்னதாக ரிசெர்ச் வைவா நடக்க இருக்க, அன்றுதான் மலர் வீட்டில் எல்லோரும் ஊருக்கு செல்ல முடிவெடுத்து இருந்தனர்.

செழியன் வைவா முடித்து விட்டு, மலருக்கு தகவல் சொல்ல , எல்லோரிடமும் சந்தோஷமாக சொன்னவள் , தானும் மகிழ்ச்சியோடு சென்றாள்.

செழியனும் அந்த வார இறுதியில் ஊருக்கு செல்ல இருப்பதால், அவனின் தனிப்பட்ட தேவைகள் சிலவற்றிற்கான வேலைகள் அப்போது முடித்தான்..

முதலில் கயல் கல்யாணம் நல்லபடியாக நடக்க, அதற்கு செழியன் வீட்டாரும் வந்து இருந்தனர்.

அன்று முழுதும் மலரின் ஸ்பெஷல் அலங்காரத்தை ரசித்தவன், அவளின் பின்னாடியே சென்றான். அவன் நண்பர்கள் எல்லாம் கிண்டல் செய்ய, அதை எல்லாம் துடைத்து போட்டவனாக, மலரை ரசிப்பதை நிறுத்தவே இல்லை. அவ்வப்போது போனிலும் பேசினான்.

கயல் கல்யாணம், மறுவீடு எல்லாம் முடிய, அடுத்து மலரின் கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பமாகியது..

அவர்களுக்கான நாளும் வண்ணமயமாக புலர்ந்தது.. முதல் நாள் இரவு லேசான மழை பெய்து இருந்ததால், காலையில் விடியும்போதே வானவில் தோன்ற, அது அந்த வானமகளின் ஆசீர்வாதமாகவே அனைவருக்கும் தோன்றியது.

அழகான சிவப்பு வண்ண பட்டுடுத்தி , அளவான அதே சமயம் பொருத்தமான அணிகலன்களோடு மலர் நடந்து வர, செழியன் விழிகளில் ரசனை தோன்றியது.. யாரும் பார்ப்பதை பற்றி கவலைபாடாமல் தன்னவளை ரசித்தான்.

குறித்த நேரத்தில் மலரின் கழுத்தில் மாங்கல்யம் சூட்டி, தன்னவளாக்கி கொண்டான். இருவரின் காலேஜ்ஜில் இருந்து அனைவரும் ஊருக்கு வந்து இருக்க, அவர்களுக்காக அங்கே கல்யாண விருந்தோடு, மேலும் சில அயிட்டங்கள் சேர்த்து இருந்தனர். அதில் ஐஸ்கிரீமும இருக்க,  அதை சுற்றி பெரியவர், சிறியவர் பாரபட்சம் இல்லாமல் கூட்டம் மொய்த்து இருந்தது.

மதியத்திற்கு மேல் சற்று கூட்டம் குறைய, மலர், செழியன் இருவருக்கும் சற்று தனிமை கிடைத்தது.

தனிமையில் மலரின் கையில் ஒரு ஓவியம் செழியன் கொடுக்க, அதை பிரித்து பார்த்தவள் அசந்து போனாள்.

முதன் முதலில் காலேஜ் சென்ற அன்று அவள் ஸ்கூட்டியில் விழிகள் மட்டும் தெரிய, முகம் முழுதும் மூடி இருந்த நிலையில் மலரை வரைந்து இருந்தான்.. கீழே அன்றைய தேதியோடு இருக்க, அன்றைக்கே தான் அவன் மனதில் பதிந்து இருக்கோமா என்று வியந்து அவனை பார்க்க,

அவன் அதை பாடலாக பாடிக் காண்பித்தான்

“விழிகளிலே காதல் விழா ..

நடத்துகிறாள் சாகுந்தலா “

அவனின் பாடல் வரிகளில் பாவையவள் அவன் தோள் சாய, அவன் அவளை அணைத்தான்.. இந்த காட்சி அங்கிருந்த காமெரா கண்களில் பட்டு மிளிர்ந்தது..

இதை கண்ணால் கண்டவர்கள் அனைவரும் இந்த மகிழ்ச்சி என்றும் தொடர அவர்களை மனதார வாழ்த்தினர்..

ஹாய் பிரெண்ட்ஸ்... விழிகளிலே காதல் விழா தொடர்கதை இத்தோடு முடிந்தது.. ஒரு மிகபெரிய சாரி.. கடைசி அப்டேட் கொஞ்சம் டிலே ஆயிடுச்சு.. நம்ம மின்சார வாரியத்தின் மகிமையால் கடைசி நேரத்தில் அடிக்கும் போது ரொம்ப தாமதமாயிடுச்சு..

இந்த கதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைத்து வாசகர்கள், தொடர்ந்து கமெண்ட்ஸ் போட்ட மதுமிதா, ஆதர்வ், சாரு, சஜூ, பிரியா, ஸ்ரீஜயந்தி, தமிழ்தென்றல், சாஹித்யா, மகி, ஜான்சி , சில்சீ டீம், பிந்து, தேன்மொழி, சாந்தி வேறு யாரும் விடுபட்டு இருந்தால் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.. என்னை ஊக்கபடுத்தி ரியாக்ஷன் கொடுத்த அனைவருக்கும் நன்றி..

அடுத்த வாரம் “காதலான நேசமோ “ தொடரோடு உங்களை சந்திக்க வருகிறேன்.. புது தொடர் பற்றிய விவரங்கள் விரைவில் “

முற்றும்!

Episode # 45

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.