உன் முக தரிசனம் கிட்டாத
கொடிய நாட்களை
நாட் காட்டியினின்றே
அழித்திடப் போகின்றேன்.
என் வாழ்வின்
ஜீவனற்ற அந்த நாட்களை
எதற்கு அநாவசியமாய்
பத்திரப் படுத்திக் கொண்டு...
அன்றைய காலை மிகவும் இனிதாக விடிந்திருந்தது, வருடக்கணக்காக பழக்கமாகியிருந்த அதிகாலை விழிப்பு நிலையை நின்றுக் கொண்டு இரசித்தான் அவன். அந்த இனிய காற்றின் ஸ்பரிசம் அவன் முன்னுச்சி கேசத்தை உரிமையாய் கலைத்து, உடலை வருடி சிலிர்க்கச் செய்தது.
அவனது தொழிற்சாலை பணி நேரம் ஆரம்பிக்க இன்னும் சில மணித்துளிகள் இருக்க, செக்யூரிட்டி கேட் தாண்டி உள்ளே ஓட்டி வந்த காரை ஏற்கெனவே பார்க் செய்தவன் உற்சாகமாய், துள்ளலாய் வாயில் வரை வந்து உள்ளே செல்லாமல் அங்கேயே வெளியே நின்று விட்டிருந்தான். அதிகமாய் பெட்ரோல் மாசு சூழாத அந்த இயற்கையின் அதிகாலைக் காற்றை உள்ளூற இழுத்து சுவாசித்தான்.
இயற்கையே அனைத்திற்கும் ஆதார சக்தி, எத்தனை மிண்ணனு சாதனங்கள் வந்தாலென்ன? இயற்கையின் காற்றைப் போல் ஆகுமா? தாய்ப் பாலைப் போல இயற்கைக் காற்று தூயது, நலம் மட்டுமே பயப்பது அல்லவா?
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
நாம் பார்க்க இயற்கையில் கண் மூடி இலயித்து ஆழ்ந்திருக்கின்றவன் பெயர் ஜீவன் வரும் மாதம் 26 வயது நிறைவை எட்டப் போகின்றவன், அவன் தொழிற்சாலை ஒன்றின் முதலாளி என்று ஏற்கெனவே அறிந்துக் கொண்டோம். காற்றில் அசைவாடும் தன் அடர்ந்த சிகையைக் கோதிக் கொள்ளுகையில் அவனது ஆண்மை ததும்பும் தோற்றம் புலப்பட்டது. அலட்சியமான முக பாவனைகள் கொண்ட அந்த வசீகரன் உயரமோ ஆறடியை தொட்டு நின்றது. அவன் கோதுமை நிறத்தினன், அன்று அந்த ப்ளையின் ஸ்லிம் பிட் காட்டன் ஷர்ட்டில் தொடர்ந்த உடற்பயிற்சிகளால் முறுக்கேறியிருக்கும் அவனது கரங்களின் திரட்சி. மறைவுறாமல் வெளிப்பட்டன. ஜீவன் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்’ என்று தன்னுடைய தொழில் மற்றும் நட்பு வட்டத்தில் அழைக்கப் படுகின்றவன்.
யாரிடமும் எளிதில் பேசி பழகும் இனிமையானதொரு சுபாவத்தோடு கூட காணும் மறுநொடியே எதிரில் நிற்பவரை அளவிட்டு கணிக்கும் லாவகம் அவனில் இருந்தது. தனக்கு பிடித்தவருக்காக உயிரையும், உழைப்பையும் அர்ப்பணிக்க தயங்காதவன், அதே நேரம் தனக்கு தீமை செய்ய எண்ணுபவருக்கோ தயவு தாட்சன்யமின்றி எதிர் நடவடிக்கை எடுப்பவன். அப்படிப்பட்ட தருணங்களில் பொறுமை என்றால் என்ன விலை? என்று கேட்கின்றவன்.
தனக்கு மனதிற்கு சரியென பட்டதை பட்டவர்த்தனமாக பேசும் துணிச்சலும், தைரியமும் அவனுக்கு வாய்த்திருந்தது.அதுவே அவனைப் பற்றி பிறர் வியக்கவும் வழி வகுத்தது. அவனுடைய தொழில் குருவான ரூபனுக்கும் அவனுக்கும் ஏதாவது ஒன்றில் கருத்து மாறுபடுமானால் அது இது குறித்தாக மட்டுமே இருக்கும்.
உன்னைப் போலெல்லாம் மனசில நினைக்கிறதை சொல்லாம, செய்யாம எல்லாம் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. நான் நினைச்சதை உடனே செஞ்சாதான் எனக்கு திருப்தி என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று அவனிடமே பேசி முடித்து விடுவான்.
தனிப்பட்ட கொள்கைகளை பொறுத்தவரை தான் வலிமையானவனாக இருப்பது காப்பதற்கே அன்றி அழிக்கவன்று எனும் கொள்கை கொண்டவன்.வீட்டின் பெண்களிடம் மட்டுமன்று வெளியிலும் அதே கொள்கையை பின்பற்றுவதனால் ஆண் பெண் பேதமற்ற ஏராளமான நட்புக்களை வரமாய் பெற்றவன்.
எங்கு சென்றாலும் சிரிக்கவும் சிலிர்க்கவும் அவனோடு கூட ஒரு கூட்டம் இருக்கும். வேலை நேரத்தில் எவ்வளவு ப்ரொபஷனலோ வார இறுதிகளில் அவ்வளவு விளையாட்டுப் புத்தி. இன்னமும் கூட தன்னுடைய இயல்பை தன்னுடைய தொழிலுக்கு காவு கொடுக்காதவன்.
சொந்த தொழிற்சாலை என்றதும் கோடீஸ்வர குடும்பத்தின் வளர்ப்பு என்று எண்ணுதல் அவனை பொருத்தமட்டில் பொருந்தாது. அவர்கள் நடுத்தர மக்களாக இருந்து, தற்போது தொழிலதிபர்களாக உயர்ந்த குடும்பமாகும், அவர்களின் உற்றார் உறவினர்களின் கூற்றுப் படி புதுப்பணக்காரர்கள்.
குடும்பத்தில் வீட்டில் தாய் இந்திராவுக்கு அவன் கடைக்குட்டி செல்லப் பிள்ளை, அப்பா ராஜ் க்கும் கூட அவன் அப்படித்தான். எந்த வீட்டிலெல்லாம் தமக்கை எனும் உறவு உள்ளனவோ அந்த குடும்பத்தின் இளைய வாரிசுகளுக்கு அம்மா தவிர இன்னொரு தாயும் உண்டுமாம். அது போல ஜீவனின் இரண்டாம் தாயும் , தமக்கையுமான ஜாக்குலினுக்கும் அவன் இன்றும் சிறு பிள்ளைதான்.அவளோ திருமணமாகி கணவர் ராஜா மற்றும் மகன் பிரின்ஸோடு டெல்லியில் குடித்தனம். ஆனால், அலைபேசி, முக நூல் என்று எல்லாவித சமூக வலைதளங்களாலும் அக்காவும் தம்பியும் தூரத்தை நொடியாய் கடக்க தெரிந்தவர்கள்.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
உடல் நலக்குறைவும், சில தனிப்பட்ட நிலைகள்ய்ம் கூட தாமதத்தின் காரணம்.பெப்ருவரி மாதத்தில் முழுமூச்சாக கதையை தொடர்ந்து சீக்கிரம் முடிக்கும் அவா உள்ளது.
இறையருள் புரியட்டும் :)
நன்றிகள்
மிக்க நன்றிகள்மா
உங்கள் வாழ்த்து மிகவும் உற்சாகம் அளிக்கின்றது 😃
என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
Yes will soon meet u with next epi :)
நன்றி நட்புக்களே
அன்பு ❤️
மிக்க நன்றிகள் saaru :)
ஜீவன் சோ கியூட்...
ரெண்டும் கதவு சந்துல நின்னுகிட்டு என்னல்லம் பன்னுது.. ம்....
மிக்க நன்றி mahinagaraj
ஜீவன் க்யூட் என்று நீங்கள் சொன்னதாக திவ்யாவின் காதில் போட்டு வைத்துவிடுகிறேன் சரிதானே ;) ஹாஹா
இரண்டுமே கேடிகள் ,அதனால்தான் அத்தனை சேட்டையும் மீதியும் பார்க்கத்தானே போகிறோம் நன்றிகள் மா
உங்களைப் போலவே ஜீவா & திய்வா aia team டு புதியதொரு கதையில் சந்திக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்.
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி சிறப்பாக கதையை கொண்டு செல்ல முயலுகிறேன்.
கவிதையை பாராட்டியமைக்கு மற்றொருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
நன்றி நன்றி
மிக்க நன்றி V.Lakshmi :)
உங்கள் பாராட்டுக்கள் மிகவும் உற்சாகம் ஊட்டுகின்றன
மிக்க நன்றி SahithyRaj
உங்களோடு கூட நானும் ஜீவனின் காதலை ரசிக்க காத்திருக்கிறேன்
மிக்க நன்றி vitra
வாவ் அனிக்கா கதையை அநேக முறை வாசித்ததாக குறிப்பிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
உங்களைப்போல நானும் கூட அதை அனிக்கா ரூபன் அவர்கள் குடும்பத்தினர் கூடவே மறுபடி பயணிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
உங்களுடைய எதிர்பார்ப்பை சிறந்த முறையில் பூர்த்தி செய்ய முயல்கிறேன்.
என்னுடைய எழுத்தில் எங்கேனும் பிழைகள் காணப்பட்டால் நிச்சயமாக தெரிவியுங்கள்
உங்கள் கருத்து பகிர்வுக்கும், உற்சாகமுட்டுதலுக்கும் மிக்க நன்றிகள்
மிக்க நன்றி சசி
உங்கள் கருத்து பகிர்வு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களுடைய ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்:)