Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

கார் மேகங்கள் வானத்தில் ஊர்வலமாய் போக . .  இடியும் மின்னலும் ஊர்வலத்திற்க்கு பக்கவாத்தியங்களாய் தன் வேலையை செவ்வனேச் செய்தது.

ஆகாஷ் மற்றும் சாரு செல்வன் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். செல்வன் வீடு குறுகலான ரோட்டில் இருந்த்தால் காரை ரிவர்ஸ் எடுப்பது சற்று சிரமம். அதனால் மெயின் ரோட்டில் காரை பார்க் செய்துவிட்டு வந்திருந்தனர்.  

பல கேள்விகள் உழல அதன் தாக்கத்தினால் மௌனமாக நடந்தார்கள். “நாம திரும்ப யூ.எஸ் போயிடலாமா?” எனச் சாரு கேட்க

அவளின் குழம்பிய முகத்தை பார்த்து “இப்ப என்ன ஆச்சு . .முகத்துல இவ்ளோ டன் சோகம்?” என வினவினான். பின்பு தன் செல்போனில் எதையே தேட முற்பட்டவனாய் இருக்க . . .

“எனக்கு பயமா இருக்கு ஆகாஷ் . . உங்களுக்கு எதாவது . .” என முடிப்பதற்க்குள்

“ஹம்” என்றான் அவளின் பேச்சில் லயிக்காமல் தீவிர சிந்தனையிலேயே இருந்தான்.

“இல்ல. . . வந்து ” எதோ சொல்ல தெரியாத பயம் அவளை பிசைந்தது.

அவளின் உணர்வுகளை காணாதவனாய் “பயப்படற அளவு ஒண்ணுமில்ல” என முடித்தான்.

இயந்தரதனமாய் தலையாட்டினாள். அந்த நொடி பயங்கர சத்ததோடு இடி இடிக்க. . சட்டென அவளறியாமல் அவள் கைகள் அவனின் கையை பிடித்தது.

“கமான் சாரு . .என்னை பாத்துக்க தெரியாதா?” என அவளின் முந்தய  கேள்விக்கு இப்பொழுது பதில் வந்தது. அவனின் சிந்தனை நிலையை தெளிவாக காட்டியது.

அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே தான் சொல்வதை கேட்டாளா என அவளை நோக்க . .  அவளோ குழப்பத்துடன் “இதெல்லாம் விட்டுடலாமா?” என தயங்கிதயங்கி கேட்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“செயில்டிஷ்ஷா பிஹேவ் பண்ணாத சாரு . . ஒரு வேலைல இறங்கிட்டா அத முடிக்கணும். இங்க மட்டும் என் அசிஸ்டெண்ட் லியா இருந்திருந்தா எவ்வளோ கேட்டிருப்பா தெரியுமா?”

“செல்வனுக்கும் சுவாதிக்கும் என்ன கனெக்க்ஷன்? . . செல்வன் உண்மையிலேயே செத்துட்டானா இல்ல எதாவது டிராமாவா? . . .யு நோ ஷி இஸ் எ ஜீனியஸ் . .” என சொல்லி முடிப்பதற்குள்

அவன் கரத்தில் இருந்து தன் கரத்தை பட்டென எடுத்தவள்  எதுவும் சொல்லாமல் வேகமாக நடக்கவும் ஆரம்பித்தாள்.

அவளின் கோபம்தான் அவன் சொல்லிய வார்த்தைகளை புரிய வைக்க “ஷிட் என்ன உளறிட்ட ஆகாஷ்” என தன்னை தானே கடிந்துக் கொண்டான்.

அவளை வேகமாக பின் தொடர்ந்தவன் “சாரி சாரி டார்லிங் . . ரியலி வெரி சாரி” என்றான் மன்னிப்பு கேட்கும் பாவணையில்

“நான் உனக்கு எதாவது ஆகிடுமோனு தான் பயப்படறேன் . . நான் கோழை இல்ல” என்றாள் வெடுக்கென.

அவள் கைகளை  பற்றியவன் ”எனக்கு தெரியும்” என தொடர்ந்தவனை முடிக்க விடாமல் “அந்த லியாக்கு இந்த ஆகாஷ் இல்லன எத்தனையோ ஆகாஷ் சீனியரா கிடைக்கலாம். ஆனா எனக்கு நீ மட்டும்தான்டா” உடைந்து அழுதுவிட்டாள்.

“சாரி சாருமா இனிமே சத்தியமா இப்படி நடக்காது” என்றான்.

“அந்த ஜீனியஸ் லியாவ பரதநாட்டியத்துல ஒரு அபினயம் பிடிக்க சொல்லு. எப்பவும் கம்பேர் பண்ணாத” என சுள்ளென முகம் சிவக்க பேசினாள். அவளை சமாதானம் செய்ய முறபட்டு தோற்றான்.

சாரு ஆட்டே ஒன்றை நிறுத்தி இடத்தையும் சொல்லி ஏறி சென்றுவிட்டாள்.

ஆகாஷ் அவளை போனில் தொடர்பு கொள்ள முயற்ச்சிக்க  . . அவன் லைனை கட் செய்தாள்.

தன்னை கடிந்து கொள்வதை தவிர அந்த தருணத்தில் வேறு ஒன்றும் அவனால் செய்ய இயலவில்லை. ஆகாஷ் வேலையில் கவனம் செலுத்திவிட்டால் எல்லாவற்றையும் மறந்துவிடுவான். தான் என்ன பேசுகிறோம் என்பது உட்பட . . லியா இவனை நன்கு புரிந்தவள் என்பதால் சில தருணங்களில் அவள் எதையும் பேசமாட்டாள்.

காரை நோக்கி மெல்ல நடக்கலானான். மழையின் குழந்தைகளான தூரல் அவசரமாய் பூமியை நோக்கி பாய தொடங்கின. பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டபடி நிதானமாக நடந்தான்.

சுவாதி செல்வன் லியா என ஒவ்வொருவராக மனதிலிருந்து மறைய சாரு மட்டுமே இருந்தாள். அழகான வசீகரிக்கும் காதல் புன்னகையுடன்  கைக் கோர்த்தபடி அவனுடன் நடந்தாள். கண்திறந்தபடி கண்ட கனவில்.

புத்தமபுதியதாய் சாரல் துளிகள் அவன் முகத்தில் குத்தாத ஊசிகளாய் பட்டு தெரிக்க இன்பமாய் உணர்ந்தான். அலைபாயும் மனம் சற்று நிதானித்தது. மழை துளிகள் வானத்தை கிழித்து விடுதலைப் பெற்ற உணர்வோடு மகிழ்ச்சியாய் பூமியை தழுவியது.

சாரு சமாதானம் ஆகிவிடுவாள் ஆனால் அதற்கு முன் தனக்கு பெரும் பூசை உள்ளது  என்பது மட்டும் நிதர்சனம் என்பதை எண்ணியதும் அவன் முகத்தில் புன்னகை பூத்தது. தான் செய்த்தும் தவறு என்பதை அவன் உணராமல் இல்லை.

ரோட்டில் அனைவரும் வேகமாய் நனைந்தபடி சென்றுவிட ஆகாஷ் நிதானமாக நனைந்தபடி காரை நோக்கி நடந்தான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீMano hari 2018-11-15 17:29
Superb update :clap:
Excellent going
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீSubhasree 2018-11-15 20:33
Quoting Mano hari:
Superb update :clap:
Excellent going

Thank you so much Mano sis :-)
Reply | Reply with quote | Quote
+1 # இதயச் சிறையில் ஆயுள் கைதிAnjana 2018-11-15 14:47
Nice update.. akash ena irunthalum neenga epadi compare paniruka kudathu.. selvan yaar?? Ashramathil iranthavara?? Ena nadakuthu?? Antha english letters ena?? Waiting eagerly to read next ud
Reply | Reply with quote | Quote
# RE: இதயச் சிறையில் ஆயுள் கைதிSubhasree 2018-11-15 20:32
Quoting Anjana:
Nice update.. akash ena irunthalum neenga epadi compare paniruka kudathu.. selvan yaar?? Ashramathil iranthavara?? Ena nadakuthu?? Antha english letters ena?? Waiting eagerly to read next ud

Aama Anjana akash pannathu sari illa .Avarku punishment
Kuduthidlam. Ok va. thanks for your comment Anjana sis :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீJanaki 2018-11-15 13:02
Charu kovam nyamanathu.
Akash sir neenga compare Panna koodathu :angry:
very bad.
Charu love azhaga katringa Subha. :-)
English letters & akash move kaga eagerly waiting.
Oru doubt Selvan ashram la iranthu ponavara??
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீSubhasree 2018-11-15 20:30
Quoting Janaki:
Charu kovam nyamanathu.
Akash sir neenga compare Panna koodathu :angry:
very bad.
Charu love azhaga katringa Subha. :-)
English letters & akash move kaga eagerly waiting.
Oru doubt Selvan ashram la iranthu ponavara??

Yes Janaki Selvan ashram la iranthu ponavarthaan.
Thanks for your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீAdharvJo 2018-11-15 12:54
:dance: mazhai scene and sky oda dreams sema cool....saru return varuvadhu cute :D but avanga kovam pogalaiye ;-)

Subhashree Sis as always engalai-um serthu kulapi vittuttu porarre Mr Sky :sad: who is this Selvan?? Sky, solluramathiri is he alive :Q: Is swathi trying to trap Surya?? :o Something fishy!! vidunga brain-k over work kudukakudadhu….I will wait and see what happens next. thanks for this cute and interesting update :clap: :clap: Keep rocking. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீSubhasree 2018-11-15 20:28
Quoting AdharvJo:
:dance: mazhai scene and sky oda dreams sema cool....saru return varuvadhu cute :D but avanga kovam pogalaiye ;-)

Subhashree Sis as always engalai-um serthu kulapi vittuttu porarre Mr Sky :sad: who is this Selvan?? Sky, solluramathiri is he alive :Q: Is swathi trying to trap Surya?? :o Something fishy!! vidunga brain-k over work kudukakudadhu….I will wait and see what happens next. thanks for this cute and interesting update :clap: :clap: Keep rocking. (y)

Thank you Adharv Jo sis :-)
Ella kuzhapamum viraivil terum.
Reply | Reply with quote | Quote
+1 # ISAKRama 94 2018-11-15 12:48
Very interesting subhasree mam (y)
Reply | Reply with quote | Quote
# RE: ISAKSubhasree 2018-11-15 20:26
Quoting Rama 94:
Very interesting subhasree mam (y)

Thank you so much Rama sis :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீsaaru 2018-11-15 11:55
Nice update.. Saru MA over kovam nalathukila
:grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீSubhasree 2018-11-15 20:26
Quoting saaru:
Nice update.. Saru MA over kovam nalathukila
:grin:

Thanks a lot Saaru sis :-) for your comment.
Reply | Reply with quote | Quote
+1 # ISAK by SubashreeSahithyaraj 2018-11-15 11:31
Very interesting. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: ISAK by SubashreeSubhasree 2018-11-15 20:25
Quoting Sahithyaraj:
Very interesting. :clap:

Thanks a lot Sahithyaraj :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீDurgalakshmi 2018-11-15 10:51
Interesting epi mam :clap:
English letters clue akash
investigationku help aguma ? :Q:
Akash charu sandai a little bit sad aguthu sis
Samathanam panni veiga :lol:
Adutha Enna nadakum eagerly waiting.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 14 - சுபஸ்ரீSubhasree 2018-11-15 20:24
Quoting Durgalakshmi:
Interesting epi mam :clap:
English letters clue akash
investigationku help aguma ? :Q:
Akash charu sandai a little bit sad aguthu sis
Samathanam panni veiga :lol:
Adutha Enna nadakum eagerly waiting.

Thank you so much Durga sis
Viraivil teriyum .. nandri
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top