(Reading time: 10 - 19 minutes)

“ஆகாஷ் சார் மழையில நனையாதீங்க ஜலதோசம் பிடிச்சிகும்” என்ற குரல் கேட்டு திரும்பிய ஆகாஷின் அருகாமையில் ஆட்டோ வந்து நின்றது  “அம்மா சொல்ல சொன்னாங்க” என்ற இடைச் சொருகளையும் சேர்த்தே ஆட்டோ டிரைவர் சொன்னான்.  சாரு பின்னால் உட்கார்ந்து வேறு பக்கம் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டிருந்தாள்.

சரியென தலையசைத்தான் பதிலாக ஆகாஷ் எதையும் சொல்லவில்லை. மூன்றாம் மனிதர் முன் தங்கள் விஷயத்தை பேச வேண்டாம் என்ற எண்ணத்துடன். ஆட்டோவும் சென்றுவிட்டது.

சற்று நேரத்திற்கெல்லாம் கனவுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு சதுரகிரிக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தான். இதுதான் ஆகாஷ் யதார்த்தவாதி. மாலையில் சாரு வீட்டிற்கு சென்றான். அவள் இன்னமும் பாராமுகமாய் இருந்தாள்.

சாருவின் பெற்றோர் அவனோடு பேசிக் கொண்டிருந்தனர். “அங்கிள் நீங்க சுவாதிகிட்ட என்னை பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் . . நீங்களும் சாருவும் அவங்கள பாக்க வந்த மாதிரியே இருக்கட்டும்” அதன் பின்பு சுவாதியிடம் கேட்க வேண்டிய விஷயங்களைப் பற்றி பேசினான்.

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி எங்களுக்காக நீங்க எவ்வளோ கஷ்டப்பறீங்க. சுவாதி துடுக்கதனமா பேசற பொண்ணு . . அவ உங்ககிட்ட கோப்பட்டா தப்பா எடுத்துகாதீங்க . . எனக்காக மன்னிச்சிடுங்க” என கண்கலங்க பேசினார் சாரு அம்மா.

“ஐயோ ஆன்டி என்ன இப்படியெல்லாம் பேசிகிட்டு . .எனக்கு தெரியும் நீங்க கவலப்படாதீங்க” என அருகில் அமர்ந்து ஆறுதலாக பேசினான்.

“நான் சுவாதி ரூமை பாக்கலாமா? எதாவது க்ளு கிடைக்க வாய்ப்பிருக்கு அதான்” என தயக்கமாக கேட்டான்

“தாராளமா பாருங்க தம்பி . . சாரு கூடிட்டு போ” என்றார்

சாரு பேசாமல் முன்னே நடக்க பின்தொடர்ந்தான். சுவாதி ரூமை கையை காட்டிவிட்டு வெளியேற முற்பட்ட சாருவை “நில்லு சாரு” என்றான்.

“கடைசியா சுவாதி எப்ப இந்த ரூம்ல இருந்தா?”

ஆகாஷ் காலையில் நடந்த சண்டைக்கு மன்னிப்பு கேட்பான் என அவள் நினைத்திருக்க அவனே கடமையிலேயே கண்ணாக இருந்தான்.

“ரெண்டு வருஷம் முன்னாடி” அவளும் கடமை தவறாது பதிலளித்தாள்.

அவன் கண்கள் அறையை நோட்டமிட்டபடி இருந்தது. அறையில் சில குடும்ப உறுப்பினர் போட்டோகள் கடிகாரம் கேலண்டர் என சாதாரணமாகதான் இருந்தது.

“ஆசிரமம் போனதுக்கு அப்புறம் ஒருதடவைக் கூட வீட்டுக்கு வரலயா?”

“ம்கூம்” என தலையசைத்தாள்

பீரோவை திறந்து பார்க்க வேண்டும் என மனம் துடித்தாலும் பெண்ணின் அறையை இப்படி துலாவுவது ஏனோ சங்கடமாய் இருந்தது. அதிலும் தன் வருங்கால மனைவியின் அக்காள் அறை என்னும் போது இன்னும் நெருடலாய் இருந்தது.

“பீரோவ ஓபன் பண்ணு” என்றான்.

திறந்தாள். . முதல் மூன்று தட்டுகள் முழுவதும் ஆடைகள் அடுக்கி இருந்தன. அவற்றை அதிகம் குடையாமல் பார்த்தான். கீழ் தட்டில் சில காகிதங்கள் இறைந்து காணப்பட்டது. ஆகாஷ் அவற்றை எடுத்து பார்க்க ஸ்கூல் ஐடி காலேஜ் ஐடி கார்ட்  காலேஜ் பிராஜெக்ட் வொர்க் போன்றவைதான் இருந்தன.

சில கிரீடிங் கார்ட் இருந்தது. அவற்றை சாருவிடமிருந்து அனுப்பியவர்கள் யாரென தெரிந்துக் கொண்டான். லவ் பிரபோசல் கார்ட் ஒன்றும்  இருந்தது. அதில் பெயர் கையெழுத்து என எதுவுமில்லை. அது பெற்றுக் கொண்டதா அல்லது கொடுக்க வேண்டியதா என சாருவிறக்கும் தெரியவில்லை. 

அழுக்கான நோட்டு புத்தகம் ஒன்று காணப்பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். அதில் பெயர்களுடன் பர்த்டே வெட்டிங் டே என்பன போல இருந்தன. அப்படியே அவசியமில்லா விஷயங்கள் நிரம்பி இருந்தது.

“ச்சே” என அதை உள்ளே தொப்பென வைத்தான். அவன் வைத்த வேகத்தில் அது திறந்தபடி விழுந்தது. ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் ஆங்கில எழுத்துகள் கேபிடல் லெட்டரில் அந்த பேஜ் முழுவதும் எழுதி இருந்தது.

ஏதோ தோன்றியவனாய் “உன் அக்கா பிரெஞ்ச் கத்துகிறாளா? இல்ல வேற எதாவது லேங்வேஜ்” என அதை எடுத்து ஊன்று கவனித்தான்.

“இல்லையே . . தமிழ் இங்லீஷ் ஹிந்தி மட்டும்தான் தெரியும்”

அந்த ஆங்கில எழுத்துகள் வெறும் ஆறு பக்கங்கள் மட்டுமே இருந்தது.

“இதை நான் எடுத்துட்டு போறேன்”

“இதுல என்ன இருக்கு ஆகாஷ்?”

“தெரில பாக்கலாம்” என சிந்தனைவசப்பட்டவனாய் இருந்தான்.

மேலும் அவளின் சர்டிபிகேட்ஸ் போன்றவைதான் இருந்தது. உபயோகமாய் ஒன்றும் கிட்டவில்லை.

“வேற எதாவது உன் அக்காவோடது இருக்கா?”

“அக்கா இங்க இருந்தப்போ இந்த ரூமே அக்காவோடது. . இப்ப இந்த பீரோதுல எல்லாமே அடங்கிருக்கு” சோர்வாக சொன்னவளிடம் அவன் “கவலப்படாத அக்காவ எப்படியும் திரும்ப கூடிட்டு வந்திடலாம்” என்றான். நம்பிகைகை இல்லாமல் அவனை பார்த்தாள் சாரு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.