Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ரா

sushrutha

மாலை  மணி ஐந்தே முக்கால்  ஆனவுடன் ,இயல்பாய், இத்தனை  வருட பழக்கத்தில் ,மனம் விளக்கேற்றவேண்டுமே  என்று நினைக்க ,கோமதி மெதுவாக  எழுந்தார் .

மனதில் கொஞ்ச நாட்களாக வந்து ஒட்டிக்கொண்டிருந்த சோர்வு ,உடலையும் பாதிக்க ,அவருக்கு ஆயாசமாக  இருந்தது .

தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து  செய்து வரும் விஷயம் இது ,பாட்டி  பூரணிக்கு ,மாலை காபி  குடித்தவுடன் ,கை  கால்  அலம்பி ,இழைய  ,இழைய  தலையை  சீவி ,விளக்கு  ஏற்ற வேண்டும் .

வீட்டில் இருக்கும் பொடுசுகள் உட்பட ,அனைவருக்கும்  பொருந்தும் அந்த விதி ,ஏதாவது  ஒரு குட்டி  ,அடத்தில்  ,தலை பின்னாமல்  அழுதுகொண்டிருந்தால் ,சாணி குழியில் கொண்டு அமுக்கு என்று 

பயமுறு த்துவார் !

பாட்டிக்கு கட்டுப்பட்டு ,அப்புறம் அம்மாவுக்கு ஒரு உதவி என்று படி படியாக ,கற்று பழக்கமான ஒன்றை  ,இன்று வரை தவறாமல் செய்து வருகிறார் .

ஆனால் சமீப காலமாக ஒரு சலிப்பு ,

வழக்கமாக காலையும், மாலையும்  அவர் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி தெய்வத்தை வணங்கும்போது அவர் வைக்கும் ஒரே கோரிக்கை ,தன்  குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதே !

இப்போதோ தம் மக்கள்  வாழ்க்கையை நினைக்கும் போதே ,மனம் கனத்து  போகிறது ,இந்த பூஜை புனஸ்காரம் ,நியமம் என்று எல்லாவற்றிலும் நம்பிக்கை இழக்க  செய்தது .

இருந்தும் பல வருட பழக்கம் காரணமாக ,வாய் 'விளக்கே திருவிளக்கே ,வேந்தன் உடன்பிறப்பே 'எனும் விளக்கு போற்றி நாமவாளியை முணுமுணுக்க ,கை  விளக்கேற்றியது ,மனம் அதே பழைய நிலையில்   'ஏதும் மாற்றம் வாராதா ,அவள் வாழ்க்கை விடியாதா ',என்ற  நப்பாசையை கோரிக்கையாக வைத்தது !

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கண்ணாடியில்  தன்  முகத்தை  திருப்பி பார்த்த  சீதாவிற்கு ,கொஞ்சம் நிம்மதி  ஏற்பட்டது ,

இந்த ஒரு வாரத்தில் ,மருந்தும் ,ஒத்தடமும்  சேர்ந்து  ,அந்த கன்றலையும் ,வீக்கத்தையும்  பெருமளவு குறைந்திருந்தது ,இனி கொஞ்சம் டச்  அப்  செய்துகொண்டால் வேலைக்கு கூட செல்லலாம் .

பரவாயில்லை  அந்த டாக்டர் கொடுத்த மருந்து ,வெரி  எபக்ட்டிவ் என்று நினைக்கும்போதே ,

அவன் முகம் ஞாபகம் வந்தது ,குரலை உயர்த்தாமல் ,அதே சமயம்  உண்மை தனக்கு தெரியும் என்பதை அவன் நாசுக்காக உணர்த்தியதும் ,அதை பற்றி  அவள் பேச விரும்பவில்லை என்பதை கண்டுகொண்டதால் ,அதை கடந்து அவன்  மருந்தை கொடுத்ததும் ,அவள் மனதில் மறுபடி படம் போல் ஓடியது .

'சாரி டாக்டர் ,உண்மை எதையும் சொல்லும் நிலையில் நான் இல்லை ,அதை வெளியில் பகிரும் ஒரு நிலை வந்தால் கூட உங்களை நான் மறுபடி பார்க்கமாட்டேன் ,அதனால்  இந்த மானசீக சாரி மட்டுமே என்னால் முடிந்தது என்று நினைத்தபடியே ,அவள்  முகம் தாண்டி கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்திடம் அவள் உரைத்தாள் .

அப்போது தெரியவில்லை அவளுக்கு  ,வெகு சீக்கிரமே மறுபடியும் அவன் முன் போய்  நிற்பாள் என்று .

ன்  ரூமில்   வெளிச்சத்தை  அறவே  குறைக்க  கனத்த திரைசீலைகள் ,ஜன்னல்களை மறைத்த போதும் ,கசிந்த  சிறு  வெளிச்சமும் தன்னை  பாதிக்காது இருக்க கையை குறுக்கே போட்டு உறங்க முயற்சி செய்து கொண்டிருந்தான் ஆனந்தன் .

பெயரில் இருந்த ஆனந்தம்  வாழ்க்கையில் மருந்துக்கு கூட இல்லாததால் ,எதையும் யோசிக்க தோன்றாத ஒரு மரத்த  நிலையை அடைந்திருந்தான் .

அவனே   தன்  கம்பெனியில் கேட்டு வாங்கி இருந்த  நைட் டூட்டி ,முடிந்து இதோ இப்போது பகலில் சற்று படுத்து உறங்க  முயற்சி  செய்கிறான் .

ராத்திரியிலே  அவ்வளவு லேசாக வந்திராத உறக்கம் ,இப்போதும் போக்கு காட்டி கொண்டிருந்தது .

இருந்தும்  ராத்திரி கொட்ட கொட்ட விழித்திருப்பதற்கு பதில் வேலை செய்வது மேல் ,

அதேபோல்  பகலில் இங்கு வீட்டில் இருப்பதே ,இப்போதைய சூழ்நிலையில் மிக சிறந்தது ,

அப்போதுதான்  சீதா  இருக்கும் நேரத்தில் அவன் வீட்டில் இருக்க மாட்டான் ,

அந்த ஒரு  வழி மட்டுமே  நிம்மதிக்கான ஒரே வழி ,

ஒரு பக்கம் அவளை நினைத்தால் பாவமாக இருந்தது ,இந்த முறை  அவளுக்கு ரொம்ப பலமாகவே அடி  பட்டு விட்டது , ஒரு பக்கம் பூரா கன்னி போய்  விட்டது ,

எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் அது நடந்துவிட்டது 

இருந்தும்  அவள் இல்லையென்றால் அவன் நிலைமை என்னாவது ,

இன்னொருமுறை இது போல்  நேராமல் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் .

அப்போது  சட்டென்று குழந்தை பவியின்  அழுகுரல் கேட்க ,ஆயா எங்கே போய்விட்டது என்ற யோசனையுடன்  எழுந்து வெளியில் சென்றான் .

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Like Chitra Kailash's stories? Now you can read Chitra Kailash's full novels at Chillzee KiMo. No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ராsaaru 2018-12-23 06:42
Nice and cutel
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ராmahinagaraj 2018-12-21 11:07
கதை சுவரசியமா போகுது மேம்... :clap: :clap:
அடுத்து என்ன அடுத்து என்னனு செமையா இருக்கு...
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ராAdharvJo 2018-12-21 09:49
Ananndham illadha ananndhan and sita-k Ena connection :Q: pavam Dr sasi-kum enamathiri doubts irukkubut avara mathiri no heart feelings 😍😍 :D yarunuthan sollungale ;-) nice update chitra ma'am :clap: :clap: thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ராmadhumathi9 2018-12-21 07:05
:clap: nice epi. (y) innum kooduthalaana pages kodukka mudiyuma? waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ராchitra 2018-12-21 08:23
Thank you Madhu ,kattaayam kodukiren more pages , :yes:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top