Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ரா

sushrutha

வள் முகத்தில் தெரிந்த  சங்கடம் ,அவன் மனதை வருத்தம் கொள்ள வைத்தது ,அதை உடனடியாக  மாற்ற வேண்டும் என்றும் துடித்தது .

'எங்க  வில்லங்கமான கேள்வியை கேட்க வேண்டியது ,அப்புறம் அவளுக்கு வலிக்குதேன்னு  வருத்த  படவேண்டியது'என்று ஷிண்டே  இங்கே இருந்தால் கேட்ருப்பான்  என்றும் எண்ணி கொண்டான் .

கொஞ்சம்  மன  நிலையை மாற்ற ''இது என்ன செந்தில் காமெடி   ,மாப்பிள்ளை அவர் தான் ,ஆனா அவர் போட்ருக்கும்  சட்டை  என்னோடது  ..மாதிரியா ''என்றான்  அவள் முகத்தில் கண் வைத்தபடியே 

அவன் எதிர்பார்த்தபடியே  அவள் முகத்தில்  கீற்றாய்  ஒரு புன்னகை தோன்றி மறைந்தது 

''நீங்க  காமெடி  கிளிப்ஸ்  பார்ப்பீங்களா ''என்றாள் அதிசயமாய் 

''ஏன் ...அதில் என்ன இருக்கு ,ஹே நாங்களும்  மனுசங்க தான் ,பாரு ரெண்டு கால் ,ரெண்டு கை ,ஒரு தலை ,அதில் கொஞ்சமே கொஞ்சம் மூளை ,அதை மட்டும் தான் வாடகைக்கு விடறது ,மிட்சம்  எல்லாம்  சேம்  டு சேம் ,நாங்களும் மூவீஸ்  போவோம் ,காமெடி கிளிப்ஸ்  பாப்போம் ,செந்திலை விட வடிவேலு  ரொம்ப பிடிக்கும் ,அக்கா குழந்தை  கூட  கார்ட்டூன் பார்ப்பேன் ''எனும்  போதே அடடா  மறுபடி அக்காவில்  கொண்டு வந்து நிறுத்திட்டேனா  என்று நாக்கை கடித்துக்கொண்டான் .

அதை  ஒட்டியே அவள் முகத்தில் தோன்றிய புன்னகை மறைந்து ,சிந்தனை படர்ந்தது .

அவள் விஷயத்தில் அவன் கொஞ்சம் கூடவே அக்கறை எடுத்துக்கொள்கிறான்  என்று நினைப்பாளோ ,என்று ஒரு மனமும் ...நினைக்கட்டுமே  ..என்று ஒரு மனமும் வேண்ட கண்டான் .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கூடவே அவன் தரப்பு நிலையை சொல்ல விரும்பி 

''சீ ..பொதுவா  எங்ககிட்ட  வரவங்ககிட்ட  அவங்க  பேச பேச  தான் எங்களுக்கு  விவரம் புரியும் ,அவங்களுக்கு வயித்தியம்  பார்க்கவும் சரியா இருக்கும் ,சோ பொதுவா ,சின்னதோ  ,பெரிசோ  எதுவா இருந்தாலும் சொல்ல சொல்லி கேட்போம் ,அப்போதான் எங்களுக்கு தி  புல்  பிக்சர்  கிடைக்கும் ,அவங்க நிலைமையும் புரியும் ,

ஆனா அப்படி சொல்ற  விசயம்  எங்களை தாண்டி எங்கயும் போகாது ,இன்பாக்ட்  அந்த நபர்  முடிச்சிட்டு வெளிய போகும் போது ,நாங்களும் மனதளவில் அந்த விசயத்தை  முடிச்சிடுவோம் ,

பட்  உங்க விசயத்தில்  ,உங்க சூழ்நிலை  உங்களை பேச விடலை ,என்னாலும்  அதை கடந்து போக முடியலை ,சோ சொல்லலாம்னா சொல்லுங்க ''என்று தன்  தரப்பை அவள் முன்  வைத்தான் .

அவன் கையில் இருந்த குழந்தை ,அவன் விரல்களில் ஒன்றை அதன் வாயில் வைத்து சப்ப பார்த்தது .

தன்  விரல்  அதன் வாயில்  போகாதவாறு  மாற்றி குழந்தையை வைத்துக்கொண்டு ,அக்கா மகளை  பார்க்க அது அமைதியாய்  விளையாடி கொண்டிருந்தது .

அவள் கவனமும்  விளையாடி கொண்டிருந்த குழந்தை மேல் தான் இருந்தது ,அவன் பக்கம் திரும்பாமலே 

''என் கதை  ரொம்ப பெருசு ,அண்ட்  கடி ,பாவம் நீங்க உங்க அக்கா குட்டியோட சேர்ந்து  விளையாடுங்க ,பாவம் அது தனியா  விளையாடுது ''என்றாள் 

''அவள் தனியா  விளையாடுவாள் ,ஒன்னும் ப்ரொப்லெம்  இல்ல ,நீங்க சொல்லலாம்னா  சொல்லுங்க ,ஐ  அம்  ஆல் இயர்ஸ் ''என்றான் மென்மையாக 

அவளுக்குமே  தனியாக  இதை சுமந்து அலுத்து தான் போயிருந்தது ,அவனிடம் சொன்னால் தான் என்ன என்று தோன்ற மெல்ல ஆரம்பித்தாள் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

''என் சிஸ்டர்  பேரு  சீமா , என்ன விட  ரெண்டு வயசு கம்மி ,ஆனா  என்ன விட குள்ளமா ,கொஞ்சம்  குண்டா இருப்பா ,சோ பாக்கிறவங்க  எல்லாம் அவ அக்காவா  ன்னு கேட்பாங்க ,அதில் அவளுக்கு செம எரிச்சல் வரும் ,அதான் அப்போ அப்போ அவளை வெறுப்பேத்த  அக்கா ன்னு  கூப்பிடுவேன் ,அப்போல்லாம்  நினைச்சதே  இல்லை  ,அதை  இப்படி ஒரு காரணத்திற்கு  தொடருவேன்ன்னு ''என்று அவள் நிறுத்த 

அவனுக்கு புரிந்தது ,அதுவும் அன்று போல் இல்லாமல் ,இன்று அவள் இயல்பாக பேச ,அவள் முகத்தில் அத்தனை  உணர்ச்சிகளும் மாறி மாறி வர கண்டான் .

''எல்லாத்திளயும்  என்னோடு போட்டி போடுவா ,பூவா இருந்தா கூட  அவளுக்கு கொஞ்சம்  அதிகம் வேணும் ,நிறையவும் வேணும் ,முதலையும் வேணும் ,அவளுக்கு கொடுக்காம  எனக்கு  கொடுத்துட்டா  அப்புறம் அதை அவள் தொட கூட மாட்டா ,

பசி பொறுக்க மாட்டா ,ஆனா இப்படி எதாவது ஆச்சுன்னா ,கொலை  பட்டினி கிடக்க  அவளால் முடியும் ,எல்லாத்திலையும்  அவசரம் ,கல்யாணமும்  முதலில்  பண்ணறாப்புல ஆகி போச்சு !,

நான்  டிகிரி முடிச்சு ,பி எட் முடிச்சு ,வேலையில்  சேர்ந்த போது ,அவளும் வேலையில்  சேர்ந்தா ,ஆறே மாசத்தில்  கூட ஒர்க் பண்ண ஆனந்தன்  மேல் காதல் ,அவள் எப்பயுமே காதல் கல்யாணம் தான் பண்ணிப்பேன்னு சொல்வா ,அதுக்கு காரணம் என் அப்பா ''

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Like Chitra Kailash's stories? Now you can read Chitra Kailash's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ராAdharvJo 2019-04-07 16:35
chitra ma'am sema epi :D :clap: :clap: I liked the your inclusion of padaiyappa dialogue :lol: very graceful and lively ovvaru moment rombha azhga minute attention kuduthu capture seithu irukinga :hatsoff: :cool: look forward to read next update. thank you and keep rocking.!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ராsaaru 2019-03-29 22:01
Nice update chithu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ராSahithyaraj 2019-03-29 10:38
Unexpected and a totally different flash back. :hatsoff: moving the story in an interesting way. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ராSrivi 2019-03-29 06:37
Sema ponga.. Finally the cat is out of the bag.. Very interesting..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ராmadhumathi9 2019-03-29 06:29
:clap: nice epi.kathaiyai padikka miga aarvamaaga irukku. (y) :clap: :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top