Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 07 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 07 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

ண்ணாமூச்சி ஆட்டமாய் கதை நகர்ந்து செல்ல, என்ன தான் அடுத்து நடக்கும் என்று அமுதன் தொடர்ந்து வாசித்துக்கொண்டு இருந்தான்.

வெள்ளைத்தாமரை இதழ்-6     இதோ ஒரு காதல் கதை  பகுதி-6

வாசலில் சத்யாவின் குரல் கேட்கவுமே ரம்யா திடுகிட்டாள்.

ரம்யாவின் அம்மா " வா சத்யா, இப்ப தான் போன் பேசின, அதுக்குள்ள வீட்டுக்கே வந்திட்ட.?" கண்ணாலே சைகை காட்டி சத்யாவைக்  கெஞ்சிக் கொண்டு இருந்தாள் ரம்யா.

ஆமா ஆன்ட்டி, புக் வாங்க ரெடியா இருன்னு சொல்லதான் போன் பண்ணேன்.  இப்பவே இவளை கூட்டிட்டு போகலாம்னு வண்டில வந்தேன் அதான்  சீக்கிரமா வரமுடிஞ்சது.

சரி சரி நான் டீ போட்டு தரேன். குடிச்சிட்டு போங்க. வண்டிய கவனமா ஒட்டு சத்யா!

சரி ஆன்ட்டி.!

அம்மா உள்ளே சென்றதும்,

ஹே ரம்யா நான் எப்படி உனக்கு போன் போட்டேன். ? என்றாள் சத்யா மெல்லிய குரலில்

சாரிடி அந்த பிளாங் கால் ராஸ்கல் தான் டி..

என்ன பண்றதுன்னு தெரியாம நீதான் கால் பண்ணேன்னு சொல்லிட்டேன். நல்லவேளை நீயும் என் சிக்னலைப் புரிஞ்சிட்டு அம்மாவை சமாளிச்சிட்ட!

சரி எப்படியாவது இத நிறுத்தனும்.

ஆமா சத்யா! அம்மா சந்தேகப்பட்டா   நான் காலி.

அம்மா வரவே, பேச்சை நிறுத்தினர். இந்தாங்க டீ ! பிஸ்கட் ரெண்டு சாப்பிடு சத்யா. இருவரும் டீ குடித்து விட்டுக்  கிளம்பினர்.

வண்டி கிளம்பவும்,  ரம்யா தனது போன் கால் தொல்லையை சத்யாவிடம் புலம்ப  ஆரம்பித்தாள்.

ரம்மி, உன் சொந்தக்கார பையன் யாரோ உன் கூட படிக்கிறான்னு சொன்னியே! அவன்கிட்ட சொல்லலாம்ல.

இல்ல சத்யா! என்னக்கு சந்தேகமே அவன் பிரெண்ட் மேல தான்! அவன் கிட்ட எப்படி சொல்றதாம்? என்ன தான் பண்றதுனே எனக்குப் புரியல?

இன்னொரு தடவை கால் வருதா பாரு? வந்தா என்ன பண்றதுன்னு யோசிப்போம்.

சரி பார்ப்போம்டி என்று சலிப்புடன் சொன்னாள் ரம்யா

வீடு வந்து சேர்ந்ததும், டிவி ஆன் செய்தால், சன் மியூசிக் சேனலில் "வேணா வேணா விழுந்துடிவேனா ", அந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும் உள்ளே ஒரு தடுமாற்றம். கெமிஸ்ட்ரி லேப் நோட்டினை  எடுத்துப் பார்த்தால் கால்குலேசன் எல்லாம் தப்பு போல தோன்றியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

புத்தகப்பையில் இருந்து கால்குலேட்டரை எடுக்கும் போது, உள்ளே ஒரு வெள்ளைக் காகிதம் மடித்து வைத்திருந்தது. 

" படபடக்கும் பட்டாம்பூச்சி சிறகுகள் உன் விழிகள் 

தடதடவென நீ இமைத்தால் உயிரில் ஆயிரம் வலிகள்"

பேப்பரை வேகமாக காலேஜ் பேக்கில் உள்ளே தள்ளினாள். என்னடா இது ஒரு நாள்ல எத்தனை ஷாக்? கீதாதானே இன்னிக்கு என்கிட்டே கால்குலேட்டரை வாங்கினா! யார் இதுக்குள்ள இப்படி எழுதி வச்சது?அவளுக்கு இருக்கு நாளைக்கு! என்ன பண்றேன் பாரு அவளை!

கீதாவைப் புடிச்சு  நல்லா திட்டனும். நாளைக்கு முதல் வேலை இதுதான். அதற்கு அப்புறம் கெமிஸ்ட்ரி லேப் நோட்டில் கவனம் செல்லவில்லை. இப்படி கவிதை எழுதினது யார் யார்  என்றே அவள்  மனம் எண்ணமிட்டது.  திரும்பவும் பையினுள் கையை விட்டு அந்தக் காகித்தை எடுக்கத் துழாவினாள் . மறுகணமே அது தவறு என்றும் ஒரு குரல் சொல்லியது. இது சரியில்லை பெண்ணே! நீ போட்ட சபதம் என்னாச்சு?மனசை அலைபாயவிடாதே!ஒழுங்காப் படி படி படி! என்று தனக்குத் தானே சற்று சத்தமாகச்  சொல்லிக் கொண்டாள்.

என்ன ஒழுங்காப் படி படி படி ன்னு சொல்லிட்டு இருக்க. கேட்டுக் கொண்டே வந்தான் ரம்யாவின் தம்பி.

உன்னைத் தான் ஒழுங்காப் படின்னு சொன்னேன்.

நானே இப்போ தான் டியூஷன்ல இருந்து வரேன். திரும்பவும் நீ வேற ஆரம்பிக்கிற !

சும்மா சொன்னேன் ! வா சாப்பிடலாம். 

சாப்பிட்டுத் தூங்கச்  சென்றாலும், தூக்கம் வரவில்லை.  புரண்டு புரண்டு படுத்துவிட்டு, யார் போன் கால் பண்ணுவது, யார்  அப்படி எழுதியது என்று யோசித்து யோசித்து தன்னையும் அறியாமல் தூங்கிப்போனாள்.

மறு நாள், கல்லூரியில்.

குட் மார்னிங் ரம்யா!

ஹாய் கண்மணி!

என்ன ரம்யா எதோ யோசனைல இருக்க?

உன் முகமே ரொம்ப சீரியசா இருக்கு. அதுவும் காலங்கார்த்தால, புன்னகைக்கும் உன் பொன்முகம் எங்கே?

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 07 - பூர்ணிமா செண்பகமூர்த்திSrivi 2019-04-28 14:00
Sema interesting a irukku.. Exciting ..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 07 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-05-01 08:42
Thank you Srivi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 07 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-04-28 12:18
:clap: nice epi. :thnkx: interesting aaga irukku. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 07 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-05-01 08:42
Thank you Madhumathi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 07 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharvJo 2019-04-28 11:47
Pch ivalo easy aga escape agitangale ramya :D very interesting n suspense filled journey ma'am and lively narration :clap: :clap: :hatsoff:

Caller boy dhinesh thana :Q: nijamave Karthik letter vachi irupara :Q: curious to see what happens next. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 07 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-05-01 08:44
Thank you AdharvJo :thnkx: Hoping to meet your expectations in reading further episodes. Keep reading to know what happened next. Thanks for the comment!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top