Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame 

வன் நெருங்கி வர வர இவள் பின்னாடி நகர்ந்து சென்று சுவற்றோடு சுவராக நின்றாள். ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்குள் பந்தயக் குதிரை போல உள்ளம் தெறித்து ஓடினாலும், வெளியே பயத்தை மறைத்து அவனை எதிர்கொள்ள ஆயத்தமானாள்.

ஆனால் அவளை நெருங்கியவனோ அவளது ஆயத்தம் தேவையில்லை என்பது போல அவளின் முன் மண்டியிட்டு கரம் கூப்பி அவளை கெஞ்சலுடன் நோக்கினான்.

இதனை எதிர்பாராத சிகாவின் இதழ்களிலிருந்து பயம் மற்றும் கண்முன் நிகழ்வதை புரியாத தன்மையுடன் “ரஞ்சித்…..” என்ற எழுத்துகள் திக்கித்திணறி வெளியேறின.

“சிகா… உன்னை இங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்..! அபி எனக்குச் சித்தி மகள், சகோதரி உறவு.. கொஞ்சம் தூரத்துச்சொந்தம்.. மாலையிலேயே அவளுடன் உன்னைப் பார்த்தேன்.. நீயும் அபியும் தோழிகளென சித்தப்பா கூறினார்… சிகா.. கடந்த காலத்தில் நான் செய்த தவறுக்காக தயவுசெய்து என்னை மன்னித்துவிடு… உன்னிடம் மன்னிப்புக்கோரும் அருகதை கூட எனக்கு நிச்சயம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. உள்ளுக்குள் வஞ்சகமான எண்ணத்தை வைத்துக்கொண்டு வெளியில் நண்பனாக நடிக்கும் பழைய ரஞ்சித் நானல்ல.. ஒரு ஆபத்தான நீர்ச்சுழல் போல குறுகிய காலத்திற்குள் வாழ்க்கைப் போரட்டம் எனக்குப் பல பாடங்களைப் புகட்டிவிட்டது…” மேற்கொண்டு தொடர அவனுடைய கம்மிப்போன குரல் அவனை அனுமதிக்கவில்லை.

ஏனோ சிபியின் மனம் இளகிப்போனது. பெண்களை மலர்களோடும் முகில்களோடும் ஒப்பிட்டு கவி வடிப்பது அவர்களின் மென்மையைக் குறிப்பிட்டுத்தான் போலும்..! என்னதான் அவன் அவளுக்கு தீங்கு செய்ய முனைந்தவன் என்றாலும் அவனைக் கண்டும் காணாமல் கடந்துசெல்ல அவளால் இயலவில்லை.

மெல்லிய குரலில் “ரஞ்சித்… தவறு செய்தவர்கள் தன் தவறை உணர்ந்தாலே போதும்.. பிறரால் மன்னிக்கப்படுவதைக் காட்டிலும் மனசாட்சிக்கு முன் மண்டியிடுவதுதான் உண்மையான பரிகாரம். அதுமட்டுமின்றி என்னிடம் நீ மன்னிப்புக் கேட்பது என்னைப் பொறுத்தவரை அவசியமில்லாத ஒன்று. வழிப்போக்கர்களாக என் வாழ்க்கைப் பாதையில் என்னுடன் பயணிக்கும் அனைவரின் நிறை குறைகளை சீர்தூக்கி ஆலோசித்து தக்க தண்டனை தருவதற்கோ அல்லது மன்னித்து மறுவாழ்வு கொடுப்பதற்கோ நான் நீதிபதி அல்லவே..!” என்று ஆறுதல் சொல்லும் தொனியில் தொடங்கி இகழ்ச்சிக் குரலில் முடித்தாள் அவள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

வெளியில் அவனுடைய செய்கைகளால் பாதிக்கப்படாததைப் போல அவள் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அந்த நாளின் வலிகள் எட்டிப்பார்க்கத்தான் செய்தன. கர்ணா தக்க சமயத்தில் வந்திருக்காவிட்டால் இன்று அவளின் நிலை என்னவாகியிருக்கும்..? உற்ற நண்பன், உடன்பிறவா சகோதரனாக பாவித்தவன் இப்படிப் பாதகச்செயல் புரிய அஞ்சாதவன் என அவள் என்ன சொற்பனமா கண்டாள்..?!

“சிகா.. நீ என்ன வேண்டுமானாலும் என்னைச்சொல். முன்பே சொன்னதைப்போல மன்னிப்புக்கோரும் அருகதையைக் கூட இழந்தவன் நான்.. ஆனால் அன்றைக்கு இளமையின் வேகத்தில் உலக இயல்பை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.. சாதாரணமாக ஆணும் பெண்ணும் பேசினாலே காதல் என கதை கட்டிய சமுதாயத்தில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ…! அல்லது கல்லூரி என்றாலே காதல் நாடகங்களின் அரங்கேற்ற மேடை என பல கருத்தில்லா திரைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் போதித்ததன் விளைவோ என்னவோ..! ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்…’ என்ற திருக்குறளின் பொருள் புரியாமையின் தாக்கமோ என்னவோ..! என் உடன் இருந்தவர்கள் நீ இயல்பாகப் பழகிய தன்மையை வேறுவிதமாகத் திரித்துக் கூறவும் பகுத்தறியப் பக்குவமின்றி தேவையில்லாத எண்ணங்களில் மனதைச் செலுத்திவிட்டேன்.. ஆனால் அன்று உன்னைக் காயப்படுத்தும் நோக்கத்துடன் நான் செயல்படவில்லை.. உன்னைப் பயமுறுத்தி எனக்குச் சாதகமான பதிலைப் பெற விளைந்தேன்.. அழகில், கல்வியில் சிறந்த நீ ஒரு சக தோழனாக எனைப் பாவித்து என்னிடம் பழகியதை தவறாக யூகித்துக்கொண்டு நல்ல நட்பினை இழந்தேன்.. அந்த நாளுக்குப் பின்னர், என் அன்னை கண்ணில் பெருகிய கண்ணீருடன் என்னிடம் கேட்ட கேள்விகளை அவள் மறைந்த பின்னரும் கூட இன்றும் என்னால் மறக்க முடியவில்லை சிகா.. ‘பாடுபட்டு உன்னைப் படிக்க வைத்ததற்கு இப்படிப்பட்ட அவப்பெயரைத் தேடிப் பரிசளித்து விட்டாயே..!’ என்ற அவள் குரல் இன்னும் என்னை வேதனைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.. கிட்டத்தட்ட மூன்றாம் பருவ (Third Semester) தேர்வுக்குள்ளாகவே தாயையும் இழந்து தந்தையையும் இழந்து விடுதியே வீடாக வாழ்ந்தேன்.. அப்போதே என் தவறுணர்ந்து உன்னிடம் மன்னிப்புக் கேட்க நான் விழைந்த போதிலும் தக்க சமயம் வாய்த்ததில்லை.. கவி அண்ணாவிடமிருந்து அவ்வப்போது வந்த மிரட்டல்கள் என்னைப் பின்வாங்க வைத்தன.. அதற்குப்பிறகு நான் செய்த செயலுக்காக மனப்பூர்வமாக வருத்தப்பட்டதைப் பலமுறை கவி அண்ணாவிடம் எடுத்துரைக்க முயற்சித்தும் ஏனோ இன்றுவரை அவரின் பார்வையில் சந்தேகத்திரை மட்டும் துளியும் மறையவில்லை... ஆனால் அவர் உன்னிடம் கொண்டிருந்த அன்பைக் கண்டு படிப்படியாக உண்மையான நேசம் யாதெனப் பொருள் உணர்ந்தேன்..! படிப்பு முடித்த பின்னர் சம்பாத்தியத்துக்கான வழி தேடித்தான் ரகுராம் அவர்களின் நிறுவன அலுவலகத்திற்கு வந்தேன்.. ஆனால் அங்கு வந்த பின்னர்தான் தெரிந்தது.. அவர் கவி அண்ணாவின் நண்பர் என்று..! எதிர்பாராத விதமாக உன்னையும் கவி அண்ணாவையும் அங்கு கண்டேன்.. என் வாழ்வின் மிகவும் தர்மசங்கடமான சந்திப்பு அது.. தெளிந்த நீர்க்குட்டையைக் கல் எறிந்து கலங்கலடையச் செய்ததுபோல உணர்ந்தேன்… போதும்… என்னால் இனி உனக்கு சிறு வேதனை கூட வேண்டாம் சிகா..” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான் வலியுடன் கூடிய குரலில்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாsaaru 2019-05-06 06:27
Nice and cute
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாabimahesh 2019-04-28 20:04
Nice update Mam! Hope Ranjith unmaiyalae thirunthitarnu.. Waiting for next update :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-29 07:37
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே-18-சந்யோகிதாRenuga siva 2019-04-28 15:48
Nice epi mam.ranjith really thirinthitana :Q:
Next enna nadakum.waiting for read more.
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே-18-சந்யோகிதாசந்யோகிதா 2019-04-29 07:38
நன்றி ரேணுகாசிவா ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாRanju 2019-04-28 15:25
Nice episode :clap: kavidhai superb :thnkx: next episode kaga eagerly waiting :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-29 07:38
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாSrivi 2019-04-28 14:07
Sweet and cute update sis..paapom Ranjith nallavara maarara enna nu paapom.. Sema nice ending to the episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-29 07:39
நன்றி ஸ்ரீவி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாmadhumathi9 2019-04-28 12:32
:clap: fantastic epi. :thnkx: :GL: adutha epiyaieppothu padippom endru irukku. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-29 07:40
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாAdharvJo 2019-04-28 12:03
:cool: and philosophical update ma'am 👏 👏👏 👏 very elegant flow but sad of ranjith good he realized and regret for his mistake. Hope he will find some peace in series :P

karna and sibi Oda moments give a pleasant feel to read and kavithaiyum super 👌👌👍 hope sibi will be out of this trauma :-) look forward to read next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 18 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-29 07:40
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top