Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame 

கொடிய வெயிலின் தாக்கம் முகிலின் சிறுமழைத்தூரலில் காணாமல் போவதுபோல சில ஆண்டுகளாக சிபியின் மனதை உறுத்திக்கொண்டிருந்த நினைவுகள் கர்ணாவின் உயிர்க்காதலால் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.

பொதுவாக இயற்கையாக கனியும் கனிகள் இயல்பிலேயே சுவை மிகுந்தவையாக இருக்கும். அதுபோலவே மனித வாழ்வில் சுவை கூட்டும் நிகழ்வாக திகழும் காதல் மலரும் தருணமும் எவ்வித வினையூக்கியும் இன்றி வினைப்பயன் எதையும் எதிர்பாராமல் இருளைக் கிழித்து ஒளிரும் விடியலாக அமைந்தால் பாவவினை தீர்க்கும் இப்பிறப்பும் புண்ணிய தீர்த்தமாகும். அப்படிப்பட்ட காதல் எத்தகைய தருணத்தில் தன் வாழ்வில் மலர்ந்ததென ஆராய்ந்து கொண்டிருந்தாள் சிபி.

தொலைதூர பசுமை நீ..!

ஏக்கம் தரும் பகல் நிலவு நீ..!

கையில் சேரா கனவு நீ..!

கண்ணில் கோர்க்கும் நீர் நீ..!

கவனம் மறந்த நேரமதில்

என் நெஞ்சம் திருடி

மறைந்த கள்வன் நீ..!

ஏககாலமும் என் எண்ணம் நீ..!

என் காத்திருப்புகளும்

கனவுகளும் உன் கைவசத்தில்

உன் சுவாசம் என் உயிராக

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

உன் பார்வை என் வழியாக

உன் சொல் என் கவியாக

என் அன்புக்கடல் நீயாக

ஆரவாரமின்றி அமைதியில்

அருட்தவம் புரிகிறேன் நான்..!

எவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருந்த கர்ணாவின் எதிரே அமர்ந்துகொண்டு அவன் முகத்தை மொய்த்துக்கொண்டிருந்ததோ அவள் விழிகள்..! அவன் திரும்பிப்படுக்க எத்தனிக்கையில் எதிரே சிபி இருப்பதைக் கவனித்தவன் தன் தூக்கத்தைத் தொலைத்தான்.

அவளைக் கைகாட்டி தன்னருகில் அழைத்தவன், “சிபி….. நீ தூங்கவில்லையா..? உடம்புக்கு ஏதேனும் செய்கிறதா..?” என பதட்டத்துடன் அவள் நெற்றியில் கை வைத்துப்பார்க்க வெப்பநிலை இயல்பானதாகவே இருந்தது.

என்ன காரணம்..? என யோசித்தவன், “இன்னும் என் மேல் உனக்கு கோபம் தெளியவில்லையா சிபி..? நான்தான் சொன்னேனே.. என்னுடைய நிலையிலிருந்து நீ………….” அவன் முடிப்பதற்குள் அவனுடைய இதழைத் தாளிட்டிருந்தது அவளுடைய ஆள்காட்டி விரல்.

அவன் படுத்திருந்த அந்த நீளிருக்கையின் அருகில் தரையில் அமர்ந்திருந்தவள் “ஷ்.. பழைய கசப்பான நினைவுகளை இனிமேல் மறந்தும் கூட பேசவேண்டாம் கர்ணா… வேறு ஏதாவது பேசுங்கள்..” என மன்னிப்புடன் மொழிய

அவள் விரல்களுக்கு இதழால் பரிசளித்தவன் கொஞ்சம் முன்னேறிச்செல்ல, கதிரவன் விடைபெறும் நேரத்தில் நிலம் நோக்கும் சூரியகாந்தி மலரைப்போல நாணத்தால் தன் கரத்தை அவனிடமிருந்து விடுவித்துத் தலைகுனிந்தாள்.

“சிபி.. இப்போதே சொல்லிவிட்டேன்.. நீ இப்படி வெட்கப்பட்டால் அப்புறம் எதற்கும் நான் பொறுப்பல்ல..” என மந்தகாச புன்னகையுடன் சற்று அவளை நோக்கிக் குனிய, பெண்ணவள்  நாணவேகத்துடன் எழுந்து அவனறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவளது நாணம் கண்டு மலர்ந்தவன், “ஏய்… ஏன் டீ என்னைப் படுத்துகிறாய்… நான் பாட்டுக்கு சிவனே என்று தூங்கிக்கொண்டிருந்தேன்… வலிய வந்து வம்பு செய்துவிட்டு….. எல்லாம் என் நேரம்..! சீக்கிரம் கிளம்பி வா… நம் வீட்டுக்கு போகலாம்..” என அவளுக்கு கேட்கும் வண்ணம் உரக்கக் கத்தினான்.

 “உங்கள் வீட்டிற்கு அழைத்துப்போக வேறு ஆளைப்பாருங்கள்.. நான் அபியின் திருமணத்திற்குச் செல்ல வேண்டும்.. ஏன் இன்னும் வரவில்லை என்று இப்போதே தினமும் கேள்வி கேட்டே எனைக் கொல்கிறாள்.. அதுமட்டுமின்றி உங்கள் வீட்டிற்கு என் பெற்றோரின் சம்மதமின்றி வர எனக்கு மனமில்லை..” உரக்க ஆரம்பித்து சற்று கம்மலான குரலில் முடித்தாள்.

அவளுடைய உணர்வுகளை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. உடன் படித்த தோழி என ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டவள் தற்போது தாரமாகப் போகிறவள் என்று மாற்றப்பட்டால் அவனுடைய குடும்பத்தினரின் மத்தியில் அவளைப்பற்றிய எண்ணம் என்னவாக இருக்கும்..?

அடுத்த அரைமணி நேரத்தில் எந்தவித ஒப்பனையுமின்றி புதுமலராக தயாராகி வந்தவளைக் கண்டு மீண்டும் மனம் தடுமாறிப்போனான் கர்ணா. அவனுடைய பார்வையில் தடுமாற்றத்தைக் கண்டவள் புன்னகையுடன் “கர்ணா.. நான் அபியுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.. விரைவில் தயாராகி வாருங்கள்.. எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது…” என சொல்லிவிட்டு கைபேசியை நோண்ட ஆரம்பித்துவிட்டாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாAbiMahesh 2019-04-09 21:24
Nice update Mam.. Poetic way of narrating the Story is very nice :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:46
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாsaaru 2019-04-08 13:25
Nice update dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:47
நன்றி சாரு ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாAdharvJo 2019-04-07 14:48
:dance: super cool epis ma'am :clap: :clap: rombha rombha pleasant ana journey very poetic :hatsoff: Sibi and karna oda indha bonding simply soulful loved it :dance: Karna oda maturity and thought process wow :hatsoff:

kalam!! Appadi ena plan panikittu irukkun therindhu kola waiting :yes: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:48
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாmadhumathi9 2019-04-07 13:28
:clap: nice epi. (y) :thnkx: 4 this epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:49
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாRanju 2019-04-07 12:52
Superb episode.... Aduthu enna nadakum endru aavalaaga ullathu.. sanyogitha
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:49
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top