Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame 

ளவிடற்கரிய ஆற்றலைக் கொண்ட மனித எண்ணங்களைப் பாதுகாப்பாக பத்திரப்படுத்திட உள்ளம் என்னும் பாதுகாப்பான கவசத்தை மிக சிரத்தையுடன் படைத்திருப்பான் போலும் இறைவன்..!

ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் எத்தனை விதவிதமான எண்ணங்கள் மிக மிக பத்திரமாக புதைக்கப்பட்டுள்ளன..! பிறரறியா வண்ணம், பிறர் திருடாத வண்ணம் எத்துணை உறுதியான முகவரி தெரியாத பாதுகாப்புக்கோட்டை..!

ஒரு சில நேரங்களில் இக்கோட்டை மானுடர்களுக்கு சுதந்திர உணர்வையும், தற்காப்பு கலையையும் பரிசாகத் தந்து செல்கின்றது.

ஆனால் சில நேரங்களில் இந்த பாதுகாப்புக்கோட்டையில் சிறிது பழுதுகளும் உடைப்புக்களும் ஏற்பட்டால் என்ன..? என யோசிக்கவும் வைக்கிறது விதி.

இன்றைய காலத்தில் உண்மையான அன்பை மிக மோசமான முறையில் தோற்கடிக்கும் வகையில் மிகப்பெரும் அழிசக்தி ஆயுதமாய் வளர்ந்து நிற்கிறது புரிதலின்மை..! அதற்குக் காரணம் கூட மனதின் எண்ணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிழை எனச்சொல்லலாம்.

நேசிக்கும் நபரிடம் மட்டும் மெளனமொழியாக தான் கொண்ட அன்பை அறிவிக்கவும், புரிந்து கொள்ளவும், உளவியல் ரீதியான அந்தரங்கக் கருத்துக்களைப் பிறரறியாத முறையில் பரிமாற்றவும் இக்கோட்டை வாய்ப்புக்கொடுத்திருந்தால் எத்துணை சிறப்பாக இருந்திருக்கும்..?

மேலும், உண்மைக்காதலை உரிமை கொண்ட நெஞ்சம், தொடுவானத்தின் தொலைவில் இருந்தாலும், தொடக்கூடிய தொலைவில் இருந்தாலும்  உரிய நேசம் தங்கு தடையின்றி அதில் தஞ்சம் புகுந்திடுமல்லவா..!

இடையில் இணையம் எதற்கு..? தொழில்நுட்பம் எதற்கு..? என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதன்மூலம் இயற்கை எழிலை செதுக்க முடியாதல்லவா..? அவ்வாறு இருக்கையில் இதய மண்ணில் இயற்கையாக விளையும் காதற்பயிரை எந்த அளவிற்கு தொழில் நுட்பத்தால் உள்ளது உள்ளபடி வெளிக்கொணர இயலும்..?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆனால் தான் படைத்த மனிதர்களிடத்தில் தனக்கு மட்டுமே அறிந்த சில ரகசியங்கள் இருக்க வேண்டுமென கடவுள் தன் உடமை மீது பேரார்வம் (Possessiveness) கொண்டதன் பயனாக இந்த பாதுகாப்புக்கோட்டை அவனால் கட்டப்பட்டதோ என்னவோ..?! மானிடனால் அறிந்துகொள்ள முடியாத எத்தனையோ மர்மங்களுள் இதுவும் ஒன்று.

இறைவனின் திருவிளையாடலாக, கவிவர்ணாவும் சிகாவும் இந்த பாதுகாப்புக்கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்டு வெளிவரவும் முடியாமல், உள்ளிருந்து மகிழவும் முடியாமல் தத்தளித்தனர்.

திடீரென தன் கையைப் பற்றிய கவிவர்ணாவின் வலிய கரங்களின் தீண்டலைத் தாளமுடியாமல் அவனிடமிருந்து தன் கரத்தை வெடுக்கென இழுத்தாள் சிகா.

“சிபி.. என்ன இது..? சிறுபிள்ளை போல நடுவீதியில் விளையாட்டு..?” என்று கண்டிப்புடன் அவளை விடுவித்தான்.

கவிவர்ணாவின் தீண்டலை விட அவனின் சிபி என்ற அழைப்பு அவளை நொடிக்குள் கட்டுப்படுத்தியது. மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போல, தன் கரம் விடுவிக்கப்பட்டும் நிலம் நோக்கி நின்றாள் அவள்.

“சிபி.. என்னைப்பார்.. என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு, கைபேசியையும் அணைத்துப்போடும் அளவிற்கு என்ன நடந்தது..? நான் ஏதாவது தவறிழைத்தேனா..?”

அவன் வார்த்தைகளில் சிதறிய வலி இவளைத் தாக்க, அவன் முகத்தை ஏறிட்டவள் அவன் விழிகளில் தன் விழிகளைச் சங்கமித்து நின்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

‘நீங்கள் தவறு இழைத்தீர்கள் என்று சொல்லும் தகுதியை எப்போதோ நான் இழந்துவிட்டேன்.. உங்களால் என் மனம் என்னிடம் இதுவரை நானறியாத புதுப்புதுக்கதைகளை சொல்கிறது.. ஆனால் அவையனைத்தும் அவைகளின் கற்பனையோ என அஞ்சி சூழ்நிலைகளிலிருந்து தப்பி ஓடுகிறேன் நான்.. விதிவசத்தால் அவைகளிடம் சிக்கினாலும் என் மனக்கண்ணின் கானல் என கருதுகிறேன்..! உங்கள் மீது நான் கொண்ட நேச உணர்வை என் நெஞ்சத்திலேயே பொக்கிசப்படுத்தவும் முடியாமல், உங்களிடம் வெளிப்படுத்தவும் முடியாமல் தடுமாறுகிறேன். என்னுள் பரிசுத்த அன்பாக கலந்த உங்களை நானெப்படி பிழையென மதிப்பிட முடியும்..?’

மனதினுள்ளே அவனோடு பேசியவளின் விழிகளில் மட்டும் அருவியாக கண்ணீர்கொட்ட, செய்வதறியாது திகைத்தான் கவிவர்ணா.

அவளுடைய பைகளை வாங்கிக்கொண்டு, என்னவோ ஏனோ என பதறிப்போய் சீருந்திற்கு அழைத்து வந்து முன்இருக்கையில் அவள் அமர ஆவன செய்தவன், “இந்தா கொஞ்சம் தண்ணீர் குடி" என்று தண்ணீர் கொடுத்தான்.

அவளுடைய கண்ணீரைக் கண்டவன், தான் செய்த செயல் எவ்வளவு தூரம் அவளைப் பாதித்திருக்கிறது என எண்ணி முன்னைவிட தன்னைத்தானே அதிகம் வெறுத்தான். தற்போது தான் கூறும் எந்த காரணங்களையும் ஏற்கக்கூடிய நிலையில் அவள் இல்லை என்பதாக எண்ணி அமைதியாக மேற்கொண்டு என்ன செய்வதென யோசிக்கத் தொடங்கியது அவனுள்ளம்.

கவிவர்ணாவின் அமைதியில் கரைந்தவள், 'பல சமயங்களில் கேட்காமலே என் தேவையை அறிந்து செயல்படும் இவர் இன்று என் கண்ணீருக்குக் கூட பதில் சொல்லவில்லை.. நிச்சயம் அவர் மனதில் நான் இல்லை.. அன்று நடந்தது ஏதோ ஒரு விபத்து.. என் காதல் விலை மறுத்த குப்பையாகிப்போனது.' என நினைத்து மாபெரும் யுத்தக்களமாக முடியாப் போரட்டம் தொடங்கியது அவள் மனதில்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதாsaaru 2019-03-14 18:06
Nice and cute
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-17 02:13
நன்றி சாரு ஜி :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதாRanju 2019-03-10 20:15
wow sanyogitha karna and sibi love superbbb.... Eppo rendu perum love ah solluvanga.... Waiting for next episode...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-10 20:54
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதாAdharvJo 2019-03-10 16:03
Ears sharp panadhu waste ah poche 😝😝
Lovely update ma'am 👏👏👏👏 romantic Hitler than :dance: boss ketka ethanai kelvi rukku adhai ellam vittu Nick name rombha mukiyama facepalm :D sikirama manasu vittu pesunga apro vada pochen feel.pana kudadhu kavi sir :P

:hatsoff: unga poem simply awesome 😍😍 loved each and word 👍 look forward to read next update.thank u and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-10 17:30
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதாmadhumathi9 2019-03-10 13:20
wow nkice epi.waiting to tead more. :thnkx: 4 this epi. :clap: (y) :GL:
Romba interesting aaga poguthu. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-10 17:29
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதாரவை 2019-03-10 12:54
உன் படைப்புகள் அனைத்தையும் படித்திடவேண்டும்!
என் பரவசம் பிரமிப்பினை உன்னிடம் சொல்லிடவேண்டும்!
பன்னிரு கரத்தோன் உனை வாழ்த்திடவேண்டும்!
பைந்தமிழ் காவியம் படைத்திடவேண்டும்!
சந்யோகிதா! உன் எழுத்துத் திறனை நிறைவாய் புகழ்ந்திட எனக்கு இன்னும் பல பிறவிகள் வேண்டும்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 12 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-10 17:28
நன்றி ரவை ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-12-சந்யோகிதாரேணுகா சிவா 2019-03-10 12:26
Nice mam.love proposeku waiting mam.marrageku 2 vitu layum k solluvanga la? :Q:
Waiting for next week mam.
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-12-சந்யோகிதாசந்யோகிதா 2019-03-10 17:27
நன்றி ரேணுகா சிவா ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top