Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame 

த்தனையோ உணர்வுகள் உள்ளத்தில் ஆழப்பொதிந்து கிடந்தாலும் அதனை எவ்வித பாதிப்புமின்றி   வெளிக்கொணர ஒரு சில உறவுகளால் மட்டுமே சாத்தியப்படுகிறது. உன்னதங்களும் உயரிய செயல்களும் அன்பினால் மட்டுமே அலங்கரிக்கப்படுகிறது. அன்பு பரிமாறப்படும்போதும் வெளிப்படுத்தப்படும்போதும் மட்டுமே அதன் அற்புதங்கள் ஆகாயம் தாண்டிய கோட்டைகளைக் கட்டும். மறைத்து வைத்த பொருள் மக்களுக்கு உதவுமோ..? மறைத்து வைத்த அன்பும் மண் மூடிய வைரமாகாதோ..? எத்தனையோ அற்புதங்களைப் படைத்த இறைவன், ஒரு சிலவற்றை படைக்க மறந்ததை தவறென்று அவனுக்கு உணர்த்துவதெப்படி..? துரத்திச்செல்லும் அருவி, சிறகுவிரித்துப் பறக்கும் பறவைகள், சிந்தை மயக்கும் நிலவுக்காற்று… என ஒவ்வொன்றிலும் இசையைக் கலந்தவன், உள்ளத்து உணர்வை ஒருவரிடத்தில் வெளிக்கொணரும்போது அதற்கேற்ற இன்னிசையும் கேட்போரின் செவியில் இசைக்கும் வண்ணம் படைக்க மறந்தது எதனாலோ..? வெறும் வாய்மொழியைக் காட்டிலும் இசையால் நிகழ்த்த முடியாத சாதனைகளும் இப்பூவுலகில் உண்டோ..?!!.. குறிப்பாக காதல்மொழியும் கவலை மறக்கச்செய்யும் இன்னிசையும் இரண்டறக் கலந்தால் இப்பூவுலகம் சொர்க்கமாகாதோ..?!

சில மணி நேரங்களில் மாப்பிள்ளை வீட்டார் வரப்போவதாக அறிவித்துச்சென்றாள் ராதா. கிட்டத்தட்ட வாழ்க்கையே முடிந்துவிட்டதான மனநிலையில் சிபி தவித்துக்கொண்டிருந்தாள். சில நொடிகள் அவளிடம் சப்தமின்றி அறிவுறுத்திக் கொண்டிருந்தன அவள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள…. இருக்காதா பின்னே..?! இவன்தான் தனக்கானவன், தன் கரம் பிடிப்பவன், எதிர்காலத்தைத் தன்னுடன் பகிர்பவன், தன்னிடத்தில் உரிமை கொண்டாடுபவன் என வாழ்வில் கிடைத்தற்கரிய பொக்கிசமாக ஒருவனை தன்னுள் அவள் புதைத்து வைத்திருக்க, திடீரென எதிர்பாராமல் இப்படியொரு நாடகம் அரங்கேறினால் என்ன செய்வாள் அவள்..?! இன்னும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவத்தின் அதிர்ச்சியே அவளுக்குள் வடியவில்லை.. இதற்குள்ளாக மற்றொரு பேரிடி..!

யாரோ முன்பின் அறியாத ஒருவனிடம், ஏற்கனவே களவு போயிருந்த உள்ளத்தை ஒப்படைக்கச்சொன்னால் என்ன செய்வாள் அவள்..? அலங்கார பொம்மையாக தன்னை அலங்கரித்துக்கொண்டு, விருந்தினர்களை வரவேற்று அவர்களிடம் தானாக வரவழைத்துக்கொண்ட புன்னகையை இதழ்களில் தவழவிட்டுக்கொண்டு, இறுதியில் நிலையற்ற அழகுக்காகவும், சேர்த்து வைத்த சொத்து மதிப்புக்காகவும் தன் விலைமதிப்பற்ற வாழ்க்கையை அடமானம் வைப்பது எவ்வகையில் நியாயம்? இதனைச் சொன்னால் சமுதாயம் காது கொடுத்துக் கேட்கக்கூடிய நிலையிலா உள்ளது..? மகிழ்ச்சியான வாழ்க்கைக்குப் பொருளாதார நிலை முக்கியம்தான். ஆனால் மகிழ்ச்சியின் அடிப்படை ஆதாரத்தையே தொலைத்துவிட்டு பொருளாதாரத்தைத் தேடி ஓடுவது நியாயம் இல்லையல்லவே..?!      

ரண்டு நாட்களுக்கு முன்னர், நினைவு முழுமையாகத் திரும்பியிருந்தது சிபிக்கு. சாந்தியின் மூலமாக என்ன நிகழ்ந்ததென தெரிந்து கொண்டவள் கர்ணாவின் நிலையறிய எழ முயல, முடியவில்லை அவளால். கிட்டத்தட்ட அதே நிலைதான் கர்ணாவுடையதும். மருந்தின் தாக்கமும், காயத்தின் வலியும் சேர்ந்து அவனைச் சோர்வாக்கியிருந்தது.

இருவருக்குமே பேச ஆயிரம் எண்ணங்கள் முட்டி மோதிக்கொண்டு இருந்தாலும், உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இருவரும் வெவ்வேறு பிரிவில் வெவ்வேறு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டதும் சேர்ந்துகொண்டது, இருவருக்குமே மருந்தின் தாக்கத்திற்குட்பட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் சதா தன்னவள்/தன்னவனைப் பற்றிய எண்ணங்களே முழுதாய் அவர்களை ஆக்கிரமித்திருந்தது.

நேரம் செல்லச்செல்ல, சிபிக்கு மனது கேட்கவில்லை. அவள் ஓயாமல் மிகவும் அடம்பிடித்துக் கேட்க வேறுவழியின்றி சக்கரநாற்காலியில் (Wheel chair) அமர வைத்து கர்ணாவின் அறைக்கு அழைத்துச்சென்றார் சாந்தி.

ஆங்கே, எப்போதும் துறுதுறுவென ஓடிக்கொண்டிருக்கும் தன்னவன், காதல் ததும்ப தன் விழிகளில் சங்கமிப்பவன், எதையோ ஒன்று சொல்லி ஓயாமல் தன்னைச் சீண்டிக்கொண்டிருப்பவன் இப்போது மருந்தின் வீரியத்தில் கட்டுண்டு கிடக்க, வேதனையில் அவள் விழிகள் அருவியென கண்ணீரைச் சிந்தின.

சாந்தியின் ஆறுதலான வார்த்தைகள் அவள் செவியில் விழுந்ததாகத் தெரியவில்லை. கர்ணாவின் கைகளைத் தடவியவண்ணம் கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தாள். இவளின் மனவோட்டத்தைப் படித்தவனாக கர்ணாவிடமிருந்து சிறிதாக அசைவுகள். சிபியின் கரங்களின் மென்மை அவனுக்குச் சொல்லியதோ என்னவோ..? அடுத்த சில வினாடிகளில் கண் விழித்தான் கர்ணா. இருவருக்கும் தனிமைதர எண்ணி சாந்தி அங்கிருந்து விலகினார்.

இருவரின் விழிகள் மட்டும் சங்கமித்து நின்றன சில நிமிடங்கள் வரை.

                             

புதுப்புது உணர்வுகள் உன்னாலே..!

புதிதாய் தினமும் என்னுள்ளே..!!

புன்னகை ஒன்று நீ உதிர்த்தால்..

பரவசம் பலகோடி உள்ளத்திலே..!!

காதல்கோர்த்த மலர்மாலை நீ..!

கரம் பிடிக்கிறேன் நானும் சூடிடவே..!!

காலம் முழுதும் உன்அன்பில்

கரையவே கனவுகள் காண்கிறேன்..!!

உன்விழி வழி விடியல்காண

உறக்கம் தொலைக்கிறேன் நானும்..!!

உறவொன்று நீ பரிசளிக்க

உரிமையில் கொண்டாடுகிறேன்..!!

அன்பின் சுவைக்கு அடிமைகண்டு..

அகமகிழ்ந்து வாழ்வோம் எந்நாளுமே..!!

சிற்பம் செதுக்கப்படும்

Next episode will be published on 9th Jun. This series is updated weekly on Sunday afternoons.

Episode # 21

Go to Varnam theettiya kathal sirpame story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதாsaaru 2019-06-10 12:37
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதாmadhumathi9 2019-06-02 17:39
:Q: sibiyai paarkka varubavargal yaaraay irukkum.adutha epiyai padikka miga aavalaaga kaaththu kondu irukkirom. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதாசந்யோகிதா 2019-06-06 14:35
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதாAbiMahesh 2019-06-02 15:34
Shocking Mam :o Sibi ku Vara mappillai yaraga irukum?? Last Kavithai Sooper Mam :hatsoff: Waiting for next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதாசந்யோகிதா 2019-06-06 14:35
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதாRanju 2019-06-02 13:11
Achachoo paavam sibi :sad: ... Get well soon karna... Romba short episode sanyogitha :o ... Kavidhai arumaiya irunthathu :GL: ... Eagerly waiting for next update :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதாசந்யோகிதா 2019-06-06 14:35
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதாAdharvJo 2019-06-02 12:17
Shock mele.shock.kudukuringale ji facepalm by any chance varapora groom karna vaga iruparo 😍😍 Hope karna doesn't disappoint
us :yes: nice epi ma'am 👏 👏👏 👏 but rombha short one ..look forward to see what happens next. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 22 - சந்யோகிதாசந்யோகிதா 2019-06-06 14:36
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 03 Jun 2019 08:01
எத்தனையோ உணர்வுகள் உள்ளத்தில் ஆழப்பொதிந்து கிடந்தாலும் அதனை எவ்வித பாதிப்புமின்றி வெளிக்கொணர ஒரு சில உறவுகளால் மட்டுமே சாத்தியப்படுகிறது. உன்னதங்களும் உயரிய செயல்களும் அன்பினால் மட்டுமே அலங்கரிக்கப்படுகிறது. அன்பு பரிமாறப்படும்போதும் வெளிப்படுத்தப்படும்போதும் மட்டுமே அதன் அற்புதங்கள் ஆகாயம் தாண்டிய கோட்டைகளைக் கட்டும். மறைத்து வைத்த பொருள் மக்களுக்கு உதவுமோ..? மறைத்து வைத்த அன்பும் மண் மூடிய வைரமாகாதோ..? எத்தனையோ அற்புதங்களைப் படைத்த இறைவன், ஒரு சிலவற்றை படைக்க மறந்ததை தவறென்று அவனுக்கு உணர்த்துவதெப்படி..? துரத்திச்செல்லும் அருவி, சிறகுவிரித்துப்

*****

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-22
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 26 May 2019 21:59
சிபியின் மனவோட்டத்தைப் படிக்கும் அளவுக்கு கர்ணாவின் மனதும் தெளிவான நிலையில் இல்லை. எதோ ஒரு யோசனையினூடே முன் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச்செல்ல எத்தனித்தவன் எதேச்சையாக இவள் புறம்பார்க்க முற்றிலும் தன் கவனம் சிதறினான். அடுத்த நொடி அங்கு மாபெரும் இரைச்சல்..!

அடுத்த சில நிமிடங்களில் அருகில் நெருங்க இயலாத அளவுக்கு நொடியில் மக்கள் கூட்டம் கூடிவிட்டது.

அங்கே… முன்னே சென்று கொண்டிருந்த வாகனம் இடதுபுறத்தில் ஆளளவு இருந்த சரிவான பள்ளத்தில் பாதி இறங்கி நின்றது. கர்ணாவின்

********

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-21
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 20 May 2019 01:22
சில நேரங்களில் நேசிக்கும் மனிதர்களின் வார்த்தைக் குதறல்களைவிட அவர்களின் மெளனம் மிகவும் பாதிக்கக்கூடியதாக அமைந்து விடுகிறது. கர்ணாவின் அமைதி சிபியையும் அப்படித்தான் வருத்திக்கொண்டு இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து சிபியின் அலைபேசி குரலெழுப்ப மரணவாயிலை எட்டிப்பார்த்த அவள் உயிர் மீண்டு அவளிடம் தஞ்சமடைந்தது.

“கர்ணா…..” பல வருடங்கள் கழித்து நிகழும் சந்திப்புப்போல அவள் குரலில் அத்தனை ஏக்கம்.

**********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-20
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 May 2019 08:30
உலகில் ஏறக்குறைய அனைத்து காதலர்களின் உயிரை அவ்வப்போது பருகிக் கொண்டிருக்கும் உன்னத நோயான பசலை நோய் சிபியையும் விட்டு வைக்கவில்லை. பல ஆண்டுகளாக பார்த்துப் பழகிய நண்பர்களைப் பிரிந்தபோதோ அல்லது வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுப் பிரிந்தபோதோ கூட இப்படியொரு வேதனயை அனுபவித்ததாகத் தெரியவில்லை சிபிக்கு. தன்னவனைக் காணாமல் கிட்டத்தட்ட நாற்பத்து எட்டு மணி நேரங்களே ஆகியிருந்தபோதும் பல ஜென்மங்களாக அவனுடைய திருமுகத்தைக் காணாதது போல உணர்ந்தாள் அவள்.

ஆனால் தலைக்கு மேலே குவிந்திருந்த வேலைகள் இப்படிப்பட்ட உணர்வை கர்ணாவால் உணர இடங்கொடுக்காத அளவுக்கு அவனுடைய

********************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-19
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 21 Apr 2019 19:15
தோழிகளிருவரும் பேச ஏராளமான கதைகள் நீண்ட வரிசையில் நீ நான் என போட்டியிட்டுக்கொண்டு காத்திருந்தன. ஆனால் காலம் வேறுவிதமான சூழ்நிலையுடன் அவர்களை எதிர்கொள்ளக் காத்திருந்தது.

தனது ஒரே பெண்ணின் திருமணத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் அபியின் தந்தை.

முகூர்த்தத்துக்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்த நிலையில் உற்றார் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு நெருங்கிய சொந்தங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பந்தல் போடும் ஆட்கள் ஒருபுறம் அவர்கள் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்க,

********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-17

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top