Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 15 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 15 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame 

ணர்வுப்பூர்வமான அவர்களின் உரையாடலைக் கலைத்தது அவனுடைய கைபேசி. சற்று எரிச்சலடைந்தவனின் முகம் அழைப்பது தாயார் என்றறிந்தவுடன் கனிந்து, “அம்மா…. இப்போதுதான் உங்கள் மருமகளுடன் மனம் விட்டு பேச ஆரம்பித்திருக்கிறேன்.. நான் திரும்ப அழைக்கும்வரை எனைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்றான் உரிமையுடன்.

எதிர்த்திசையில் என்ன சொன்னாரோ அவன் தாய், இலேசான வெட்கத்துடன் புன்னகையை உதிர்த்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

இதையனைத்தும் இமைக்காமல் விழியகல பார்த்துக்கொண்டிருந்த சிபியின் முகத்தில் அதிர்ச்சி கலந்த வியப்பு.

அவள் முகத்தினருகே கையசைத்தவன் கேலிக்குரலில் “நல்லவேளை… சிலையாகிவிட்டாயோ என நினைத்தேன்…” எனப் பரிகாசம் செய்தான்.

“என்ன கர்ணா.. திடுதிப்பென்று ஆன்ட்டியிடம் இப்படி பேசுகிறீர்கள்..? என்ன நினைப்பார்கள் என்னைப்பற்றி..? அவரின் முகத்தில் எப்படி விழிப்பேன்..?” என கவலையுடன் எடுத்துரைக்க

“நான் சொல்லாவிட்டாலும் அப்பா அம்மாவிடம் ஒன்றுவிடாமல் சொல்லியிருப்பார்கள்.. அதுமட்டுமின்றி முதன் முதலாக உன் பெயரைக்கேட்டதுமே என் அம்மாவின் முகத்தில் ஆராய்ச்சி ரேகைகள் படர்ந்ததைக் கவனிக்கவில்லையா நீ..? அப்பாவை விட அம்மா கொஞ்சம் அதிக புத்திசாலி.. கல்லூரிக்காலத்தில் உன் புகழை அடிக்கடி வாசித்திருக்கிறேன் அவரிடம்.. அப்பா எதுவும் சொல்லாமல் விட்டிருந்தாலும் அவராகவே யூகித்திருப்பார்.”

“அடேயப்பா… எப்பேர்ப்பட்ட திறமையான மாமியார் எனக்கு…  நல்லவேளையாக மாமியாராவது புத்திசாலியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என வெட்கத்தில் தொடங்கி கேலியில் முடித்தாள் சிபி.

“உன்னை இவ்வளவு பேச்சு பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறேன் பார்.. எனக்கு இதுவும் வேண்டும்.. இன்னமும் வேண்டும்… திருமணம் முடியட்டும்… பிறகு யார் புத்திசாலி என தீர்மானித்துக்கொள்ளலாம்” என்று கர்ணா சலித்துக்கொள்ள

இன்னமும் தன் கூட்டிலிருந்து வெளிவராத சிபி அவன் பேச்சு செல்லும் திசையைமாற்ற “கர்ணா… அதைவிடுங்கள்.. ஏன் ஐந்து வருடம் காத்திருந்தீர்கள் என் கண்ணில் பட” என்றாள் அன்போடு.

அதைக் கண்டுகொண்டவன் தனக்குள்ளே சிரித்தவாறு, “நான் படிப்பு முடித்தவுடனே அப்பாவின் நிறுவனத்தைக் கவனிக்கத் தொடங்கினேன் சிபி. அதில் திறமையாக செயல்பட்டு வாழ்வில் வெற்றிக்கரை காண வேண்டும் என்ற உத்வேகத்துடன் இரவு பகல் பாராமல் உழைத்தேன். அதைவிட நான் ஓய்வெடுக்கும் பொழுதுகளில் நீ என்னை ஓயாமல் தொந்தரவு செய்வாய்.. உன்னிடமிருந்து தப்பிப்பதற்காகவே நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் காதலைச் சொல்ல காலம் கனிய காத்திருந்த வேளையில் ஏதேதோ நிகழ்ந்துவிட்டது” மீண்டும் அவன் முகத்தில் வேதனையின் வலி தொற்றிக்கொண்டது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவன் முகத்தை அவள் மென்கரங்களால் வருட அவள் கரங்களை எடுத்து தன் இதழ்களால் பரிசளித்து அவளைத் தன் அணைப்புக்குள் கொண்டுவந்தவன் மேலும் தொடர்ந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மனதை உருக்கும் குரலில் “சிபி.. தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்க்கையில் ரஞ்சித்குமார் ரூபத்தில் விதி விளையாடிவிட்டது” என்றவுடன் விறைத்துப்போனாள் அவள். ரஞ்சித்குமாரைப் பற்றி அவனுக்குத் தெரியும் என அவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் வலிமையை எல்லாம் திரட்டி அவனின் பிடியிலிருந்து திமிறி விலக முயற்சித்தவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ஆறுதலுடன்.

சிபியின் விழிகள் மட்டும் கண்ணீரைச் சொறிந்தது மழை மேகமாக.

“உன்னைப் பின்தொடர்ந்து காதல் செய்ததில் உனது இலட்சியம் இந்தியப் பொறியியற் சேவைத் தேர்வில் (Indian Engineering Services) வெற்றி பெற்று மக்களுக்குப் பணியாற்றுவது என கண்டறிந்தேன். அதற்காக நீ முதலாமாண்டிலிருந்தே தயாராகிக்கொண்டிருக்கிறாய் எனவும் அறிந்தேன். ஏனோ தெரியவில்லை சிபி. அப்போதெல்லாம் உனது வெற்றியில் எனது பங்கு இருக்க வேண்டுமென என் உள்ளம் போராடும். ஆனால் அதற்கான எல்லா வழிகளையும் நீ அடைத்து வைத்திருப்பாய். அதை உடைத்தெறிய எனக்கு அதிக காலம் ஏற்பட்டிருக்காதுதான். ஆனால் என்னை விட்டு இன்னும் விலகிப் போய்விடுவாயோ என்ற அச்சத்தில் அமைதியாகி விடுவேன். தொடர்ந்து வந்த நாட்களில் உன்னை ஆய்வகத்தில் பார்த்தேன். நீயும் ரஞ்சித்குமாரும் அதிதீவிரமாக பேராசிரியருடன் விவாதித்துக் கொண்டிருந்தீர்கள். உனக்கு முந்தைய பதிவெண் (Roll number) அவனென்பதால் இருவரும் ஆய்வகத்தில் ஒரே தொகுதி (Batch) என்று பிறகு தெரிந்து கொண்டேன். எதிர்பாராத விதமாக ஒரு நாள் ரஞ்சித்குமாரை விடுதியில் சந்திக்க நேர்ந்தது”

அவன் சொல்லச்சொல்ல அவள் மனம் நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்தது. அவள் மனமறிந்தவன்

“சிபி.. இதில் நீ துக்கப்படுவதற்கோ வேதனைப்படுவதற்கோ உன்மேல் சிறிதும் தவறில்லை.. நான் தான் முழுமுதற் காரணம். ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை அப்போது” ஆறுதலாக அவள் உச்சியில் இதழ் வழியாக தன் அன்பை உணர்த்தியவன் தொடர்ந்தான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே-15-சந்யோகிதாரேணுகா சிவா 2019-03-31 20:21
Very very nice epi mam.waiting for next epi mam :clap:
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே-15-சந்யோகிதாசந்யோகிதா 2019-03-31 22:37
நன்றி ரேணுகாசிவா ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 15 - சந்யோகிதாRanju 2019-03-31 20:13
Nice episode ... Flash back mudunjuthu... Next sibi karna marriage ah ... Waiting for next episode sanyogitha...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 15 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-31 22:37
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 15 - சந்யோகிதாsaaru 2019-03-31 16:33
Nice update dwar
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 15 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-31 22:36
நன்றி சாரு ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 15 - சந்யோகிதாmadhumathi9 2019-03-31 13:16
wow nice & cute epi.waiting to read more. :thnkx: 4 this epi. :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 15 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-31 22:35
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 15 - சந்யோகிதாSrivi 2019-03-31 12:15
Nice update sis.. Superb..so oru vazhiya FB mudinchadhu.. paapom how it proceeds nu..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 15 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-31 22:35
நன்றி ஸ்ரீவி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top