Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame 

சிபியின் மனவோட்டத்தைப் படிக்கும் அளவுக்கு கர்ணாவின் மனதும் தெளிவான நிலையில் இல்லை. எதோ ஒரு யோசனையினூடே முன் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச்செல்ல எத்தனித்தவன் எதேச்சையாக இவள் புறம்பார்க்க முற்றிலும் தன் கவனம் சிதறினான். அடுத்த நொடி அங்கு மாபெரும் இரைச்சல்..!

அடுத்த சில நிமிடங்களில் அருகில் நெருங்க இயலாத அளவுக்கு நொடியில் மக்கள் கூட்டம் கூடிவிட்டது.

அங்கே… முன்னே சென்று கொண்டிருந்த வாகனம் இடதுபுறத்தில் ஆளளவு இருந்த சரிவான பள்ளத்தில் பாதி இறங்கி நின்றது. கர்ணாவின் சீருந்து அந்த வாகனத்தின் மீது மோதியதன் விளைவாக முன்பகுதியில் பலத்த சேதம் அடைந்திருந்தது. எதிர்ப்புறத்தில் வந்து கொண்டிருந்த கனரக வாகனம் சாலையோரத்தில் இருந்த பெரிய மரத்தின் மீது மோதி நின்றது.

விபத்து நடந்ததன் அதிர்ச்சி அடங்குவதற்கே கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கரைந்தன. காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தக்க நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் விசாரணைப்படி கர்ணாவின் வாகனம் முன்னே சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த எத்தனித்த இடம் மிக வளைவான பகுதியாக இருந்ததே விபத்திற்கான காரணகர்த்தாவாக இருந்தது. குறுகிய வளைவின் காரணமாக எதிரே வந்து கொண்டிருந்த கனரக வாகனம் கர்ணாவின் கண்ணுக்குப் புலப்படத் தவறிவிட்டது.

கிட்டத்தட்ட முன்பகுதி முழுவதும் பெரும் சேதத்தைச் சந்தித்திருந்த சீருந்தினுள் கர்ணாவும் சிபியும் மயக்க நிலையில் இருந்தனர். காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் இருவருமே அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்குள்ளாக விபத்துப் பகுதியில் சேகரித்த விவரங்களைக்கொண்டு கணேசன் மற்றும் சாந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திடீரென இப்படியொரு அழைப்பை எந்த தாய் தகப்பனால் ஏற்றுக்கொள்ள இயலும்..? இந்த அதிர்ச்சியை இருவராலுமே தாங்கிக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை.. பெற்ற மனம் பித்தல்லவா..? அளவில்லாத வேதனையில் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனையை வந்தடைந்தனர்.

வந்ததும் வராததுமாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மகனையும் சிபியையும் பார்க்க முந்திச்செல்ல, பணியிலிருந்த செவிலியர் பெண் இவர்களின் பரிதவிப்பைப் புரிந்துகொள்ளாமல் அவளது கடமையைச் செவ்வனே முடித்தாள். அதன் பயனாக அனுமதி மறுக்கப்பட்டது.

கட்டுமானத் தொழிலில் முன்னணியாக கொடிகட்டிப்பறந்தாலும் தன் சொந்த மகன் மற்றும் அவனுடைய மனம் விரும்பும் பெண்ணின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென தெரியாமல் உடைந்து போனார் கணேசன். சாந்தியின் நிலைமை இதைவிடப் பரிதாபமாக இருந்தது.

அவசர சிகிச்சைப்பிரிவின் முன்னால் வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கையின் விளிம்பில் அமர்ந்துகொண்டு அரைமணி நேரம் எண்ணற்ற தெய்வங்களை மனதாலே தரிசித்துக் காத்திருந்தனர் அத்தம்பதிகள் இருவரும்.

காத்திருப்பின் முடிவில் மருத்துவர் வெளிப்பட்டு, அவருக்கான பிரத்யேக அறைக்குள் நுழைந்தார்.   

சற்று நேரத்தில் விபத்துப் பற்றிய அறிக்கையினை மிக்க கவனத்துடன் வாசித்துக்கொண்டிருந்த மருத்துவரின் முன்னே வரையறுக்க இயலாத பரிதவிப்புடன் அவரின் நல்வார்த்தையை எதிர்பார்த்து அமர்ந்தனர் கணேசனும் சாந்தியும்.

“டாக்டர்… என் பிள்ளைகளுக்கு ஒன்றுமில்லையே..?!  நலம்தானே..!” எதிர்பார்க்கும் பதிலே நடுக்கத்துடன் கேள்வியாக ஒலித்தது சாந்தியின் குரலில்.

நடுத்தர வயதைக்கடந்த அந்த மருத்துவர் இவர்களைப்பார்த்து கனிவு கலந்த முகத்துடன், “பயப்பட ஒன்றுமில்லை….. கவிவர்ணாவிற்கு காலிலும் தோள்பட்டையிலும் சிறு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.. சிற்பிகாவிற்கு சிறுசிறு சிராய்ப்புக்களும் மயக்கமும் மட்டுமே… மற்றபடி இருவருக்குமே உயிருக்கு எந்தவித பாதிப்புமில்லை.. இரண்டொரு நாளில் நீங்கள் அவர்களை வீட்டிற்கு அழைத்துச்செல்லலாம்..” என்று திருவாய் மலர, கர்ணாவை ஈன்றெடுத்த நாளைவிட ஆனந்தம் கலந்த நிம்மதி அடைந்தனர் அவ்விருவரும்.

இரவு ஒன்பது மணியளவில் சிபிக்கு மெல்ல நினைவு திரும்பத் தொடங்கியது.. அவளுக்கு நினைவிலிருந்த வரை என்னதென சுதாரிக்கும் முன் கர்ணா இவளை இழுத்துத் தன்மேல் போட்டுக்கொண்டதே…! இப்போதுவரை என்ன நடந்ததென அவளால் யூகிக்க முடியவில்லை. இடையிடையே அவள் கைகள் அருகிலிருந்த கர்ணாவைத் தேடி காற்றில் அலைந்துகொண்டும், இதழ்கள் “கர்ணா..கர்ணா” என உச்சரித்துக்கொண்டும் இருந்தன.

செதுக்கப்பட எத்தனிக்கும்

கவிதை சிற்பங்கள்..!

செப்பனிட சங்கங்கள் இன்றி

சமுத்திரத்தில் மூழ்கிய முத்துகளாய்..

சத்தமின்றி ஆழ்மனதின் அடியில்

சமர்ப்பிக்கிறேன்..!

காதலா……..

நீர் வீழ்ச்சியில் விழுந்த மலராய்

காதல் நதியில் தத்தளிக்கிறேன்..

நீ மீட்டு வான்வெளியில் சிறகு

விரிக்க செய்வாயெனும்

காதல் உரிமையில்..!

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 20

Episode # 22

Go to Varnam theettiya kathal sirpame story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதாsaaru 2019-05-27 16:59
Thank god
Epi romba kutti
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதாசந்யோகிதா 2019-05-27 19:16
நன்றி சாரு ஜி :-) :thnkx: மன்னிக்கவும்.. அடுத்த வாரம் ஈடு செய்கிறேன்..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதாmadhumathi9 2019-05-26 15:55
:clap: nice epi.sibi,karnavirkku periyathaaga ondrumillai. (y) (y) waiting 4 next epi. :Q: y 1 page only? :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதாசந்யோகிதா 2019-05-27 19:17
நன்றி மதுமதி ஜி :-) :thnkx: சந்தர்ப்ப சூழ்நிலையால் அதிக பக்கங்கள் கொடுக்க முடியவில்லை...மன்னிக்கவும்..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதாAbiMahesh 2019-05-26 15:05
Nice update Mam! Karna & Sibi ku onnum aagala :cool:
:thnkx: and Waiting for next epi!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதாசந்யோகிதா 2019-05-27 19:19
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதாRanju 2019-05-26 13:57
Nice episode sanyogitha :clap: ... Nallavela karna and sibi ku eethuvum agala (y) .. kavidhai nice :GL: .. eagerly waiting for next episode :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதாசந்யோகிதா 2019-05-27 19:20
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதாAdharv 2019-05-26 11:42
:cool: sabba save panitinga :-) nice epi ma'am 👏 👏👏 👏 and as usual unga kavithai yum super 👌 waiting to see what happens next.. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 21 - சந்யோகிதாசந்யோகிதா 2019-05-27 19:21
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 03 Jun 2019 08:01
எத்தனையோ உணர்வுகள் உள்ளத்தில் ஆழப்பொதிந்து கிடந்தாலும் அதனை எவ்வித பாதிப்புமின்றி வெளிக்கொணர ஒரு சில உறவுகளால் மட்டுமே சாத்தியப்படுகிறது. உன்னதங்களும் உயரிய செயல்களும் அன்பினால் மட்டுமே அலங்கரிக்கப்படுகிறது. அன்பு பரிமாறப்படும்போதும் வெளிப்படுத்தப்படும்போதும் மட்டுமே அதன் அற்புதங்கள் ஆகாயம் தாண்டிய கோட்டைகளைக் கட்டும். மறைத்து வைத்த பொருள் மக்களுக்கு உதவுமோ..? மறைத்து வைத்த அன்பும் மண் மூடிய வைரமாகாதோ..? எத்தனையோ அற்புதங்களைப் படைத்த இறைவன், ஒரு சிலவற்றை படைக்க மறந்ததை தவறென்று அவனுக்கு உணர்த்துவதெப்படி..? துரத்திச்செல்லும் அருவி, சிறகுவிரித்துப்

*****

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-22
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 26 May 2019 21:59
சிபியின் மனவோட்டத்தைப் படிக்கும் அளவுக்கு கர்ணாவின் மனதும் தெளிவான நிலையில் இல்லை. எதோ ஒரு யோசனையினூடே முன் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச்செல்ல எத்தனித்தவன் எதேச்சையாக இவள் புறம்பார்க்க முற்றிலும் தன் கவனம் சிதறினான். அடுத்த நொடி அங்கு மாபெரும் இரைச்சல்..!

அடுத்த சில நிமிடங்களில் அருகில் நெருங்க இயலாத அளவுக்கு நொடியில் மக்கள் கூட்டம் கூடிவிட்டது.

அங்கே… முன்னே சென்று கொண்டிருந்த வாகனம் இடதுபுறத்தில் ஆளளவு இருந்த சரிவான பள்ளத்தில் பாதி இறங்கி நின்றது. கர்ணாவின்

********

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-21
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 20 May 2019 01:22
சில நேரங்களில் நேசிக்கும் மனிதர்களின் வார்த்தைக் குதறல்களைவிட அவர்களின் மெளனம் மிகவும் பாதிக்கக்கூடியதாக அமைந்து விடுகிறது. கர்ணாவின் அமைதி சிபியையும் அப்படித்தான் வருத்திக்கொண்டு இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து சிபியின் அலைபேசி குரலெழுப்ப மரணவாயிலை எட்டிப்பார்த்த அவள் உயிர் மீண்டு அவளிடம் தஞ்சமடைந்தது.

“கர்ணா…..” பல வருடங்கள் கழித்து நிகழும் சந்திப்புப்போல அவள் குரலில் அத்தனை ஏக்கம்.

**********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-20
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 May 2019 08:30
உலகில் ஏறக்குறைய அனைத்து காதலர்களின் உயிரை அவ்வப்போது பருகிக் கொண்டிருக்கும் உன்னத நோயான பசலை நோய் சிபியையும் விட்டு வைக்கவில்லை. பல ஆண்டுகளாக பார்த்துப் பழகிய நண்பர்களைப் பிரிந்தபோதோ அல்லது வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுப் பிரிந்தபோதோ கூட இப்படியொரு வேதனயை அனுபவித்ததாகத் தெரியவில்லை சிபிக்கு. தன்னவனைக் காணாமல் கிட்டத்தட்ட நாற்பத்து எட்டு மணி நேரங்களே ஆகியிருந்தபோதும் பல ஜென்மங்களாக அவனுடைய திருமுகத்தைக் காணாதது போல உணர்ந்தாள் அவள்.

ஆனால் தலைக்கு மேலே குவிந்திருந்த வேலைகள் இப்படிப்பட்ட உணர்வை கர்ணாவால் உணர இடங்கொடுக்காத அளவுக்கு அவனுடைய

********************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-19
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 21 Apr 2019 19:15
தோழிகளிருவரும் பேச ஏராளமான கதைகள் நீண்ட வரிசையில் நீ நான் என போட்டியிட்டுக்கொண்டு காத்திருந்தன. ஆனால் காலம் வேறுவிதமான சூழ்நிலையுடன் அவர்களை எதிர்கொள்ளக் காத்திருந்தது.

தனது ஒரே பெண்ணின் திருமணத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் அபியின் தந்தை.

முகூர்த்தத்துக்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்த நிலையில் உற்றார் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு நெருங்கிய சொந்தங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பந்தல் போடும் ஆட்கள் ஒருபுறம் அவர்கள் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்க,

********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-17

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top