Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 05 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 05 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

றை வாசலில் நிழலாடிய நிஜத்தைக் கண்டதும் கவிவர்ணா, சிகா இருவருமே பிறரறியா வண்ணம் வேறுபட்ட எண்ணச்சுழல்களில் சிக்குண்டு வெளிவரமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தனர். எதிர்மாறாக வந்தவனோ, எந்தவித முகபாவனையையும் வெளிப்படுத்தாமல் கவிவர்ணாவின் அனுமதியை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தான்.

பூமிக்குள்ளே புதையுண்ட எரிமலையாக அவன் உள்ளத்தில் என்ன ஓடுகிறதென கவிவர்ணாவல் யூகிக்க இயலவில்லை.

சிகாவின் உள்ளம் போர்க்களத்தில் சிக்கிய வண்ணத்துப்பூச்சியாகத் துடிதுடித்துக் கொண்டிருந்தது. தன்னைப்பற்றித் தான் மட்டுமே அறிந்திருந்த அந்த அதிபயங்கரமான சம்பவத்தை மற்றோர் முன் வெளிப்படுத்திக்கொள்ள அவளுக்கு அணுவளவு கூட விருப்பமில்லை. எவ்வளவு முயன்றும் பேரிடியாக இரைந்து கொண்டிருந்த தன் உள்ளத்தினை அவளால் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியைத் தழுவினாள்.  

ஏனோ தெரியவில்லை…!  புதைக்குழியில் வீழும்போது அனிச்சையாக கைகள் உயிர்பிழைக்க ஆதாரத்தைத் தேடுவது போல, அவளையறியாமல் ஆறுதல் தேடி கவிவர்ணாவிடம் நெருங்கி அவனை ஒட்டி நின்றிருந்தாள்.

விழிகள் கண்ணீரைச் சுரந்தும், கை கால்கள் நடுங்கியும் அவள் உள்ளத்தின் போராட்டத்தை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தன.

தன்னவள் தவிப்பதைக்கண்டவனின் உள்ளம் நூறாயிரம் துண்டுகளாக நொறுங்கிப்போனது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சில நொடிகளுக்குள் சுதாரித்துக்கொண்டவன் “எஸ்.. கம் இன்” என்றான் உணர்வுகள் துடைக்கப்பட்ட குரலில்.

 “ஸார்… என் பெயர் ரஞ்சித்குமார்.. புதிய தளப்பொறியாளராக (Site Engineer) இந்நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.. இன்று பணியில் சேர வந்துள்ளேன்” என்றுரைத்தான் வந்தவன் தங்கு தடையின்றி.

அழைப்புமணியை அடித்தவுடன் பணிவோடு வந்து நின்ற அலுவலக உதவியாளரிடம் (Office Assistant) “இவரை ரகுராம் அறைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டு, தன்னவள் புறம் திரும்ப, அதே கணம் அவள் உணர்ச்சிகளின் வேகத்தைத் தாங்கும் மனவலிமையின்றி மொத்தமாக சுயநினைவிழந்து சரியத்தொடங்கியிருந்தாள்.  வர்ணிக்கமுடியாத வேதனையில் உடனடியாக அவளைத் தன் வலிய கரங்களில் தாங்கி தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஓய்வு அறையில் அவளைக் கிடத்தி மின்விசிறியை இயக்கி விட்டான்.

தாமதமின்றி அலுவலக ஆரோக்கிய மையத்தினைத் (Health Center) தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவன், வதங்கிப் போயிருந்த மலராக இருந்த அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தும், சில்லென பனிக்கட்டியின் வெப்பநிலைக்கு மாறியிருந்த உள்ளங்கை மற்றும் பாதங்கால்களைத் தேய்த்து விட்டும் எவ்வித பலனுமில்லை. பலவித எண்ண இரைச்சல்களால் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றியது கவிவர்ணாவிற்கு. அவன் வாழ்வின் அர்த்தமல்லவா அவள்..?

அக்கணத்தில் அவளின் சீரான மூச்சுக்காற்று எழுப்பிய கீதமே அவனை ஒருவாறாக நிம்மதிப்படுத்திக் கொண்டிருந்தது. அடுத்த இரு நிமிடங்களில் ஆரோக்கிய மையத்தின் தலைமை மருத்துவர் (Chief Doctor) கையோடு கொண்டு வந்திருந்த முதலுதவி (First aid) மற்றும் இன்னபிற உபகரணங்களின் உதவியால் அவளைப் பரிசோதித்துவிட்டு, “பயப்பட எதுவுமில்லை ஸார்.. சாதாரண மயக்கம் தான்.. சிறிது ஓய்வெடுத்தால் தானே சரியாகிவிடும்” எனத் தன் கடமையை ஆற்றிவிட்டு நகர்ந்து சென்றார்.

புயலும் சூறாவளியும் மாறி மாறி சேதப்படுத்திய அவன் உள்ளக்கடல் மருத்துவரின் வார்த்தைகளால் ஓரளவு அமைதியாகி இருந்தது. அந்த நிம்மதியில் கொடிபோல துவண்டு கிடந்திருந்த அவளின் அருகில் அமர்ந்து, நெற்றியை வருடிவிட்டும், தலையைக் கோதிவிட்டும் அவள் கண்மலரத் தவமிருந்தான்.  

அன்பே..!

ஆழிபோல காதல் நான் கொண்டு

தோணி உனக்காக காத்திருக்கிறேன்..!

துடுப்பின் மீது உரிமை கொண்டு

கடலெனை கண்ணெடுத்தும் பாராமல்

கடந்தால் என் செய்வேன் நான்..?

வானம்போல நேசம் நான் கொண்டு

வெண்ணிலா உனக்காக காத்திருக்கிறேன்..!

மண்ணுலகம் மீது பற்று கொண்டு

வானமெனை வழியெங்கும் பாராமல்

விரைந்தால் என் செய்வேன் நான்..?

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 05 - சந்யோகிதாmahinagaraj 2019-01-21 12:20
ரொம்ப அருமையா இருக்கு மேம்... :clap: :clap:
சிற்பம் பொறுமையாக செதுக்கப்படுதலே அழகு... அதே போலவே கவியின் காதலும்..... :GL: :roll:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 05 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-21 20:21
நன்றி மகிநாகராஜ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 05 - சந்யோகிதாSrivi 2019-01-20 17:14
Aaha ..FB ya sikram sollunga.. thanga mudiyala suspense.. enna than nandandhrukkum..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 05 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-21 10:42
Thank u Srivi jii :-) will see in upcoming epis :thnkx:
Reply | Reply with quote | Quote
# வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே....05 _சந்யோகிதாரேணுகா சிவா 2019-01-20 13:28
Super mam.fbkkaga wait pandrom mam.ranjithum kaviyam enna pannanga :Q:
Nice epi mam.
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே....05 _சந்யோகிதாசந்யோகிதா 2019-01-21 10:48
Thank u Renuka siva jii :-) varapora epi la full fb solla try pandren :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 05 - சந்யோகிதாmadhumathi9 2019-01-20 12:19
:clap: nice epi.interesting aaga irukku.appadi ennathaan nadanthirukkum endru therinthu kolla varum epikkalai padikka miga aarcamaaga kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 05 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-21 10:49
Thank u Madhumathi jii :-) for your interest towards this story :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 05 - சந்யோகிதாAdharvJo 2019-01-20 11:42
!!Kanavana??!! :Q: Interesting update ma'am :clap: :clap: FB la appadi ena nadandhu irukkum, siga ivalo payapadurangale?as always ella scenes-um rombhave lively yaga irundhadhu. FB drives me back to college days :dance: Reliving the moments :cool: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 05 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-21 10:58
Thank u AdharvJo jii :-) for the beautiful comments :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top