Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 04 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 04 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

தொடர்ந்து வந்த நாட்களில் அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தன் திருமணத்திற்கு இரு மாதங்கள் இருந்த நிலையில், அபி இன்னும் இரு வாரங்களில் தன்னை இப்பணியிலிருந்து விடுவித்துக்கொள்வதற்காக (Relieve) ராஜினாமா கடிதத்தைக் (Resignation letter) கொடுத்திருந்தாள்.

ஐவர்குழு சமர்ப்பித்த அறிக்கைகளை ஆராய்ந்தபின், ஈ.சி.ஆர் பங்களாவின் கட்டிட வடிவமைப்பினை (plan) கிட்டத்தட்ட முடிவு செய்திருந்தான் கவிவர்ணா. மேலும் இறுதி செய்யப்பட்ட வடிவமைப்பினைச் சரிபார்க்க சிகா பணிக்கப்பட்டிருந்தாள்.

ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட வடிவமைப்பு வரைவில் (plan drawing) முக்கால்வாசி இவள் சமர்ப்பித்த அறிக்கையின் பகுதியாக இருந்ததில் அவளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. இருக்காதா என்ன..? ஒரு பங்களா தான் கட்ட எண்ணினால், சொந்த விருப்பு வெறுப்புக்கள் எப்படி இருக்குமோ அந்தக் கோணத்தில் தன் முழுத்திறமையையும் செலுத்தி அறிக்கையைச் சமர்ப்பித்தாள் அல்லவா..!

‘நால்வரும் நம்மைப்போலவே திட்டமிட்டிருப்பார்கள் போலும்… எது எப்படியாயினும் நாம் நினைத்தது போல ஒரு பங்களா… படிப்படியாகக் கட்டிடம் உயரும்போது அதன் வளர்ச்சியில் நாமும் பங்குபெற்றால் இன்னும் நன்றாக இருக்கும்… ஆனால் பார்த்தா, மகேன் அல்லது இளங்கோ தான் எப்படியும் தளப்பொறியாளராக (Site Engineer) பணிபுரியப்போகிறார்கள்..’ எனச் சற்று இயலாமையுடன் பணியில் கவனத்தைச் செலுத்தினாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஏனெனில் இதுவரை சிகா மேற்கொண்ட பணிகள் அனைத்தும் தொழில்துறை சார்ந்த கட்டிடங்களாகவோ அல்லது பெரிய திரையரங்குகளாகவோதான் இருந்துள்ளன. இடத்தின் அளவு (Site measurements), வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்கள் (Customer Requirements), சுமை கணக்கீடு (Load Calculation), பாதுகாப்பு (Safety aspects), பொருளாதாரச்சிக்கனம் (Economical provident), கட்டிட உள்வடிவமைப்பு (Interior design) மற்றும் வடிகால் வசதிகள் (Drainage facility) இவற்றை உள்ளடக்கிய திட்டமிடல் (Plan), மதிப்பிடுதல் (Estimation) என பெரும்பாலும் இவற்றைச் சுற்றியே அவள் பணி இருக்கும்.

முதன்முறையாக உயிரோட்டமுள்ள ஒரு கட்டிடத்தின் வடிவமைப்பில் தான் பங்கு கொள்வதை என்ணி பேறுவகை கொண்டாள்.

இரண்டாள் உயரத்தைத் தாண்டிய அப்பெரிய சுற்றுச்சுவரின் (Compound wall)  கடற்கரையை நோக்கிய கிழக்கு வாசலிலுள்ள நுழைவு வாயிலின் வழியே உள்நுழைந்தால் முன்பாதியில் கண்ணைக் கவரும் பசுமையான விதவிதமான அலங்காரச் செடிகள் அவற்றின் மலர்களுடன் கொஞ்சி விளையாடும் தோட்டம்.

சீருந்து (Car) மற்றும் வீட்டினர் செல்ல பாதுகாப்பாக பசுமை நிறச்சுற்றுப்பரப்பில் பளிச்சென்ற சிவப்பும் மஞ்சளும் கலந்த சமதளக்கற்கள் (Paver block)… வலதுபுறத்தில் வானத்து நிறத்தை கடன்வாங்கி வந்ததுபோல நீலவண்ண நிறத்தில் ஆழம் அதிகமில்லாத நீச்சல் குளம்… நீச்சல் குளத்தின் அருகிலேயே வீட்டினர் பொழுதுபோக்கிற்காக அமரும் வகையில் குடைகளுடன் கூடிய இருக்கைகள்… சிறு குழந்தைகள் விளையாட ஏதுவாக சறுக்கல் மற்றும் ஊஞ்சல்…

இடதுபுறத்தில் அழகிய மங்கை ஒருத்தி தண்ணீர்க்குவளையுடன் செடிகளுக்குச் சற்று குனிந்து தண்ணீர் ஊற்றுவது போன்ற சிற்பம்… குவளையின் வாயிலிருந்து எந்நேரமும் நீர் ஊற்றிக் கொண்டிருப்பது போல அமைந்த செயற்கை நீரூற்று… ஆங்காங்கே துள்ளி விளையாடும் மான் சிற்பங்களும்… இணையிணையாக அமர்ந்த புறாக்களும்…

அரைக் கிலோமீட்டர் நீண்ட தோட்டத்தைக் கடந்தால் இரண்டடுக்குக் கொண்ட தரைத்தளத்துடன் கூடிய பிரம்மாண்டமான பங்களா.. மரக்கலரில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட சுவற்றில் ஆங்காங்கே அழகிய சித்திரங்கள்… தேக்கினாலான மிகுந்த கைவேலைகளுடன் சிறப்பான தோற்றத்துடன் கூடிய எட்டடிக்கும் உயரமான அக்கதவைத் தாண்டி வீட்டினுள் வலதுபுறத்தில் நெருங்கிய சொந்தமில்லாத வெளியுலகத் தொழில் ரீதியான நட்புக்களுக்காக வரவேற்பறை.

இடதுபுறத்தில் மேல்தளத்துக்குச் செல்ல இருபுறமும் வளைந்து செல்லும் அகண்ட மரக்கட்டைநிறப் பூக்களைக்கொண்ட கற்கள் எல்லைக்கோட்டிலும்,  நடுவில் வெள்ளைநிறக் கற்களும் பதிக்கப்பட்டு, செதுக்கப்பட்ட வளைவடிவக் கைப்பிடிகள் கொண்ட படிக்கட்டுகள் (Stair case).. படிக்கட்டுகளின் அடியில் புத்தகங்கள் அடுக்கிவைக்க மரத்தினால் செதுக்கப்பட்ட கண்ணாடியுடன் கூடிய அலமாரிகள்… அதைத் தாண்டிய மிகப்பெரிய வரவேற்பறை… மரக்கட்டைநிற மற்றும் வெள்ளைநிற இரு அடுத்தடுத்த எல்லைகள் (Border) கொண்டும் நடுப்பகுதியில் பளிச்சென வெள்ளை நிற கிரானைட் கற்களும் பதிக்கப்பட்ட அறையின் நடுவே கட்டிடச் சுமையை பூமிக்குப் பரிமாற்ற ஏதுவாக இரு பெரிய தூண்கள்.. தூண்களின் மேற்பரப்பில் பதிக்கப்பட்ட கற்களில் மரக்கட்டை நிறமும் வெண்மையும் கலந்த கண்ணைக் கவரும் சித்திரங்கள். சுவற்றின் ஒருபுறத்தில் விதவிதமான அலங்காரப் பொருட்கள் கொண்ட காட்சிப்படுத்தப்பட்ட அலமாரி (Showcase).

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 04 - சந்யோகிதாmahinagaraj 2019-01-14 11:50
செம சூப்பர் மேம்.... :clap: 👏👏
கவிப்பா செம... 👌 இவங்க ரெண்டு பேரும் எப்பிடி ஒன்னா வேளைய முடிக்கபோராங்களோ.... :grin:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 04 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-14 12:44
Ha ha . Athan enakum kavalaiya irukuthu ji... Paapom upcoming epi la :-) :thnkx: for the energetic comments
Reply | Reply with quote | Quote
# இனிய தமிழ்Sindhu mithra 2019-01-14 11:47
பிழையற்ற இனிய தமிழ்ச் சொற்கள்,அருமை mam.
Reply | Reply with quote | Quote
# RE: இனிய தமிழ்சந்யோகிதா 2019-01-14 12:45
Thank u Sindhu mithra jii for the beautiful comments :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 04 - சந்யோகிதாmadhumathi9 2019-01-13 15:08
:clap: nice epi.yaar antha pudhuvaravu endru therinyhu kolla adutha epiyai miga aavalaaga ethir nokki kaathu konfu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 04 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-13 16:43
Thank u Madhumathi Jii :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# Batman theettiya Kadhal airplane...sanyogithaRenuga siva 2019-01-13 12:51
Nice ji.yaru vandhanga? Avanga clg mate ninegaran mam.waiting for next episode mam.
Reply | Reply with quote | Quote
# RE: Batman theettiya Kadhal airplane...sanyogithaசந்யோகிதா 2019-01-13 16:44
Thank u Renuga siva Jii for the comments and guess.. let's see in upcoming epi :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை_வர்ணம் தீட்டிய காதல் சிற்பம்ரேணுகா சிவா 2019-01-13 19:17
Sorrymam.head line mistake mam.frist time comment pandra any mistakes
Please adjustment to me ☺️
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை_வர்ணம் தீட்டிய காதல் சிற்பம்சந்யோகிதா 2019-01-13 21:15
No probs Renuga Siva jii :-) Actually naanum ipa than kavanikaren :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 04 - சந்யோகிதாAdharvJo 2019-01-13 12:41
Achacho Hitler on marubadiyum on form huh :eek: OMG!! Siga-ve yen balikada akuringa madam ji facepalm sky la parakavittu thali viduringa 😜😜 nyayama?? Beautiful update 👏👏👏👏 yen kavi angry yaga irukaru avaroda sight adikra opportunity veryarukavdhu poidicho ;-) building structure-a rombha azhaga varinichi irukinga + apt on a timing-la poem include seithu dhool kalakuringa and kavi sir Oda silent loves double super :dance: 😍😍 poor siga ini Ena agumn therindhu kola waiting. Thank you and keep rocking. Advance pongal wishes 🌸
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 04 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-13 16:46
Thank u AdharvJo jii for the long and beautiful comments... Thank u for the pongal wishes and wishing u the same .. :thnkx: :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top