Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

அன்பு நெஞ்சமதில் எங்களின்

அனுமதியின்றி அழகிய

காதலைச் செதுக்கியவர் யாரோ..?

காதல் சுகத்தைத் தராமல்

செதுக்கிய வலியைத் தந்துசென்ற

இரக்கமில்லா சிற்பி எவரோ..?

அதிசயம் பல காதல் கடலில்

அன்புப் பரிசலில் பயணித்து

வாழ்வுக்கரை காணும்முன்னே

அலைமோதுகிறோம் ஏனோ..?

காதலே..!

இத்துணை வஞ்சகம் ஏன்..?

ஒளியுணரும் முன்னே

வழி மறைத்ததேனோ..?

உன் முகவரி தேடுவதற்குள்

அணுவணுவாய் சிதைப்பதேனோ..?

லைவலி’ எனக் கூறி துயரமே உருவாக சிகா வீட்டில் முடங்கிக் கிடந்ததைக் கண்ட அவள் தாயார் என்ன முயற்சித்தும் பலனில்லை. ஓய்வெடுக்க அறிவுறுத்திவிட்டு வயலுக்கு விரைந்தனர் இருவரும்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சிகாவின் மனம் தாய் தந்தை மற்றும் கவிவர்ணாவின் நிலையிலிருந்து இரு வேடமிட்டு அவளைத் துன்புறுத்தியது.

வழக்கமாக அவள் ஊருக்கு வந்தால் அவளைக் காண வரும் சிறார்கள் அன்று அவளையும் விளையாட்டில் ஈடுபட வைக்க நீண்ட நேரம் முயற்சி செய்தும் வெற்றி பெறாமல் திரும்பிப் போயினர்.

அவள் மனம் ஓயாமல் நிகழ்ந்தவற்றை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.

‘எல்லா விசயத்திலும் என் மனம் அறிந்து பார்த்துப் பார்த்து நடந்தாரே.. அவரை வாழ்க்கைத் துணையாகப் பெற தான் தவம் எதுவும் செய்திடவில்லையோ..? அல்லது எல்லார்க்கும் எல்லாமும் கொடுத்து வைப்பதில்லையோ..? இல்லை.. காகம் உட்கார்ந்து பனைங்காய் விழுந்த கதையாக ஆனதோ..? ஆனால் அவர் விழிகள் என்னை எங்கேயோ அழைத்துச் சென்றனவே.. ஆங்கே வண்ண மலர்கள் வசந்த முகத்துடன் வரவேற்றனவே..! கீச்.. கீச்.. என பறவைகள் பல காதல் கதைகள் பேசினவே..! அன்பென்ற தென்றல் எனைத் தழுவியதே..! ஆகாயத்திலிருந்து சில்லென்று தூறல் மழை பெய்தனவே..! ஆனால் எல்லாம் ஒரு நொடியில் இருண்டு போனது.. ஏன்..?’

கைகள் தானாக அவன் தீண்டிய இதழ்களை வருடியது. ‘சிபி என்றழைத்ததும், பின் மன்னிப்புக்கேட்டு விலகியதும் ஏன்..? ஒருவேளை வயதுக்கோளாறால் தன் வசம் இழந்து விட்டரோ..?’

மனித உள்ளத்தைக் கடவுள் எப்படித்தான் படைத்தாரோ..? அதுவல்லவா உலக அதிசயங்களுள் சேர்க்கப்படாத ஒரு அதிசயம்..!! ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் உலகத்தையே அலசி ஆராய்ந்து விடுகிறது.

மீண்டும் மீண்டும் கைபேசி அணைக்கப்பட்ட செய்தி வர என்னவோ ஏதோ என பதறிப்போய் கவிவர்ணா தங்கியிருந்த இல்லத்திற்கு வந்த ரகுராம், அவன் நிலையைக் கண்டு அதிர்ந்தான்.  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மூன்று நாள்கள் சரியாக உண்ணாமல் உறங்காமல் முகத்தில் ஒளியிழந்து போயிருந்தான் கவிவர்ணா. காண்போரைக் கவரும் அழுத்தக்காரனா இவன் என சந்தேகக் கேள்விக்கு இடங்கொடுத்திருந்தான்.

“என்னடா..? என்னாயிற்று உனக்கு..? அம்மா அழைப்பைக் கூட ஏற்கவில்லையாமே..! அப்படி என்ன குற்றம் கண்டாய் நீ அம்மாவிடம்.. எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.. புறப்படு.. அம்மா உன்னை உடனடியாக அழைத்து வரச் சொன்னார்கள்.. கிளம்புடா”

‘அவர் என்ன குற்றம் புரிந்தார்..? நானல்லவா அவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறேன்.. வாழ்க்கையின் எல்லா நிலையிலும் எனக்கு ஆதரவாக இருந்தவர்.. இருப்பவர்..  மெழுகாக உருகி என் வாழ்க்கையில் வெளிச்சம் தருபவர்.. சகலத்தையும் எனது நலனுக்காக பார்ப்பவர்.. அவரைத் தாயாகப் பெற என்ன தவம் வாங்கி வந்தேனோ..?’

தன்னுடைய துன்பத்தையே கண் முன் வைத்து பெரிதாக எண்ணி தாயாரைக் கலங்க வைத்த தன் செயலை நினைத்து வருந்தியவன், “ஸாரி டா.. இதோ கிளம்புகிறேன்” என்றவன் தாயிடம் செல்ல அடுத்த முப்பது நிமிடத்தில் பறப்பட்டான்.

அப்போது தான் நினைவு வந்தவனாக, “ஈ.சி.ஆர் பங்களா..? கற்காரைப் பணி நடந்து கொண்டிருந்ததே..! எப்படி மறந்தேன் நான்..? நீ தளத்திற்குச் (site) சென்றாயா..?  நான் சென்று பார்த்துவிட்டு அப்புறம் வீட்டுக்குப் போகிறேன்”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாmahinagaraj 2019-02-18 10:40
செமையா இருக்கு மேம்... :clap: :clap:
என்ன நடக்க போகுதோ.. :Q:
காதலை தனக்குள்ளேயே மறைத்து வைக்காமல் ரெண்டு பேரும் சொல்லிடுங்கப்பா.. :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-18 11:16
நன்றி மகிநாகராஜ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாAdharvJo 2019-02-17 20:51
Solluvadharkku munbe ithanai adhurchiya :eek: aunty you got to be strong :P but vidama yenan ketukittu enakkum sollidunga 😝
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 21:35
கண்டிப்பாக ஆதர்வ்ஜோ ஜி :D அடுத்த வாரம் கவிவர்ணா தாயிடம் கூறுவார்..அப்போது அனைவரும் ஒட்டுக்கேட்டுக் கொள்ளலாம் :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாRanju 2019-02-17 20:36
Nice episode mam.... Next episode kaga we are eagerly waiting...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 21:36
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாAdharvJo 2019-02-17 18:43
Sabba Hitler mute mode-laye flash back solimudichitaro facepalm Appadi ivaru feel panura alavuk ena thaan seitharu :Q: Suspense thangala madam ji :D cool and nice update :clap: :clap: ragu en ippadi saguni mathiri pesuraru steam pavam kavi….Siga ippo ena panaporangan therindhu kola waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 19:47
ஹா ஹா.. :lol: கவிவர்ணா இன்னும் இறந்தகாலத்துக் கதையை கூறி முடிக்கவில்லை ஜி.. சிகாவின் சூழ்நிலையை எடுத்துரைக்க வேண்டிய நிர்பந்தத்தால் கவிவர்ணாவை சற்று நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டினேன். கருத்துக்கு மிக்க நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாabimahesh 2019-02-17 14:45
Good Epi Mam.. Eagerly waiting to see what happened in the past..
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 15:26
உங்கள் கருத்துகளுக்கும் ஆர்வத்துக்கும் மிக்க
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-08- சந்யோகிதாரேணுகா சிவா 2019-02-17 14:14
Nice mam.2 perutaya unarvum super mam.next epikkaga waiting mam.siga kavi feeling good mam.i too feel siga &abi mam :yes: :-)
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-08- சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 14:30
உங்களின் கருத்து மிக்க மகிழ்வைத் தருகிறது எனக்கு. கவிவர்ணா மற்றும் சிற்பிகா இருவரின் உள்ளங்களை உணர்த்த செய்த முயற்சி வெற்றியடைந்ததாக மகிழ்ச்சி அடைகிறேன்..! நன்றி ரேணுகாசிவா ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாRaVai 2019-02-17 12:26
சந்யோகிதாவின் கவிச்சொற்கள், கதையை காவியமாக்கிவிடும் திறன் உள்ளது என்பதற்கு அறிகுறிகள் பரவிக் கிடக்கின்றன. ஆவலைத் தூண்டும் இடத்தில் நிறுத்தியிருக்கிறார். வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 12:52
ஊக்கப்படுத்தும் உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ரவை ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாmadhumathi9 2019-02-17 11:32
:Q: ohno siga sollaamal avargalin petrorkku eppadi magalin kaadhal theriyum? Nice epi.waiting to read more. :thnkx: 4 this epi. (y) :clap: :GL:
Oru chinna thappu irunthathu. Ilaithu endru ezhuthuvatharkku izhaithu endru ezhuthi iruntheergal.thappaaga ninaikka vendam.please
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 11:40
பிழைக்கு வருந்துகிறேன்.. மன்னிக்கவும். ஆழ்ந்து வாசித்தமைக்கு நன்றி மதுமது ஜி.. :-) :thnkx: ஒரு எழுத்து வாக்கியத்தின் பொருளையே கேள்விக்குறியாக்கி விட்டது. :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 09 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 11:42
மதுமதி ஜி :thnkx: :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

YNEA
13
VD

KNP

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

IOKK
16
Siva

NKU

Tha
17


VTKS

UNMT

Mor

AN

Eve
18
EVUTNiNi
19
MMSV

ILU

YNEA
20
GM

KNP

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24


VTKS

UNMT

* Change in schedule / New series
* On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top