Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame 

தவன் உறக்கம் கலைந்து பணிக்குத் திரும்பிட அதிகாலைப்பொழுது அழகாக மலர்ந்தது. நிம்மதியான உறக்கத்திற்குப்பின் கண்விழித்து தனதறையிலிருந்து கீழ்தளத்திற்கு வந்த கவிவர்ணா, சமையலறையில் தாய் சாந்தியுடன் புன்னகை பூக்க பேசிக்கொண்டே அவருக்கு சிறு சிறு உதவிகளைச் செய்து கொண்டிருந்த சிகாவை புகைப்படமாக மனதினுள் நிரப்பிக்கொண்டான்.

புத்தம் புதிதாக பூத்த ரோஜா மலராக அத்தனை மென்மையுடன் கூடிய பெண்மையை இப்படி தன் வீட்டில் காண எத்தணை காலம் எத்தணை கனாக்கள் கண்டிருப்பான்..? இன்று அதில் முழுமையும் நிறைவேறாவிட்டாலும், நிறைவேறும் காலம் வெகு தூரமல்ல என்பதைக் கடவுள் உணர்த்தும் தருணமாக எண்ணினான் அவன்..!

அதே நேரம் தந்தை கணேசனும் கீழ்தளத்திலிருந்த அறையிலிருந்து வெளிப்பட, “அப்பா.. உங்களிடம் சிறிது பேசவேண்டுமே..!” என அனுமதி கேட்டான் கவிவர்ணா.

“என்னடா கண்ணா.. பொழுது விடிந்ததும் விடியாததுமாக பேசவேண்டும் என்கிறாய்…? சரி வா.. தோட்டத்தில் அமர்ந்து பேசலாம்”

முந்தைய நாள் இரவு சிகாவும் கவிவர்ணாவும் அமர்ந்திருந்த அதே இருக்கையில் தந்தையும் மகனும் அமர்ந்தனர்.

“சொல்லுடா கண்ணா.. என்ன குழப்பம்..? தொழிலில் ஏதாவது பிரச்சனையா..?”

“அப்பா.. அதெல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.. நம் வீட்டிற்கு என் வகுப்புத்தோழி சிற்பிகா வந்திருக்கிறாள்.. உங்களுக்குத் தெரியுமல்லவா..?”

“ஆமாம்.. அந்தப் பெண்ணைப்பற்றி அம்மா ஆஹா.. ஓஹோ என புகழ்ந்து தள்ளினாளே..! இப்போது நீ வேறா..?  நான் கூட அப்பெண்ணை இன்னும் பார்க்கவேயில்லை.. நீ தான் எனக்கு அறிமுகப்படுத்தவே இல்லையே.!” என வருத்தப்படுவது போல நடிக்க

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்பா.. இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லையா..? நீங்கள் நேற்று இரவு வீட்டுக்கு வந்ததும் வராததுமாக உறங்கிவிட்டு இப்போது என்னைக் குற்றம் சாட்டுகிறீர்களா..?”

“ஹா..ஹா.. என்னடா கண்ணா செய்வது…! உன்னைப்போல் ஓடியாடி வேலை செய்யும் வயசா எனக்கு..? வீடு போ போ என்கிறது… காடு வா வா என்கிறது.. இந்நேரத்திற்கு நியாயப்படி பார்த்தால் நானும் உன் அம்மாவும் உன் குழந்தைகளை வைத்து கொஞ்சிக்கொண்டிருக்க வேண்டும்..  நீயானால் கல்யாணப் பேச்செடுத்தாலே காதைப்பொத்திக் கொள்கிறாய்.. என்னடா கண்ணா உன் பிரச்சனை..? என்னைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் வாழ்வு இருமனம் இணையும் திருமணத்தில்தான் அதன் பயனை அடைகிறது.. ஏனைய எல்லா உறவுகளும் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் விருப்பத்துடனோ விருப்பமின்றியோ நம்மிடமிருந்து விடைபெற்று விடும். அதுமட்டுமின்றி இப்படியே தனிமரமாக நின்றால் வாழ்க்கை ஒரு வயதிற்குமேல் போரடித்துவிடும். உன் சுமையை இறக்கிவைக்கவும் உன் விருப்பு வெறுப்புக்களை ஒளிவு மறைவின்றி மனம் விட்டுப் பேசவும் நிச்சயம் ஒரு துணை வேண்டும். இதெல்லாம் சொன்னால் இப்போது எங்கே உனக்குப் புரியப்போகிறது..?” என்று பெருமூச்சு விட்டார் கணேசன்.

“அப்பா.. நான் உங்களிடம் பேசவேண்டும் என்று சொன்னதாக ஞாபகம்.. ஆனால் எனக்குப் பதிலாக நீங்களே மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்களே..!”

“கண்ணா… நீ மட்டும் சரியென தலையாட்டு… என் நண்பனையே எனக்குச் சம்பந்தியாக்கிக் கொள்கிறேன்.. ரொம்ப நாட்களாக என் உயிரை வாங்கிக்கொண்டிருக்கிறான்..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நெஞ்சில் துணிவிருந்தால்..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அவர் உங்கள் உயிரை வாங்குவதற்காக கூடவே சேர்த்து என் உயிரை நீங்கள் வாங்குவதற்குத் திட்டமிட்டு விட்டீர்களா..?” என்றான் புன்சிரிப்புடன். மேலும், “அப்பா.. நானே உங்களிடம் அதைப்பற்றித்தான் பேசவேண்டும்.. நான் ஒரு பெண்ணை மனதார நேசிக்கிறேன்.. அப்பெண் வேறு யாருமல்ல.. நம் வீட்டிற்கு வந்திருக்கிறாளே.. அவள் தான். பெயர் சிற்பிகா.. ஊர் தேனியில் ஒரு கிராமம். வீட்டிற்கு ஒரே பெண். மிகவும் நல்ல பெண்”

மகன் சொன்ன தகவலைக்கேட்டு கணேசனுக்கு பேரதிர்ச்சி. ஒரு தகப்பனாக மகன்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை ஒரு நொடியில் தகர்ந்தது. நீண்ட நாட்களாக தனது நண்பனின் மகளை தனது மருமகளாக்க விருப்பம் கொண்டிருந்தவரும் கூட. மகன் கூறிய செய்தி அவருக்கு அத்துணை உவப்பானதாக இல்லை என்பது அவரது முகரேகையில் அப்பட்டமாகத் தெரிந்தது.

முயன்று வருவிக்கப்பட்ட குரலில், “உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை கண்ணா..!” என்றார்.

“உங்களைக் காயப்படுத்துவதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அப்பா.. ஆனால்.. இதுதான் நிதர்சனமான உண்மை. என் வாழ்க்கையின் முதல் காதலும் முடிவில்லா காதலும் அவள்.. அவளை உங்கள் சம்மதத்துடன் மணம்புரிய விருப்பப்படுகிறேன்.. நான் இன்னும் அவளிடம் என் காதலைச் சொல்லவில்லை. உங்கள் இருவரிடமும் பேசி சம்மதம் வாங்கிவிட்டு மேற்கொண்டு அவளிடம் பேசலாம் என நினைத்திருந்தேன்” என்றான் கவிவர்ணா உணர்வுப்பூர்வமாக.

மகனின் குரலில் தெரிந்த உறுதி தந்தையை இன்னும் சற்று அசைத்துப்பார்த்தது. இருந்தாலும் அவனுடைய கோரிக்கையை ஏற்க விரும்பாதவர், “அந்தப்பேச்சை இப்போது விடு..” என்று கூறிவிட்டு எழுந்து வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாAbiMahesh 2019-03-17 20:13
Nice update Mam :-) Unga story read panrapa romba light ah feel aaguthu.. Waiting for next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-18 08:37
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாmadhumathi9 2019-03-17 17:42
:clap: good epi.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-17 19:22
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாsaaru 2019-03-17 15:50
Super hero eduku the I poraru
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-17 19:21
நன்றி சாரு ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# வர்ணம் தீணட்டீய காதல் சிற்பமே-13-சந்யோகிதாரேணுகா சிவா 2019-03-17 15:41
Today epi super mam.waiting for next kavi action. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீணட்டீய காதல் சிற்பமே-13-சந்யோகிதாசந்யோகிதா 2019-03-17 19:21
நன்றி ரேணுகாசிவா ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாரவை 2019-03-17 12:22
சந்யோகிதா ஒரு கதாசிரியர், கவிஞர் என்பதையெல்லாம்விட, ஒரு ஆழமான சிந்தனையாளர்! அவரும் அவர் எழுத்தும் பல்லாண்டு வாழ, வளர வாழ்த்துகிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-17 19:20
நன்றி ரவை ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாAdharvJo 2019-03-17 12:21
Heartwarming update ma'am :sad: pavam ivangalukku verum disappointments mattume irukku...idhukkumele Ena sadhi vendi irukku facepalm uncle Nala dialogues adicharu kadaisila ippadi munji thookivachikitare steam ufff. Eppodhu than ivangalukku vidiyal varum 😍😍 I mean ivvanga love story-k 😜 interesting flow ma'am 👌👏👏👏👏!! Yaruvadhu open up agunga pa...waiting to see what happens next!!
Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-17 19:19
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாRanju 2019-03-17 11:39
Super episode sanyogitha :thnkx: ... Next episode kaga waiting ... Kavidhai nice... Kavivarna and sibi valkayil vidhiyin sadhi Enna :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 13 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-17 19:17
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top