Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 07 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 07 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

**** Contest alert **** Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***

ருத்துவரின் உயர்தர சிகிச்சை குழந்தையின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றத்தை விதைத்தது. சிகா மதிய உணவு இடைவேளையில் குழந்தையைப் பார்த்து வர அனுமதி கேட்க கவிவர்ணா, “நானும் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.. குழந்தையை நினைத்தாலே மனது பாறாங்கல்லாகிறது.. வா.. சென்று பார்த்துவிட்டு மருத்துவரிடமும் விசாரித்துவிட்டு வரலாம்” எனக்கூற இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.

சிகா குழந்தையைப் பார்க்க தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு செல்ல, கவிவர்ணா மருத்துவர் அறைக்கு சென்றான்.

தொடர்ந்து வந்த இரு நாட்களிலும் குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே கண்காணிக்கப்பட மூன்றாவது நாளில் பரிபூரண குணமடைந்திருந்தது.

இந்த மூன்று நாட்கள் குழந்தையின் தாய் வேலைக்கு வராமலிருந்தாலும் கூட ‘அன்றாடம் உழைத்தால் தான் உணவு’ என்ற நிலையிலிருந்த அக்குடும்பத்திற்கு மூன்று நாட்களுக்கான கூலியையும் சேர்த்துக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான் கவிவர்ணா.

மிக முக்கியமாக மருத்துவச்செலவுகள் அனைத்தையும் ‘K.S.கன்ஸ்ட்ரக்சன்ஸ்’ நிறுவன அறக்கட்டளையின் நிதியிலிருந்து காசோலையாக கவிவர்ணா செலுத்தியதைப் பின்னாளில் சிகா அறிய வரும்போது விளைவுகள் எப்படியிருக்குமோ..? காலம் தான் பதில்கூற வேண்டும்..!

தொடர்ந்து வந்த மூன்று வாரங்களிலும் கட்டிடத்தின் அடித்தளப்பணிகள் (Foundation works) முடிக்கப்பட்டு கற்காரைத் தூண்களும் (Column) பலகைகளும் (Slabs) அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இந்த இடைப்பட்ட காலங்களில் சிகா கிட்டத்தட்ட தளப்பணியாளருக்குரிய அனைத்துத் தகுதிகளையும் சம்பாதித்து திறமையை மெருகேற்றியிருந்தாள்.

அன்று கட்டுமானத் தளத்தில் (Construction site) வேலையின் இடையே என்றும் இல்லாது அவள் தொலைபேசி அவளைத் தொல்லைப்படுத்தியது.

திரையைக் கண்டவள் முகம் அதற்குப்போட்டியாகப் பிரகாசமடைய, “அம்மா.. என்ன இந்த நேரம் அழைத்திருக்கிறீர்கள்..? ஏதேனும் முக்கியமான சமாச்சாரமா..? ம்ம்ம்ம்… எனக்குத் தெரிந்த வரையில் அப்படி ஒன்றும் இல்லையே..! சொல்லுங்கள்.. அப்பா எங்கே..? இருவரும் சாப்பிட்டாயிற்றா..?” எனக்கேட்க,

எதிர்முனையில், “இல்லடா.. உன்னிடம் பேசவேண்டும் எனத் தோன்றியது. அதனால்தான் அழைத்தேன். மற்றபடி எதுவுமில்லை. அப்பா கடை வரைக்கும் சென்றிருக்கிறார். உன்னை வேலை செய்யும் நேரத்தில் நான் தொந்தரவு செய்யவில்லையே..? இல்லை அப்புறமாக பேசவா..?”

“அதெல்லாம் இல்லைமா.. வரைந்த கவிஞன் அலுவலகம் சென்றிருக்கிறார். அதனால் நீங்கள் உங்கள் பொறியாளர் மகளைத் தாராளமாக தொந்தரவு செய்யலாம்..”

“தொந்தரவு எல்லாம் இல்லை. இந்த வாரம் ஊருக்கு வாடா.. உன்னைப்பார்த்து ஒரு மாதமாயிற்று..”

“ஏன் மா.. நான் இல்லாமல் அப்பாவும் நீங்களும் ‘போலாமா… ஊர்கோலம்.. பூலோகம் எங்கெங்கும்..’ என்று பாடிக்கொண்டு ஊரைச்சுற்றிக்கொண்டிருப்பீர்களே…! என்ன திடீர் பாசம்..? ம்ம்ம்.. வர முயற்சி செய்கிறேன்..” சிறிது நேரம் உரையாடிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் யோசனையோடு வேலையாட்களின் பணியை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தாள்.

‘என்ன சொல்லி விடுப்புக் கேட்பது..? எதைச்சொன்னாலும் வரைந்த கவிஞன் வறுத்தெடுத்து விடுவாரே…!.. ஆனால் அப்படியே விடுப்புக் கொடுத்தாலும் இரண்டு முழு நாட்கள் அவரைக்காணாமல் இருக்க வேண்டுமல்லவா..!’

மையல் கொண்ட அவள் மனம் கலங்கிய நீர்த்தடாகமாக தெளிவற்றுத் திணறிக்கொண்டிருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "என் ஜீவன் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

என்னதான் மாயமோ..? இந்த மூன்றெழுத்துச் சொல்லில்..! ஈரைந்து திங்கள் சுமந்து பெற்று பாராட்டி சீராட்டி வளர்த்து உலகை அறிமுகப்படுத்திய பெற்றவர்களின் கண் மண் தெரியாத பாசத்தையும் பின்னே தள்ளிவிட்டு  நொடிப்பொழுதில் இந்தக்காதல் ஜெயித்து விடுகிறது..!

கவிவர்ணாவின் மேஜையில் ஏகப்பட்ட கோப்புகள் ‘என்னைக்கவனி’ எனச் சிதறிக்கிடக்க, அவன் விழிகள் கனவில் சஞ்சரித்துக்கொண்டும், இதழ்கள் புன்னகையைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டும் முற்றிலும் வேறுபட்ட உலகில் இருந்தான்.

காலையில் அவன் செவிகள் கேட்க நேரிட்ட ‘வரைந்த கவிஞன்’ என்ற தனக்குச் சூட்டப்பட்ட பெயரும், அதைத் தொடர்ந்த அவளது உரையாடல்களும் அவனை இன்பக்கடலில் மூழ்கி முத்தெடுக்கச்செய்து கொண்டிருந்தன.

அலுவலக வேலைகள் விரைவாக முடியவே, தளத்திற்குச் (Site) சென்றான் கவிவர்ணா. இவன் வரவை அறியாத சிகா, பேச்சில் மூழ்கியிருந்தாள். கவிவர்ணாவல் எதேச்சையாக அவள் அம்மாவிடம் பேசும்போது தன்னைக்குறிப்பிட்ட பேச்சைக் கேட்க நேர்ந்தது.

காதலனாக அவள் வார்த்தைகளை இவனால் ஆக்கிரமித்துக்கொள்ள இயலாவிடினும் ஏதோ சித்திரவதை செய்யும் ஒரு மூத்த பொறியாளராக இருப்பதில் கடவுளைக்கண்ட பக்தனாக பேறுவகை கொண்டு நேரம் போவதறியாமல் சிறகு விரித்துப் பறக்காத குறையாகப் பறந்து கொண்டிருந்தான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 07 - சந்யோகிதாmahinagaraj 2019-02-04 16:20
செம.... மேம்... :clap: :clap:
கவிஞர் பயங்கர கேடி போல... ;-) :D
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 07 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-04 19:44
ஹா...ஹா.. நன்றி மகி நாகராஜ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 07 - சந்யோகிதாmadhumathi9 2019-02-04 06:43
wow nice epi sis. :clap: :thnkx: 4 this epi. (y) waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 07 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-04 14:55
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 07 - சந்யோகிதாsaaru 2019-02-03 12:35
Nice and cute dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 07 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-04 15:00
நன்றி சாரு ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 07 - சந்யோகிதாAdharvJo 2019-02-03 12:18
Thendral vandhu theendumbodhu Ena vanamo manasula :dance:
greeneries all around
aroma of freshness
Sweetness of honey
Sparkles of glittering stars
Ippadi neriya solla thonadhu adhu Ena mayamo manthiramo theriyalain solla mudiyadhu...inimai inimai inimai oovaru ezhuthilam puthunarvai pookavaikum inimaiyum pasumaiyum :clap: :clap: loved each and every word ma'am :hatsoff: Fb-a siga marandhutangala?? Hitler ena ippadi adhiradiyaga irangitaru 😍😍 looks life he is the oorumai alar (screte yarukkum sollidathinga) 😝 look forward to read next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 07 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-04 15:07
ஊக்கத்தை அளிக்கும் வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
-1 # வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-07-சந்யோகிதாரேணுகா சிவா 2019-02-03 11:09
Nice mam.baby nalladichi mam :thnkx: kaviyam sigavum loverssa?marriage couplsa? :Q:
Waiting for next epi mam.
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-07-சந்யோகிதாAdharvJo 2019-02-03 12:06
Ouch sorry Renuka accidentally scroll panumbodhu unlike bottom touch seithuten :sad: pls don't mind.
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-07-சந்யோகிதாசந்யோகிதா 2019-02-04 15:09
கருத்துக்களுக்கும் உங்கள் ஆர்வத்துக்கும் நன்றி ரேணுகா சிவா ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top