Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

 

தொலைதூரம் விரைந்தாலும்

தொடர்பற்று இருந்தாலும்

தொழில்செய்ய விழைந்தாலும்

துரத்தும்  நிழலுருவமாய்

விடைபெற மனமின்றி எனைப்

பின்தொடரும் சில வினாக்கள்..!

விழிகளில் உன் விடைஅறிந்தும்

விடைசொல் என் செவிகேளாமல்

விமர்சனம் மீளாத்தவம் செய்ய

விடுகதையாய் வரம் கிடைத்தால்

என் செய்வேன் நான்..?

ன் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருந்த நாடகத்தைத் தடுக்க இயலாமல் தானும் அதிலொரு அங்கமாகிப்போயிருந்தாள் சிகா. எது எப்படியாயினும் தன்னை மீறி எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பதில் மனம் சற்று ஆறுதல் தந்தது.

ஆனால் மாப்பிள்ளை வீட்டார் தன் வீட்டுக்குள் வரும்வரை சலனமின்றி இருந்தவள் மனம் அவர்களைக் கண்டவுடன் எவ்வளவு பெரிய பிசகான காரியம் தன்னால் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறியவந்து பதட்டமடைந்தது.

மாறாக வந்தவர்களுக்கு சிகாவைப் பிடித்துப்போக, இவளின் சம்மதம் கேட்காமலே மேற்கொண்டு திருமணத்தை எப்போது வைத்துக்கொள்வது, எங்கு வைத்துக்கொள்ளலாம் என்பன பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். மாப்பிள்ளையாக வந்திருந்தவனோ அடிக்கடி சிகாவை ஆராய்ச்சி நோக்கில் பார்த்துக்கொண்டிருப்பது சிகாவுக்குத் தெரிந்தாலும் அவனைப் பார்க்கக்கூட தோன்றவில்லை இவளுக்கு.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

செய்வதறியாது நின்றிருந்தவள் மனதில் உறுதியைத் தந்து நின்றது அவளை ஈன்றவர்களின் பெயரில் அவள் வைத்திருந்த நம்பிக்கை. என்ன நடந்தாலும் முடிவெடுக்கும் அதிகாரம் இவளின் கையில் தானே கொடுக்கப்படும்..?

மகளின் முகத்திலிருந்தே அகமறிந்த அவள் தந்தை, “எதற்கும் பொண்ணும் பையனும் பேசி முடிவெடுத்துக்கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.. வாழப்போவது அவர்கள் தானே..?” எனச்சொல்ல மாப்பிள்ளை வீட்டாரும் ஆமோதித்தனர்.

மாப்பிள்ளையும் சிகாவும் தனியே பேசும் சூழ்நிலை அமைந்தது. ‘இத்திருமணத்தில் விருப்பமில்லை’ என சொல்லிவிடலாம் என சிகா எத்தனிக்கையில், அவன் ஆரம்பித்தான்.

“மிஸ்.சிற்பிகா.. என்னைப்பற்றி ஏற்கனவே உன் வீட்டார் உன்னிடம் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன்.. எனக்கு முழு சம்மதம்.. நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள திருமணத்திற்குப்பிறகான காலம் முழுவதும் காத்துக்கொண்டுள்ளது. இந்த ஐந்து நிமிடத்திற்குள்ளா நாம் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறாய்.. போகலாமா..?”

‘அடப்பாவி.. என் வீட்டில் நான் வாய் திறந்து கேட்டிருந்தாலல்லவா உன்னைப்பற்றி சொல்லியிருப்பார்கள்..? ஒரு கை தட்டினால் ஓசை வருமா..? உன் சம்மதம் சொன்ன நீ என் சம்மதம் பற்றி ஒரு வார்த்தை கேட்பதல்லவா நியாயம்..? ஒரு சம்மதம் கூட உன் வாழ்க்கைத்துணையாக வரப்போகிறவளிடம் உனக்குக் கேட்கத் தோன்றவில்லை.. பின் வாழ்நாள் முழுதும் எப்படி நீ வசந்தத்தை நிலைக்க வைப்பாய்..?’ மனதினுள் வசைமாரி பொழிந்தாள் சிகா.

அவள் மனம் கவிவர்ணாவிடம் சென்றது அவளறியாமல். வாய்திறந்து சொல்லாமல் என் மனம் படிப்பவர் அவரல்லவா..! ஆனால் சூழ்நிலையின் வசம் சிக்கிக்கொண்ட தன் மாபெரும் பிழையை எண்ணி கண்ணீர் வழியத் தொடங்கியது.

ஏதேதோ நினைத்தவள் “ம்ம்ம்.. போகலாம்” எனச்சொல்லி வழியத் தொடங்கிய கண்ணீரை ஒருவாறு கட்டுப்படுத்தினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லதா சரவணனின் "காதல் இளவரசி..." - காதல் & மர்மம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

உள் அறையில் தஞ்சம் புகுந்த அவளிடம் பின்னோடு வந்த அவள் தாய், “சிகா.. சம்மதமா உனக்கு..? நன்றாகப் பேசினாரா மாப்பிள்ளை..?” எனக் கேட்க, “அம்மா.. என்னை மன்னித்து விடு.. எனக்கு விருப்பமில்லை.. இந்தச் சம்பந்தம் வேண்டாம்” எனச்சொல்ல சிலையாகிப்போனாள் தாய்.

வெளியே மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, இங்கே மகளின் பதில் கேட்டு என்ன சொல்வது என அறியாமல் திகைத்தாள் அவள்.

நிலைமையைப் புரிந்துகொண்ட தந்தை “மன்னித்து விடுங்கள், சிகா ‘உடனடியாக திருமணம் வேண்டாம்.. ஒரு வருடம் கழித்துப் பொறுமையாகப் பார்க்கலாம்’ என்கிறாள். நேற்றிலிருந்தே அதைத்தான் வலியுறுத்தினாள். நான்தான் உங்களை வரச்சொன்னேன். யாருக்கு யார் என்று எழுதியிருக்கிறதோ.. அதன்படி தானே நடக்கும்..!” எனக்கூற

மாப்பிள்ளை வீட்டாரின் முகம் அஷ்ட கோணலாகியது. இரு குடும்பத்தார்க்கும் பழக்கமான நபரான சிதம்பரம், “திருமணத்தை ஒரு வருடம் கழித்து நடத்திக்கொள்ளலாம். இப்போது சிறிய அளவில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம்” என்று அடுத்த குண்டைப் போட்டார்.

“எனக்கும் விருப்பம் தான்.. பொண்ணு வேண்டாம் என்கிறாள். ஒரு வருடம் கழித்து அப்போதைய நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரியாது. அதனால்தான் யோசிக்க வேண்டியுள்ளது.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாsaaru 2019-03-01 07:08
Nice update sanyohitha
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-04 15:14
நன்றி சாரு ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாmadhumathi9 2019-02-25 14:01
:clap: nice epi.waiting to read more. :GL: :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-25 18:32
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாmahinagaraj 2019-02-25 11:20
வாவ்.. ரொம்ப அருமையா இருக்கு தோழி.. :clap: :clap:
அழகு தான் சிபியும், அவளின் சிந்தனைகளும்.. :lol: :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-25 12:02
நன்றி மகிநாகராஜ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாabimahesh 2019-02-25 07:44
Nice update Mam.. Waiting to see what happens next..
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-25 12:03
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாPadmini 2019-02-24 19:14
nice update Sanyokitha!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-24 22:21
மிக்க நன்றி பத்மினி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-10-சந்யோகிதாரேணுகா சிவா 2019-02-24 18:55
Super mam.sirpigaveta goal very nice.kavi resignation acceptpanuvangala?waiting for next epi mam.
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-10-சந்யோகிதாசந்யோகிதா 2019-02-24 22:20
நன்றி ரேணுகா சிவா ஜி :-)
உங்கள் ஆதரவையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி என்னை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி ஜி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாRanju 2019-02-24 16:47
Superbbb episode mam... Sirpiga oda future plan super... Sirpiga sudden ah resignation letter kudupanga nu expect pannala... Next episode kaga waiting.....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-24 22:14
சிகாவின் முடிவு நானும் கூட எதிர்பாராத ஒன்று தான். facepalm . என்ன நிகழ்ந்தாலும் என் பேனா முனை தான் பொறுப்பேற்க வேண்டும். :P பொறுத்திருந்து பார்க்கலாம்.. ஆதரவுக்கு மிக்க நன்றி ரஞ்சி :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாAdharvJo 2019-02-24 16:10
Ninga yen ottuketaka sonningan ippo purinjadhu madam ji :D Sahavasa dhosham from Ragu and Hitler :P I think secret kuda bits and pieces ah than therinjika mudiyumn :o Sibi oda goals are simply superb and she is very practical :yes: hope she soon gets out of the dilemma about kavi.
Will Ragu accept the resignation?? cool update ma'am :clap: :clap: secret therinjikaaa waitinggggggg (shsssssssss) thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-24 22:09
ஹா..ஹா.. நீங்கள் சொல்வது சரிதான் ஜி.. :grin: சகவாசதோசம்.. :sad: இந்த வாரம் இரகசியங்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்.. கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி ஆதர்வ்ஜோ ஜி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாRaVai 2019-02-24 11:53
சந்யோகிதா, அடிப்படையில், ஒரு கவிஞர்! அதனால், அவர் எண்ணங்களும், கற்பனையும், எழுத்தும் எல்லாமே கவிநயம் சொட்டுகிறது, வித்தியாசமான நோக்கு! பாராட்டுகள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 10 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-24 22:05
நன்றி ரவை ஜி :-) உங்களின் பாராட்டும் வார்த்தைகள் அதற்குரிய தகுதியை நான் பெற என்னை ஊக்கப்படுத்தி வழிநடத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை.. :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top