Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame 

தோழிகளிருவரும் பேச ஏராளமான கதைகள் நீண்ட வரிசையில் நீ நான் என போட்டியிட்டுக்கொண்டு காத்திருந்தன. ஆனால் காலம் வேறுவிதமான சூழ்நிலையுடன் அவர்களை எதிர்கொள்ளக் காத்திருந்தது.

தனது ஒரே பெண்ணின் திருமணத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் அபியின் தந்தை.

முகூர்த்தத்துக்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்த நிலையில் உற்றார் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு நெருங்கிய சொந்தங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பந்தல் போடும் ஆட்கள் ஒருபுறம் அவர்கள் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்க, மின் விளக்குகள் அமைக்கப் பணிக்கப்பட்டவர்களும் அவர்களின் வேலையை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர். வீடும் வாசலும் மாட்டுச்சாணம் கொண்டு மொழுகப்பட்டு தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது.

கிராமப்புறத்திற்கே உரிய பண்போடு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் அடிக்கடி வந்து அவர்களால் இயன்ற பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். ஆக மொத்தம் அபியின் வீடு மகிழ்ச்சியுடன் கூடிய பரபரப்புடன் வந்தோரை வரவேற்றுக்கொண்டிருந்தது.

மணப்பெண்ணுக்கே உரிய நாணமும் மகிழ்ச்சியும் அபியின் அழகை மெருகூட்டியிருந்ததைக் கண்டு சிபிக்கு உள்ளூர மகிழ்ச்சி. அதற்கேற்றாற்போல அபியும் வாய் ஓயாமல் இன்னும் சில நாட்களில் தன் கணவனாக மாறப்போகும் ஸ்ரீராமின் புகழைப் பாடிக்கொண்டிருந்தாள். அவள் வாய் ஓய்வெடுத்த பொழுதுகளில் அவளது அத்தை மற்றும் பெரியப்பா மகள்கள் மூவரும் இவளைச் சீண்டிக் கொண்டிருந்தனர்.

அபியின் தாய் உணவு பரிமாற தோழியர் இருவரும் பேசிக்கொண்டே ஒருவாறு உண்டு முடித்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

உணவுக்குப்பின்னர் உண்ட மயக்கத்துடன் பயணம் செய்த களைப்புச்சேர சிபிக்கு தூக்கம் கண்ணைச் சொருகியது. அபியும் போனால் போகட்டும் என்று சற்று இரக்கப்பட்டு உறங்க அனுமதி தந்தாள்.

மாலை சிபி கண் விழித்ததும் விழிக்காததுமாக அவளைத் தன் கிராமத்தைச் சுற்றிப்பார்க்க ஆயத்தப்படுத்தினாள் அபி.

அபி தயாராகிக் கொண்டிருப்பதைக் கண்ட அவள் தாயார், “அபி… எங்கே செல்கிறாய்..? உனக்கு எத்தனை முறை சொல்வது..? சொல்லிச் சொல்லி எனக்குத் தான் வாய் வலிக்கிறது.. விருந்தினர்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் கல்யாணப் பெண்ணாக இலட்சணமாக வீட்டில் இருந்தால் தானே..? கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு திரிய வேண்டியது..” என சலித்துக் கொண்டிருக்கும் போதே இடையிட்டாள் அபி.

“அம்மா.. இன்னும் எண்ணி சொற்ப நாட்களே நான் நம் வீட்டில், நமது கிராமத்தில் இருக்க முடியும்.. ஏதோ இப்போதுதான் சிகாவும் நம் வீட்டிற்கு வர வாய்ப்பு கிடைத்துள்ளது.. இப்போது அவளுக்கு ஊரைச் சுற்றிக் காட்டாவிட்டால் இனி எப்போதுமே வாய்ப்புக் கிடைக்காது.. ப்ளீஸ் அம்மா..” என செல்லம் கொஞ்ச அதற்கு மேலும் தடுக்க மனமின்றி அனுமதி கொடுத்தாள் தாய்.

இதற்குள் தயாராகி வந்த சிபி அங்கே குப்புறப் படுத்து உறங்கிக்கொண்டிருந்த அபியின் அத்தை மற்றும் பெரியப்பா மகள்களைக் கண்டு, “அபி.. உன் கஸின்ஸ் எல்லாரையும் எழுப்பி அவர்களையும் கூட்டிக்கொண்டு போகலாமே..? இன்னும் ஜாலியாக இருக்கும்…” எனக் கூற

“அடியே.. அவர்களை கிளப்பிச் செல்வதற்குள் இருட்டிவிடும்.. வா.. வா.. சீக்கிரம்” என கைப்பிடித்து இழுத்துச் சென்றாள்.

சிபிக்குமே தன் வாழ்வில் அபி அறியாமல் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் அவளிடம் சொல்லிட தனிமை தேவைப்பட்டது. அது மட்டுமின்றி காதலில் விழுந்த பெண்கள் தன் உள்ளங்கவர் நாயகனை பற்றிச்சொல்ல கால நேரம் தான் அவர்களுக்குப் போதுமோ..?

வீட்டு வாசலிலிருந்து நீண்ட அந்தப் பாதையில் இருபுறமும் சலசல வென்று வாய்க்கால் நீரோட அதற்கு இணையாக நெற்பயிர்கள் தலையை ஆட்டி வழியெங்கும் அவர்களை வரவேற்றது.

அந்த அமைதியான அழகான சூழலைக் கெடுத்தது அபியின் திடீர்க்கேள்வி. “சிகா… என்ன நடந்தது சொல்.. எதற்காக நீ ராஜினாமா கடிதம் கொடுத்தாய்..?”

என்ன சொல்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் விழித்தாள் சிபி.

“என்னடி பேயைக் கண்டது போல முழிக்கிறாய்..? எனக்கு எப்படித் தெரியும் என்றா..? மகேன் சொன்னான்.. உன் மீது நான் அப்போதிருந்த கோபத்திற்கு அளவேயில்லை.. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லத் தோணவில்லை உனக்கு.. அப்படியென்ன தலை போகிற காரியம் ராஜினாமா கடிதம் கொடுக்கும் அளவிற்கு..?”

“இல்லை அபி.. நானே உன்னிடம் சொல்ல வேண்டுமென நினைத்தேன்.. ராஜினாமா கடிதம் கொடுப்பதற்கு முன் உன்னிடம் ஆலோசிக்கலாமென கூட நினைத்தேன். ஆனால் கல்யாணப் பொண்ணாக சந்தோசத்தில் இருக்கும் உன்னை எதற்கு என் துக்கத்தைச் சொல்லி கஷ்டப்படுத்த வேண்டுமென சொல்லவில்லை.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாsaaru 2019-04-28 11:30
Nice update dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாPadmini 2019-04-22 22:08
nice update Sanyogitha!! eagerly waiting for next week!
Reply | Reply with quote | Quote
# வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-17-சந்யோகிதாவர்ணம் தீட்டீய காதல் 2019-04-22 06:56
Super epi mam.
Waiting for read more :clap:
What happen to next. :Q:
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-17-சந்யோகிதாசந்யோகிதா 2019-04-22 20:14
நன்றி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாShanthi S 2019-04-21 23:10
cute episode Sanyogita.

suspense vachu mudhirukinga. rendu perum santhipangala? if so athan after effects enavaga irukumnu parpom.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-22 20:15
நன்றி சாந்தி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாAbiMahesh 2019-04-21 19:22
Nice update Mam.. Karna veetil okay aagiruchu,Sibi side ena aagum nu pakka waiting Mam :thnkx: Last la varathu Ranjith ahh?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-22 20:16
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாAdharvJo 2019-04-21 19:15
Pleasant and colorful update ma'am 👏 👏👏 👏 but indha ranjith eppadi Inga vandharu :Q: he already realized his mistake right adhai sibi kitta solluvara??
:dance: hero sir approval.vangitara 😍😍 but sibi oda parents ena solluvanga?? Look forward to see what happens next. Thank you and keep rocking 👍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-22 20:17
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாmadhumathi9 2019-04-21 14:32
:clap: nice epi.suspensa irukku.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-22 20:18
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாSrivi 2019-04-21 14:21
Sema update.. yaaru adhu Ranjith a ??
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-22 20:19
நன்றி ஸ்ரீவி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாRanju 2019-04-21 13:17
Super episode sanyogitha... Eagerly waiting for next episode :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 17 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-22 20:20
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top