Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Chillzee STARS of 2018</strong></h3>

Chillzee STARS of 2018

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 3 votes

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

காலைக்கதிரவன் தன் பொன்வண்ண கதிர்களால் பூமி மங்கையை அலங்கரித்து சில நாழிகை கழிந்திருந்தது. உழவர்கள் உழைத்துக் களிப்புற தத்தம் காளைகளுடன் நிலத்தை நோக்கி பசுமை சூழ்ந்த அந்த மண்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

“சிகா……சிகா….!!... சீக்கிரமா எழுந்திரு…. மணி பத்தாகுது…. பல் விலக்கிவிட்டு சாப்பிடு” என்று கத்திக் கொண்டிருந்தாள் அன்னை ராதா.

அன்னையின் அவசரம், வயிற்றைக் கிள்ளும் பசி என எதையும் கண்டு கொள்ளாமல் நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்திருந்தாள் மகள். அவளின் அந்தப்போக்கு சற்று கோபத்தை வரவழைத்திருந்தாலும் பொறுமையுடன் தன் மகளை எழுப்பி “கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோ சிகா… நான் வயலுக்கு கிளம்புறேன்.. சாப்பிட்டு விட்டு ஒய்வெடு” என அறிவுரை வழங்கிவிட்டு வேலைக்கு புறப்பட்டுச் சென்றிருந்தாள் அன்னை. ஆனால் தூக்க கலக்கத்துடன் எழுந்து கதவினை தாளிட்டுக்கொண்டு மீண்டும் உறக்கத்துடன் உறவாடினாள் நம் கதாநாயகி.

நீண்ட கூந்தலும், சராசரி உயரத்தை விட சற்று கூடுதலான உயரமும், களையான முக அமைப்பும், கொடி போன்ற மெல்லிய உடலமைப்பும், மாநிறத்தை விட சற்று சிவந்த தோல் நிறமும் கொண்ட இருபத்திரண்டு வயது அழகிய பதுமை சிற்பிகா. மொத்தத்தில் பழைய காவியங்களில் கதாநாயகியை வர்ணிக்க வரைந்த கவிவரிகளின் பொருளுக்கு இலக்கணமானவள்.

ஆரம்பம் முதலே அரசுப்பள்ளியில் பயின்ற சிகாவிற்கு சென்னையில் உள்ள அரசுக்கல்லூரியில், அதிலும் அந்த பிரபலமான கல்லூரியில் இடம் கிடைத்தது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லைதான். இரவு பகலாக உறக்கத்தைத் தாரைவார்த்துவிட்டு கடும் முயற்சி செய்து படித்ததன் பயன்கள் மற்றும் வேதனைகள் அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?” என்பதற்கேற்ப கல்லூரியிலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சியடைந்திருந்தாள். கல்லூரி வளாக நேர்முகத்தேர்விலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றதன் பயனாக தற்போது மிகப்பெரும் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.

அவளிடம் இயல்பாகக் குடி கொண்டிருந்த துறுதுறு நடவடிக்கையும், ஆரவாரமில்லாத அமைதியான போக்கும் மற்றோரிடம்  நற்பெயரை ஈட்டித்தருவன.  இருப்பினும், பழகுவதற்கு எளிமையாக இருப்பதுபோல் தோன்றினாலும் அவ்வளவு விரைவாக அவளை யாரும் நெருங்கிட முடியாத வலையைத் தன்னுடைய நாகரீகமான பழக்க வழக்கங்களால் பின்னியிருந்தாள்.

குறிப்பாகத் தன் தந்தையைத் தவிர மற்ற ஆண்களைப் பேச்சளவில் கூட தன் வட்டத்திற்குள் நுழைய அனுமதிப்பதில்லை. கண்ணில் கண்ணியமும், நிமிர்ந்த நேர்மையும் கொண்ட சிகாவின் மீது அவ்வப்போது ஆண்களின் சபலப்பார்வைகள் படிவதைப்பற்றி பெரிதாக ஆச்சரியப்பட எதுவுமில்லை.

வார இறுதி நாட்களில் மாதத்திற்கொருமுறை ஊருக்கு வருவது அவள் வழக்கம். என்னதான் சென்னை மாநகரில் அடுக்குமாடி விடுதியில் சொகுசான நாகரீக வாழ்க்கை வாழ்ந்தாலும், தேனி மாவட்டத்திலுள்ள தன் கிராமத்தின்மீது அவளுக்கு அலாதி பிரியம்.

எங்கு பார்த்தாலும் பசும்போர்வை போர்த்தியது போல் பச்சைப் பசேலென தென்றலின் தாலாட்டில் நடனமிட்டுக் கொண்டிருக்கும் நெற்பயிர்களையும், தொலைவில் எல்லைகளாக வானளாவி நிற்கும் மலைத்தொடர்களையும், இவைகளுக்குப் போட்டியாக “இதோ நானிருக்கிறேன்” என பரந்து விரிந்து தன் அழகைக் காட்டிக் கொண்டிருக்கும் சிற்றருவியின் நதியையும் காண்கையில் யாருக்குத்தான் கிராம வாழ்க்கையின் மீது மோகம் ஏற்படாது?

வெகுநேரத்திற்குப் பின்னர் பயண அலுப்புக் கலைய எழுந்தவள், தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு தனக்குப் பிடித்தமான அந்த மரத்தடியில் அமர்ந்து இயற்கையின் அழகு போதையை ரசித்துக் கொண்டிருந்தாள். ஏனோ சில மாதங்களாக அவள் மனதை அரித்துக் கொண்டிருந்த எண்ணம், இன்று தடயமின்றி எங்கோ மறைந்து கொண்டது.

சற்று நேரத்தில் அன்னையின் வருகையை உணர்ந்தவள், பசுவைக் கண்ட கன்றாக துள்ளிக் குதித்து ஓடி அன்னையை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

பெற்றோருக்கும் இவள் வருகை வார்த்தைகளால் வரையறுக்க இயலாத மகிழ்ச்சியினைத் தரும். காரணம், தாய் ராதா மற்றும் தந்தை மணி இருவரும் அத்தை மகள் மற்றும் மாமன் மகன் உறவினர் என்பதாலோ என்னவோ, கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுகள் கழித்துத்தான் அவதரித்த ஒரே மகள்.

அதுமட்டுமின்றி, இரத்த சொந்தத்தில் நிகழ்ந்த திருமணம் என்பதால், எவ்வித குறைபாடுகளுமின்றி குழந்தை பிறந்திட வேண்டும் என்ற எண்ணற்ற வழிபாடுகளின் வரவாக பூலோகத்தில் பூத்தவள் சிகா. அக்கிராம மக்களுக்கும்,  தங்கள் கிராமத்தில் படித்து, சிபாரிசு எதுவுமின்றி தன் திறமையால் மட்டும் உயர்ந்த சிகாவின் மீது தனிப்பட்ட அன்பு. அவளின் வரவை அறிந்தால் வீடு தேடி வந்து நலம் விசாரித்துச் செல்வர். சிகாவும் தன்னால் இயன்ற அளவு தன் கிராம மாணாக்கர்களுக்கு கல்விச்சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள். 

இவ்வாறாக வார இறுதி நாட்கள் கழிய, தந்தை தாயிடம் கண்ணீர்விடைபெற்று, சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அந்த விரைவுப் பேருந்தில் சாளரம் வழியே பின்னோக்கி ஓடிய மரஞ்செடிகளை வெறித்துக் கொண்டிருந்தன அவளின் கருவிழிகள்.  

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாAdharvJo 2018-12-24 16:11
wow poetic start ma'am :clap: :clap: village atmosphere-I rombha elegant-aga describe seithu irukinga (y) So kavi sir-k kadhanayagi-i theriyum but siga-vuk avara theriyalaye :Q: what happened in the past?? Therindhu kola waiting. Thank you for the beautiful epi. Keep rocking. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாசந்யோகிதா 2018-12-24 16:48
Thank u so much AdharvJo Jii :thnkx: Next epi la past ah solla try pandren.. :-) Thank u Jiii :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாsasi 2018-12-24 15:49
நல்லாயிருக்கு ஆரம்பம் அழகா ஆரம்பிக்குது கதை நைஸ்
வாழ்த்துக்கள் மேம் வர்ணனையில கலக்கியிருக்கீங்க தேனி அழகுதான்
கவிவர்ணாவோட காதலி யாரு சிகாவா? அந்த போட்டோல யார் இருந்தாங்க? அடுத்த எபியில கவியோட காதலியை தெரிஞ்சிக்கலாமா மேம்
உங்கள் கவிதைகள் அழகாக இருக்கும் எபி ஆரம்பிக்கறப்பவோ முடிக்கறப்பவோ கவிதை இருந்திருந்தா அட்டகாசமா இருந்திருக்கும்னு எனக்கு தோணுது தப்பா ஏதாவது எழுதியிருந்தா மன்னிக்கவும் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாசந்யோகிதா 2018-12-24 16:05
Thank u so much Sasi Jiii for ur appreciation and interest :thnkx: I will incorporate your comments on upcoming epi... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாmahinagaraj 2018-12-24 11:59
செமையா இருக்கு மேம்.... :clap: :clap: 😍👌
அழகான பெயர்கள்...
கதை நடை சூப்பர்... :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாசந்யோகிதா 2018-12-24 12:39
Thank u so much Mahinagaraj Jiii :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாmadhumathi9 2018-12-23 21:19
wow :clap: nalla thodakkam. :clap: nice epi.waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாசந்யோகிதா 2018-12-23 21:32
நன்றி மதுமதி ஜி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாRaVai 2018-12-23 16:57
கவிதாயினி சந்யோகிதாவின் புதிய தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
வித்தியாசமான கரு, நடை, சம்பவங்கள், சொற்கள், கோர்வைகளுடன் கதையைத் துணிவுடன் தொடர்ந்து எழுதி கவிதைத் துறையில் மின்னுவதுபோல, கதைத் தொடரிலும் பிரகாசியுங்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாசந்யோகிதா 2018-12-23 21:32
நன்றி ரவை ஜி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாSahithyaraj 2018-12-23 12:29
Hi kavithayini Sanyogitha naval asriyaiyai avatharithathirku vazhthukkal. Aarambame amarkalam. Hero and heroine names superb. :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 01 - சந்யோகிதாசந்யோகிதா 2018-12-23 13:57
Thank u so much Sahithyaraj Jii :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

Mor

AN

Eve
18
EVUT

-

NiNi
19
MMSV

ILU

MAMN
20
GM

EMPM

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top