Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

தியைப் போல செவ்வனே ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையின் விதியில் பெரும்பாலோனோர் அதன் திசையிலேயே துடுப்புச்செலுத்தி தம் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அவ்வாழ்க்கையில் தான் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கும் விதியையே குற்றம் சாட்டிச் செல்கின்றனர். சிலர், வாழ்க்கைப்படகை விதியின் எதிர்த்திசையில் சிரமத்துடன் செலுத்தி பலத்த கரகோசத்துடன் வெற்றியிலக்கை அடைகின்றனர்.

வெகுசிலரோ, உலகோர் வியக்கத்தக்க வகையில் நதியின் திசையையே தனது தேவைக்கேற்றாற்போல வடிவமைத்துக் கொண்டு வரலாற்று வானில் விண்மீன்களாக ஜொலிக்கின்றனர். நிகழ்கால சந்ததியினரும் சறுக்கிவிழும் பொழுதுகளில் மீண்டெழவும், இலட்சிய இலக்கினைக் கையில் ஏந்திடவும் அச்சிலரின் வாழ்வை முன்னுதாரணமாகக்கொண்டு தத்தம் வாழ்வில் முன்னேறிச் செல்கின்றனர்.

கவிவர்ணாவும், 'நதிப்பெண்ணுக்கு வலிக்குமோ..?' என அஞ்சி நதியின் திசையிலேயே துடுப்பைச்செலுத்தி அறுபது முழுமாதங்களை எதிர்பார்ப்போடு கடத்திய தன் முட்டாள்தனத்தை எண்ணி வருந்தாத நொடியிருக்கும் எனத் தோன்றவில்லை.      

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அன்று சீனியர் என்ஜினியராக பொறுப்பேற்றிருந்த கவிவர்ணா, தனது என்ஜினியர் குழுவினைச் சந்திக்க பிற்பகலில் நேரம் ஒதுக்கியிருந்தான். எத்தனையோ அறிஞர்களுடன் கலந்துரையாடிப் பாராட்டுக்களையும், நன்மதிப்புக்களையும் எளிதாகப் பெற்ற அவனால் இன்று ஏனோ மனதினுள் தன்னை மீறி எழுந்த படபடப்பையும், இனம்புரியாத உணர்வையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

தன் தாய் சாந்தி மற்றும் தந்தை கணேசனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு தனது பிரபல “K.S. கன்ஸ்ட்ரக்சன்ஸ்” நிறுவன பொறுப்புக்களை தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு இங்கு சீனியர் என்ஜினியராக பொறுப்பேற்கும்போது இருந்த மகிழ்ச்சியின் ஆரவாரம் தற்போது சற்று மட்டுப்பட்டிருந்தது. 'தான் அவசரகதியில் செயல்பட்டுவிட்டோமோ..?'எனத் தோன்றினாலும், கடவுள் தனக்களித்த ஒரு வாய்ப்பாக இதனைக் கருதியது அவனின் மறுபக்க உள்ளம்.

அதேநேரத்தில் ஐவர்குழு புதிய திட்டத்திற்கான தொடக்கவேலைக் குறிப்புகள் அடங்கிய கோப்புகளை மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தது. ஏனெனில், அவர்கள் காதுக்கு எட்டியவரை, புதிய சீனியர் என்ஜினியர் மிகவும் கண்டிப்பானவர்… தனது இருபத்தைந்து வயதிலேயே அறிவு ஞானத்துடன் அனுபவக்கல்வியையும் கற்றுத் தேர்ந்தவர்… என்னதான் எல்லோரிடமும் சகஜமாக பழகினாலும் வேலைத்திறனில் நூறு சதவீதம் எதிர்ப்பார்ப்பார்.

மதிய உணவுக்குப்பின்னர், சந்திப்புக் கூட்ட அறைக்குள் நுழைந்த கவிவர்ணா, வழக்கமான அறிமுகப் படலத்தினையும், வாழ்த்துக்களையும் சிறுபுன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, தனது புதிய திட்டமான ஈ.சி.ஆர் சாலையில் கட்டப்பட வேண்டிய சொகுசு பங்களாவின் வடிவமைப்பினை விவாதிக்கத் தொடங்கினான் தன்னவளின் விழிகளைச் சந்திக்காமல். மாறாக, சிகாவின் விழிகளோ அவனை அணுவணுவாக ஆராய்ச்சி செய்யும் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தது.

ஆறடிக்கும் குறையாத, மாநிறத்துடன் கூடிய திடகாத்திரமான உடல், புராணகால கோயில்களில் அக்காலத்தில் கைதேர்ந்த சிற்பிகள் பார்த்துப் பார்த்துச் செதுக்கியது போன்ற கம்பீரமான முக அமைப்பு, நெருக்கமாக வளர்ந்திருந்த அவன் சிகை, நிதானமான அதே சமயத்தில் அழுத்தமான பேச்சு, சினேகமான பார்வை, மிகக்குறுகிய காலத்தில் எதிரே இருப்பவர்களை மதிப்பிட்டு அதற்கேற்றாற்போலச் செயல்படும் அவனின் தலைமைப்பண்பு, தனது எண்ணத்தினை மற்றோருக்கு எளிதாகப் புரியவைக்கும் வகையில் தேவையான உடல் அசைவுகள் என எதிலும் அவளால் குறைகாண முடியவில்லை.

சற்று நேரத்தில் மகேன், “ஸார், ஒருமுறை நாங்களும் வீட்டு மனையைப் பார்வையிட்டால் திட்டமிடலுக்கு எளிதாக இருக்கும்” எனத் தன் தரப்பினை எடுத்துக்கூறவும்தான் சுற்றுப்புறத்தை உணர்ந்து தன்னிலை அடைந்தாள் சிகா. 

கவிவர்ணாவின் பார்வை இன்று முதன்முறையாக அவளிடம் படிந்து மீண்டு, “இந்த வார இறுதியில் மனையைப் பார்க்கச் செல்ல ஏற்பாடு செய்கிறேன்….. அதற்குள்ளாக அவரவர்களின் திட்ட ஐடியாக்களை சமர்ப்பித்து விட்டால் உங்களுக்கும் எளிதாக இருக்கும்” எனக் கூறி கூட்டத்தினைக் கலைத்துவிட்டு விரைந்தான் கவிவர்ணா.

தனது அறைக்குள் நுழைந்த கவிவர்ணாவின் மனமோ வண்ணத்துப்பூச்சியாக ஆகாயத்தில் சிறகு விரித்துப் பறந்து கொண்டிருந்தது. இன்று சிகாவின் விழிவீச்சு எல்லைக்குள் தான் இருந்ததை நினைக்க நினைக்க  அவனின் காதல் கொண்ட மன வண்ணத்துப்பூச்சி பூமிக்கோளைத் தாண்டி விண்வெளி அண்டத்தில் காதல் தேனை ருசித்துக் கொண்டிருந்தது.

உள்ளத்தில் பசுமரத்தாணியாக பதிந்திருந்த சிகாவுடன் நிகழ்ந்த முதல் சந்திப்பு ஏனோ அழைப்பில்லா விருந்தாளியாக அவன் நினைவுவாசலுக்கு வந்தது.

நாமும் கவிவர்ணாவின் நினைவுவாசலில் காத்திருக்கும் ஐந்தாண்டு வயது விருந்தாளியை வரவேற்கச் சிறிது நேரத்தைச் செலவிடுவோம்….!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாranju 2019-01-04 16:46
Hi sanyogitha ungaloda kavidhai yellamey semaya irukum... first story varanam theetiya kadhal sirpamey title eh superbb.. story um interest ah poguthu...kavivarna nice name...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-04 17:21
Thank u so much Ranju jiiii :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாyogasivasadhana 2019-01-03 15:02
hi sanyogitha i like your all kavidhai. .. ungaloda first story varnam theetiya kadhal sirpamey interest ah iruku... kavivarna name super...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-03 16:17
Thank u Yogasivasadhana jiii for the energetic comments :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாmahinagaraj 2018-12-31 13:03
சோ ஸ்வீட்.....😍😊
வித்தியாசமான கதைகளம்.... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாசந்யோகிதா 2018-12-31 14:37
நன்றி மகி ஜி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாmadhumathi9 2018-12-31 07:04
:clap: (y) nice epi.interesting aaga irukku.waiting to read more. :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாசந்யோகிதா 2018-12-31 14:38
நன்றி மது ஜி :thnkx:
Reply | Reply with quote | Quote
# MrsVijaya kalva 2018-12-31 03:48
Hello madam.
I like your story and full of full pure tamil.
Congratulations
Reply | Reply with quote | Quote
# RE: Mrsசந்யோகிதா 2018-12-31 14:42
Thank u Vijaya Jii :thnkx: Just try pannen. Hope readers can understand the terms by equialent English words.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாAdharvJo 2018-12-30 20:48
:clap: :clap: Awesome Sanyogita ma'am (y) Teaser-a etho oru poem padicha feel irundhadhu :yes: It gives a gusty feel. Indha epi la vandha rendu poems-um rombha pidichi irundadhu wow

Boss ninga ippadi sincere sigamani range la scene potta 60 masam illai inum 60 varusham analum unga kadhal theradhu.. :D ;-) Idhula pasi eduka kudadhun oru sabam viduvingala steam Yaru venumnalum agori's aga mariduvanga kavi parthu :P But unga munji ma'am ivalo azhaga varnikuranga but unga aalukk ninga flash agalaye :Q: waiting to know d mystery!!

Thank you for translating terms wherever required. FB scenes varumbodhu period story padikura feel kodupadhu (bellbottom :P ) You have carved it beautifully :hatsoff: Keep rocking.

BTW starting phrases-a rombha impressive aga irundhadhu ma'am (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாசந்யோகிதா 2018-12-31 14:47
Thank u Adharv Jo jii :thnkx: Kavivarnava thittathinga... Paavam..avare sogathula irukar :P ..Tamil ah eluthalam nu try pannen. So equialent English words can help the readers to understand easily. Thank u for ur beautiful comments :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாSrivi 2018-12-30 19:44
Nice update mam.. FB sikram sollidunga mam micham meedhi illama😃.. advance new year wishes
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 02 - சந்யோகிதாசந்யோகிதா 2018-12-31 14:50
Ha..ha.. seekarama solla try pandren Srivi jii...Thank u so much for ur wishes. Wishing this new year may brings countless surprises and happieee moments for u.. :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top