Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 19 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 19 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame 

லகில் ஏறக்குறைய அனைத்து காதலர்களின் உயிரை அவ்வப்போது பருகிக் கொண்டிருக்கும் உன்னத நோயான பசலை நோய் சிபியையும் விட்டு வைக்கவில்லை. பல ஆண்டுகளாக பார்த்துப் பழகிய நண்பர்களைப் பிரிந்தபோதோ அல்லது வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுப் பிரிந்தபோதோ கூட இப்படியொரு வேதனயை அனுபவித்ததாகத் தெரியவில்லை சிபிக்கு. தன்னவனைக் காணாமல் கிட்டத்தட்ட நாற்பத்து எட்டு மணி நேரங்களே ஆகியிருந்தபோதும் பல ஜென்மங்களாக அவனுடைய திருமுகத்தைக் காணாதது போல உணர்ந்தாள் அவள்.

ஆனால் தலைக்கு மேலே குவிந்திருந்த வேலைகள் இப்படிப்பட்ட உணர்வை கர்ணாவால் உணர இடங்கொடுக்காத அளவுக்கு அவனுடைய நேரத்தைத் தின்று கொண்டிருந்தன. இரண்டு கட்டுமானத் தளங்களின் வடிவமைப்பு (design) அங்கீகரிக்கப்பட்டு தொடக்க வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அதே சமயத்தில் புது வேலைகள் எடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வேலைகளும் அவனை ஆக்கிரமித்திருந்தன.

அபியின் வீட்டில் மணப்பெண்ணுக்கான சடங்குகள் நடந்து கொண்டிருந்ததால் பெரும்பாலும் சிபி தனிமையில் விடப்பட்டிருந்தாள். என்னதான் சமவயது உறவுக்கார பெண்கள் சூழ இருந்தாலும் அவள் மனம் மட்டும் கர்ணாவைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அவளூடைய கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருந்த திருமண சம்பிரதாயங்களும் அவைகளின் பங்குக்கு கர்ணாவினை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன.

அவளுடைய திருமணமும் இப்படி உறவுகள் சூழ நிகழ வேண்டும் என்பது அவள் கனவல்லவா..!

அன்று இரவின் தனிமையில் வீட்டின் மேல்தளத்தில் நின்று வெண்ணிலவை ரசித்துக்கொண்டிருந்த கர்ணாவிற்கும் இதே யோசனைகள்..! ஏனெனில் இதுவரை அவன் சிபியின் பெற்றோருடைய சம்மதத்தைப் பெறுவதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவியிருந்தன.

மேற்கொண்டு என்ன செய்வதென யோசித்துக்கொண்டிருந்தவனைப் பார்த்துக் கோடான கோடி நட்சத்திரங்களும் வாய்பொத்தி சிரிப்பதுபோல உணர்ந்தான் அவன்.

எவ்வளவு பார்த்துப் பார்த்து செய்த காரியங்கள்..! கடைசியில் ஒரு பலனுமின்றி விரலுக்கிரைத்த நீராகிப்போயின..! இயல்பான துறுதுறுப்பும் சாதுரியமும் தொலைந்தவனாக குறுக்கும் நெடுக்குமாக எவ்வளவு நேரம் நடந்து கொண்டிருந்தானோ..?

நீண்ட நேரமாக மகனைக் காணவில்லை எனத் தேடிவந்த சாந்தி, “கண்ணா…. என்னடா…? காலையில் நடைப்பயிற்சி செய்வதற்கு நேரமில்லை என்பதற்காக இந்த நேரத்தில் நடந்து கொண்டிருக்கிறாயா..? அதுவும் சாப்பிடாமல் கொள்ளாமல்..?” என்று வினவினார்.

திடீரென ஒலித்த தாயின் குரலில் சிந்தனை கலைந்தவன் “அதெல்லாம் இல்லைமா.. கொஞ்ச நேரம் காற்றோட்டமாக நடக்கலாம் என்றுதான்… நீங்களும் அப்பாவும் சாப்பிட்டாயிற்றா..?”

“என்றைக்கும் இல்லாமல் இன்று உன் அப்பா நீ வராமல் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்…! வா.. சாப்பிட்டுவிட்டு பிறகு பேசிக்கொள்ளலாம்”

உணவு மேஜையில் அந்தச் சிறிய குடும்பம், கணேசனின் புண்ணியத்தில் கேலியும் கிண்டலுமாக மகிழ்ச்சியுடன் உணவருந்தி முடித்தது.

ஆனால் கர்ணாவின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தாலும் அது அவனுடைய விழிகளை எட்டவில்லை. இதனை சாந்தி அடிக்கடி கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.

காலையிலிருந்து கர்ணாவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.. தன்னுடைய அழைப்புக்கும் எவ்வித பதிலுமில்லை என்பதை எண்ணி சிபி சற்று கவலையுடன் மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்த்தும் எவ்வித பதிலும் எதிர்ப்புறமிருந்து அவளுக்குக் கிட்டவில்லை.

நீண்ட நேரமாக படுக்கையில் புரண்டுகொண்டு அபியுடன் வழவழத்துக்கொண்டிருந்தாலும் வினாடிக்கொரு முறையேனும் கர்ணாவைத் தேடி அலைந்தன அவள் எண்ணங்கள்.

பேச்சு சுவாரசியத்தில் மிகவும் ஆர்வமாக எதையோ வினவியவளுக்கு பதில் வராமல் போகவே அப்போதுதான் சிபியைக் கவனித்தாள் அபி. தன்னுடைய கேள்விக்கு பதில் தராமல் வேறெதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தவளை புதிராகப் பார்த்துவிட்டு தன் உரத்த குரலில் நிகழ்வுக்கு அழைத்தாள்.

“சிபி…. சிபி… என்னடி…? வரைந்த கவிஞன் உன் மூளையை ஆக்கிரமித்து ஏதாவது வரைந்து கொண்டிருக்கிறாரா..?!!”

“அ…அதெல்லாம் ஒன்றுமில்லை அபி….” மழுப்ப முயற்சித்துத் தோற்றாள்.

“ம்ம்ம்… என்ன செய்வது..? நீ சொன்னால் நம்பிக்கொள்ள வேண்டியது தான்..!!” என்று கேலி செய்தாள் அபி.

“இல்லை அபி.. காலையிலிருந்து அவரிடமிருந்து அழைப்பும் வரவில்லை.. என் அழைப்பை ஏற்கவும் இல்லை.. அதுதான் என்னவோ ஏதோ என….”

‘எவர் அவர்..?’ என்று கிண்டலைத் தொடங்க எத்தனித்தவள் தோழியின் கலங்கிய முகத்தைப் பார்த்து சற்று மனமிறங்கி, “ஏதாவது வேலையாக இருக்கும்.. உன்னைப்போல எந்நேரமும் காதலில் கரைந்து கொண்டிருந்தால் அப்புறம் எப்படி இளந்தொழிலதிபராக கொடி கட்டிப் பறப்பது..? கண்டதையும் யோசிக்காதே நீ..! இன்னும் சிறிது நேரத்தில் உன் அவரே அழைப்பார்..!!” என்று ஆறுதல் மொழி கூறினாள்.

மன்னவனே…!

கடல் தாண்டிய தொலைவுகள் வேண்டாம்!

கடமைதனில் உழலும் உன் கண்ணியம் வேண்டாம்!

காதோடு உரசும் உன்மொழி வேண்டாம்!

காதல்கூறும் உன் கவிதைகள் வேண்டாம்!

கனவுகளில் உன் நகர்உலா வேண்டாம்!

கண்களில் உன் நிழற்படம் வேண்டாம்!

உன் சுவாசம் சொல்லும் சங்கதி போதும்!!

கண்ணெதிரே உன் நடமாடல் போதும்!!

என் பிறப்பு ஈடேறி வெற்றிக்கரை காண

காதல் அத்தியாயம் உந்தன் மூச்சுக்காற்று

எந்நாளும் என்னருகில் வேண்டும்..!!!

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 18

Episode # 20

Go to Varnam theettiya kathal sirpame story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-19-சந்யோகிதாRenuga siva 2019-05-12 16:48
Nice epi mam.bt kutty epi.waiting for read more.
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே-19-சந்யோகிதாசந்யோகிதா 2019-05-13 10:52
நன்றி ரேணுகாசிவா ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 19 - சந்யோகிதாmadhumathi9 2019-05-12 16:01
:clap: nice epi. (y) adutha epiyai padikka miga aavalaaga kaathu kindu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 19 - சந்யோகிதாசந்யோகிதா 2019-05-13 10:53
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 19 - சந்யோகிதாabimahesh 2019-05-12 15:36
Nice update Mam! Karna Sibi veetla pesitara ?? And they didn't accept it :o :sad: :thnkx: and Waiting for next update Mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 19 - சந்யோகிதாசந்யோகிதா 2019-05-13 10:53
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 19 - சந்யோகிதாRanju 2019-05-12 13:08
Seekrama sibi Oda parents kitta permission vangattum pavam karna .... Orey page than potrukinga... Kavidhai super :thnkx: sanyogitha :dance: waiting for next episode :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 19 - சந்யோகிதாசந்யோகிதா 2019-05-13 10:54
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 19 - சந்யோகிதாAdharvJo 2019-05-12 12:54
ouch :eek: idhai ethir parkalai :sad: why did they reject? Idhai sibi kita sollamal ivaru ena mounam viradham kadai pidikurara facepalm how will sibi react to this? waiting to read next update. nice update ma'am :clap: :clap: Poem super (y) thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 19 - சந்யோகிதாசந்யோகிதா 2019-05-13 10:54
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 20 May 2019 01:22
சில நேரங்களில் நேசிக்கும் மனிதர்களின் வார்த்தைக் குதறல்களைவிட அவர்களின் மெளனம் மிகவும் பாதிக்கக்கூடியதாக அமைந்து விடுகிறது. கர்ணாவின் அமைதி சிபியையும் அப்படித்தான் வருத்திக்கொண்டு இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து சிபியின் அலைபேசி குரலெழுப்ப மரணவாயிலை எட்டிப்பார்த்த அவள் உயிர் மீண்டு அவளிடம் தஞ்சமடைந்தது.

“கர்ணா…..” பல வருடங்கள் கழித்து நிகழும் சந்திப்புப்போல அவள் குரலில் அத்தனை ஏக்கம்.

**********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-20
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 13 May 2019 08:30
உலகில் ஏறக்குறைய அனைத்து காதலர்களின் உயிரை அவ்வப்போது பருகிக் கொண்டிருக்கும் உன்னத நோயான பசலை நோய் சிபியையும் விட்டு வைக்கவில்லை. பல ஆண்டுகளாக பார்த்துப் பழகிய நண்பர்களைப் பிரிந்தபோதோ அல்லது வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுப் பிரிந்தபோதோ கூட இப்படியொரு வேதனயை அனுபவித்ததாகத் தெரியவில்லை சிபிக்கு. தன்னவனைக் காணாமல் கிட்டத்தட்ட நாற்பத்து எட்டு மணி நேரங்களே ஆகியிருந்தபோதும் பல ஜென்மங்களாக அவனுடைய திருமுகத்தைக் காணாதது போல உணர்ந்தாள் அவள்.

ஆனால் தலைக்கு மேலே குவிந்திருந்த வேலைகள் இப்படிப்பட்ட உணர்வை கர்ணாவால் உணர இடங்கொடுக்காத அளவுக்கு அவனுடைய

********************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-19
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 21 Apr 2019 19:15
தோழிகளிருவரும் பேச ஏராளமான கதைகள் நீண்ட வரிசையில் நீ நான் என போட்டியிட்டுக்கொண்டு காத்திருந்தன. ஆனால் காலம் வேறுவிதமான சூழ்நிலையுடன் அவர்களை எதிர்கொள்ளக் காத்திருந்தது.

தனது ஒரே பெண்ணின் திருமணத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் அபியின் தந்தை.

முகூர்த்தத்துக்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்த நிலையில் உற்றார் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு நெருங்கிய சொந்தங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பந்தல் போடும் ஆட்கள் ஒருபுறம் அவர்கள் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்க,

********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-17
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 07 Apr 2019 23:44
கொடிய வெயிலின் தாக்கம் முகிலின் சிறுமழைத்தூரலில் காணாமல் போவதுபோல சில ஆண்டுகளாக சிபியின் மனதை உறுத்திக்கொண்டிருந்த நினைவுகள் கர்ணாவின் உயிர்க்காதலால் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.

பொதுவாக இயற்கையாக கனியும் கனிகள் இயல்பிலேயே சுவை மிகுந்தவையாக இருக்கும். அதுபோலவே மனித வாழ்வில் சுவை கூட்டும் நிகழ்வாக திகழும் காதல் மலரும் தருணமும் எவ்வித வினையூக்கியும் இன்றி வினைப்பயன் எதையும் எதிர்பாராமல் இருளைக் கிழித்து ஒளிரும் விடியலாக அமைந்தால் பாவவினை தீர்க்கும் இப்பிறப்பும் புண்ணிய தீர்த்தமாகும். அப்படிப்பட்ட காதல் எத்தகைய தருணத்தில் தன் வாழ்வில் மலர்ந்ததென ஆராய்ந்து கொண்டிருந்தாள் சிபி.

********************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-16
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 31 Mar 2019 20:20
உணர்வுப்பூர்வமான அவர்களின் உரையாடலைக் கலைத்தது அவனுடைய கைபேசி. சற்று எரிச்சலடைந்தவனின் முகம் அழைப்பது தாயார் என்றறிந்தவுடன் கனிந்து, “அம்மா…. இப்போதுதான் உங்கள் மருமகளுடன் மனம் விட்டு பேச ஆரம்பித்திருக்கிறேன்.. நான் திரும்ப அழைக்கும்வரை எனைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்றான் உரிமையுடன்.

எதிர்த்திசையில் என்ன சொன்னாரோ அவன் தாய், இலேசான வெட்கத்துடன் புன்னகையை உதிர்த்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

இதையனைத்தும் இமைக்காமல் விழியகல பார்த்துக்கொண்டிருந்த சிபியின் முகத்தில் அதிர்ச்சி கலந்த வியப்பு.

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-15

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top