Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

பெண்ணே..!

பேசும் என் சித்திரமே..

உன் புறத்தழகில்

என்மதி மயங்கவில்லை

உன் அகமதியின்

ஆழத்தில் வீழ்கிறேன்

பேச்சிழக்க வைக்கிறாய்

உன்னருகில் என்னை

சிற்பிக்குள் முத்தாய்

உந்தன் சிந்தனைகள்

கோடை மழையாய்

உந்தன் சொற்பேச்சுகள்

சிலிர்க்க வைக்குதடி..!

என்தவம் கலைக்குதடி..!

னது திருமணம் மற்றும் எதிர்காலம் குறித்த மிக அழகான கருத்தை வெளியிட்ட சிகாவினை தோழிகள் கிண்டல் செய்ய, செவ்வானமாய் சிவந்தது அவள் முகம். நாணத்தில் சிவந்த அவளை அப்படியே மனதில் புகைப்படமாகப் பதித்துக்கொண்டு அதற்கு மேலும் அங்கிருப்பது சரியல்ல என எண்ணி கிளம்பினான் கவிவர்ணா.

தொடர்ந்த நாட்களிலும் கல்லூரி வளாகத்தில், காற்றில் மிதக்கும் புழுதித்துகள்களில் கூட அவள் முகம் தெரிகிறதா..? என அணுஅணுவாக ஆராயத் தொடங்கியது அவன் விழிகள்.

ஆனால் எப்போதும் உடனிருக்கும் அவன் நண்பர்கள் சில நாட்களாக அவ்வப்போது அவன் காணாமல் போவது கண்டு விசாரிக்க, மாணவப்பிரதிநிதி தொடர்பான வேலைகள் எனக் காரணம் கூறி சமாளித்தான்.

ஆனாலும் சொன்னதை சொன்னபடியே ஏற்றுக்கொண்டால் நண்பர்களின் இலக்கணத்திற்கு இழுக்காகும் அல்லவா..! அதனை நிரூபிக்கும் விதமாக முன்பைவிட இப்போது அவனுடன் அதிகமாக ஒட்டிக்கொண்டு திரிந்தனர் அவர்கள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

முத்தாய்ப்பாய், ‘எங்களின் வற்புறுத்தலில் தான் நீ மாணவப்பிரதிநிதி தேர்தலுக்கு நின்றாய்.. ஆனால் அதன் வேலைப்பளு அதிகமாக இருக்கும்போது உன்னை கண்டுகொள்ளாமல் நாங்கள் விட்டுவிட்டோம்.. மன்னித்துவிடுடா.. இனிமேல் நாங்களும் உன் வேலையைப் பங்கிட்டுக்கொள்கிறோம்’ என்ற அங்கலாய்ப்பு வேறு..!

என்ன சொல்லி சமாளிப்பான் கவிவர்ணா..?! முடிந்தவரை  நண்பர்கள் சூழ இருக்கும்போது சிகாவின் பின்னால் தான் பார்க்கும் ஒற்றன் வேலையை தவிர்த்துக்கொண்டான். அரசல் புரசலாக நண்பர்களுக்குத் தெரிந்தால்கூட கேலி செய்யும் பேர்வழியில் ஏதேதோ சொல்லிக் கதையைத் திசைதிருப்புவதில் அவர்களும் சளைத்தவர்கள் அல்ல.

அவளின் மீது அவன் கொண்ட அன்பை எந்த வகையில் சேர்ப்பது என அவனே அறியாத பட்சத்தில் நண்பர்களிடம் அவன் என்னவென்று உரைப்பான்..?

அன்று, கவிவர்ணாவின் நண்பர்கள் பேராசிரியரின் (Professor) கீழ் குழுவாகப் பிரிந்து பருவத்தேர்விற்காக (Semester) புதிய திட்டக்கருத்தினை (New projects) முன்மொழிந்து, அவரின் மேற்பார்வையில் ஆய்வகத்தில் (Laboratory) செய்முறைச் சோதனைகளை (Practical tests) உரிய சோதனை இயந்திரத்தில் (Testing machine) மேற்கொண்டிருந்தனர்.

அதுவரை அமைதியாகத் தவம் செய்து கொண்டிருந்த அந்த ஆய்வகம், திடீரென பல சலசலப்பு அலைக்கற்றைகளை (Sound waves) உள்வாங்கி எதிரொளிக்கத் தொடங்கியது.

மதிய உணவுக்குப்பின்னர் வரும் முதல் வகுப்பில் முதலாமாண்டு கட்டிடப்பொறியியல் மாணவர்களுக்கு கல்லூரி அட்டவணைப்படி அந்த ஆய்வக வகுப்பு (Lab period) போலும்.

ஆய்வக நுழைவாயிலில், மாணவர்கள் உரக்கப்பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வர, அவர்களில் சிலர் முறையான பாதுகாப்பு உடைகளின்றி (Lab coat and shoes) உள்நுழைவதைக்கண்ட பேராசிரியரின் முகத்தில் தீச்சுவாலைகள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

(RR) பிந்து வினோத்தின் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

கண்டிக்கும் குரலில், “அமைதியாக வாருங்கள்..” எனக்கூற, மாணவர்கள் முகத்தை பவ்யமாக வைத்துக்கொண்டு ஒருவர்பின் ஒருவராக உள்நுழைந்தனர்.

மாணவர்களைத் தொடர்ந்து அமைதியே உருவாய் உள்நுழைந்த சிகா கவிவர்ணாவின் கண்ணில் தென்பட்டாள். அதுவரை அவன் மீது வியர்வைத்துளிகளைத் தெளித்து நகர்ந்து கொன்டிருந்த மணித்துளிகள்,  இப்போது தென்றலில் தவழ்ந்து பன்னீர்த்துளிகளை வாரி இறைத்தது.

இவர்களுக்கு நேர் எதிர்த்திசையில் வரிசைப்படுத்தப்பட்டிருந்த இருக்கைகளில் முதலாமாண்டு மாணவர்கள் அமர பேராசிரியர் அவர்களின் வருகையை (Attendance) அதற்குரிய பதிவேட்டில் (Register) உறுதி செய்து கொண்டிருந்தார். அத்துடன் முறையான பாதுகாப்பு உடைகளின்றி வந்த மாணாக்கர்களுக்கு விடுப்புக்கான குறியீட்டையும் பதிவு செய்து கொண்டார்.

இதனை அறியாத சில மாணவர்கள் வழக்கம்போல அவர்முன் அதிஒழுக்கமானவர்களாக பாசாங்கு செய்துகொண்டிருந்தனர்.

சில மாணவர்கள் கவிவர்ணாவை ஏற்கனவே மாணவப்பிரதிநிதியாக (Student's representative) அறிந்திருந்ததால் வியப்புடன் பார்த்து புன்னகை பூத்தனர்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாAdharvJo 2019-03-05 21:00
:cool: poems and interesting update ma'am 👏👏👏

Indha nalavara valavar frnds gang Oda kutti troll was nice to read. Hitler parandhu vandhum use illayo :Q: sibi Ena panuvanga therindhu kola waiting. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-05 22:28
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) தவறாமல் கருத்துக்களை பகிர்ந்து ஊக்கப்படுத்தும் நல்உள்ளத்துக்கு மிக்க நன்றி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாmahinagaraj 2019-03-04 11:53
ரொம்ப நல்லா இருக்கு தோழி.. :clap: :clap:
கியூட்.. :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-04 12:43
நன்றி மகிநாகராஜ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாabimahesh 2019-03-03 19:36
Kavithai super Mam :hatsoff: Next enna aachu therinthu kolla waiting :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-03 21:36
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே-10-சந்யோகிதா.ரேணுகா சிவா 2019-03-03 14:30
Story very suspense,thirling.very nice mam.2nd kavithai very nice.lap scene la writing super mam.kavithai mathiri irunthu.waiting for next epi.
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே-10-சந்யோகிதா.சந்யோகிதா 2019-03-03 21:35
நன்றி ரேணுகாசிவா ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாmadhumathi9 2019-03-03 14:12
:clap: bnice epi.engum thadangal illaamal viruviruppaaga sendru kondu irukkirathu. (y) waiting 4 next epi. :GL: :thnkx: 4 this epi. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-03 21:34
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாRaVai 2019-03-03 13:54
சந்யோகிதா! நீங்கள் ஒரு வித்தியாசமான சிந்தனையாளர், கடும் உழைப்பாளி, செய்வன திருந்தச் செய்ய விழைபவர்! உங்கள் படைப்பிலிருந்து தெரிந்துகொண்டது, இவை! உங்கள் பயணம் வெற்றி என்பது உறுதி! எனது வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-03 21:33
நன்றி ரவை ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாRanju 2019-03-03 12:06
Nice episode sanyogitha... Next abi marriage ah...thendraley avanidam solliduvu situation kavidhai semma....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 11 - சந்யோகிதாசந்யோகிதா 2019-03-03 21:32
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top