Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 20 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 20 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame 

சில நேரங்களில் நேசிக்கும் மனிதர்களின் வார்த்தைக் குதறல்களைவிட அவர்களின் மெளனம் மிகவும் பாதிக்கக்கூடியதாக அமைந்து விடுகிறது. கர்ணாவின் அமைதி சிபியையும் அப்படித்தான் வருத்திக்கொண்டு இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து சிபியின் அலைபேசி குரலெழுப்ப மரணவாயிலை எட்டிப்பார்த்த அவள் உயிர் மீண்டு அவளிடம் தஞ்சமடைந்தது.

“கர்ணா…..” பல வருடங்கள் கழித்து நிகழும் சந்திப்புப்போல அவள் குரலில் அத்தனை ஏக்கம்.

“சிபி… கொஞ்சம் வேலைடா.. புது வேலைகளுக்கான அங்கீகாரத்திற்காக காலையிலிருந்து நிற்க நேரமில்லாமல் அலைய வேண்டியிருந்தது.. என் மேல் கோபமில்லையே..?”

தன்னவன் தொழில் சம்பந்தமாக அலைந்து கொண்டிருக்க தான் மட்டும் இங்கு சுகமாக நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோமே என வருத்தப்பட்டவள், “ஒருமுறை அழைப்பை ஏற்று என்னிடம் சொல்லி இருக்கலாம் அல்லவா..? எனக்கு உள்ளுக்குள் கலங்கிவிட்டது. என்னவோ ஏதோ என பயந்துவிட்டேன்.” என அறிவுறுத்தலில் ஆரம்பித்து அழுகையில் முடித்தாள்.

“சிபி…”

ஒற்றை வார்த்தையில், அதுவும் இரண்டெழுத்துப் பெயரில் காதலைச் சொல்லிட முடியுமா..? அதைக் கற்றுத் தேர்ந்திருந்தான் கர்ணா!

என்னவோ அவன் மொழிகள் அவளுக்குள் உடைந்திருந்த உள்ளத்தை நிமிடத்தில் சரியாக்கியிருந்தன.

அவளின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக முற்பட்டவன் அதில் ஓரளவு வெற்றியும் கண்டான்.

நேரம் இறக்கை விரித்துப் பறக்க முகூர்த்த நேரம் வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தது. திருமண சடங்குகள் உரிய முறைப்படி நடக்க, கூடியிருந்த சபையோர் முன் அபியின் கழுத்தில் மங்களகரமான மூன்று முடிச்சுக்களைப் போட்டு அவளைத் தன்னுடையவளாக்கிக் கொண்டான் ஸ்ரீராம்.    

சிபி மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தாள். தன் உயிர்த்தோழியின் மணவாழ்வு வெற்றிகரமாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கொண்டே அட்சதை தூவினாள் ஆனந்தத்தின் விளிம்பில் நின்றுகொண்டு..!

திடீரென ஒரு குரல் “அப்புறம், நான் எப்போது இதுபோல உன்னை என் சொந்தமாக்கிக் கொள்வது?” என காதோரமாக ஒலிக்க திடுக்கிட்டுத் திரும்பினாள்.

கிட்டத்தட்ட அவளை உரசிக்கொண்டு நின்றிருந்தவன் சந்தேகத்திற்கு இடமின்றி கர்ணாவே தான்.

அவள் விழிகளில் வினாடியில் வந்துபோன மாற்றங்கள் அவனுள் இதமான மழைச்சாரலைத் தருவித்தன. தனக்கான தேடல் அதில் வெளிப்பட முழுவதும் உறைந்துபோனான் அவன்.

பின்னிருந்து இவர்கள் மீது விழுந்த அட்சதைகள் இருவரையும் நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தன. அதே வேளையில் முகூர்த்த நேரம் முடிவடைய உறவினர்கள் கூட்டம் சிதறி உணவுப்பந்தியை நாடிச்சென்றது.

மணமேடையில் மணமக்கள் அவர்களுடைய வாழ்க்கையின் அழகான தருணத்தை புகைப்படச்சுருளில் பதிவேற்றிக்கொண்டனர். அந்த அழகிய தருணங்களில் தங்களையும் இணைத்துக் கொண்டனர் கர்ணாவும் சிபியும்.

தாய்முகம் காணும் சேயாய்

தாயுமானவனே உனை காணும் நொடி..!

தேன்சிட்டு மயங்கும் மலராக

தேவனே உன்னில் மயங்கும் நொடி..!

மண் சேரும் மழையாக

மன்னவனே உனை சேரும் நொடி..!

புல்லாங்குழல் நிறையும் காற்றாக

புயலோனே உன்னில் நிரம்பும் நொடி..!

ஆழி கலக்கும் ஆறாக

அன்பே உன்னில் கலக்கும் நொடி..!

நூறாண்டுக்குப் பின்னால்

நெடுந்தூரமாயினும் காத்திருக்கிறேன்

உன் காதல்கொற்றக்குடையில்

என்றென்றும் வீற்றிருக்க…!!

கிட்டத்தட்ட வந்திருந்த உறவினர்கள் அனைவரும் சென்றிருக்க மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் மண்டபத்தைக் காலி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 20 - சந்யோகிதாsaaru 2019-05-27 16:56
Oh god
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 20 - சந்யோகிதாAbiMahesh 2019-05-19 20:35
Ahh.. shocking end, enna aachu therinthu kola Waiting Mam.. Nice Epi! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 20 - சந்யோகிதாAdharvJo 2019-05-19 20:16
Achachoo :sad: Nala thane poittu irundhadhu yen ippadi oru shock news facepalm except the last scene rest of the epi was cool and cute ma'am :clap: :clap: hope we can expect ah cool epi next week :yes:

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 20 - சந்யோகிதாmadhumathi9 2019-05-19 18:05
:eek: facepalm ippadi aagivittathey.iruvarum entha pirachibai illaamal nalamudan irukka vendum. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 20 - சந்யோகிதாRanju 2019-05-19 13:49
Super episode sanyogitha :clap: but two pages than potrukinga.. achachooo Enna ayirukum sudden ah karna overtac pannum pothu ethavthu ayducha facepalm ... Eagerly waiting for next episode :Q:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top