Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 03 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 03 - சந்யோகிதா

Varnam theettiya kathal sirpame

ன்றைய தினம் நடைபெற்ற இருநிர்வாகசபைக் கூட்டங்களும் (Board Meeting) இனிதே முடிந்தது. அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் மற்றொரு கட்டுமான நிறுவனமும் தன் நண்பனின் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட விருப்பம் தெரிவிக்க, கவிவர்ணாவின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுகஎன்ற முதுமொழியையொத்து தன்னவளுடன் தன் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள எண்ணி அவளைத்தேடி அலைந்தது கவிவர்ணாவின் உள்ளம்.

உடனடியாக ஐவர்குழுவுடன் சந்திப்புக் கூட்டத்தினை (Meeting) ஏற்பாடு செய்தவனின் கண்கள், நொடிக்கொருமுறை அறைவாயிலைச் சோதனைசெய்து கொண்டிருந்தது. காரணம், சிகாவைத்தவிர மற்ற நால்வரும் அவரவர்களின் முதற்கட்ட விரிவான திட்ட அறிக்கையுடன் (Initial Detailed Project Report) கருத்துப்பகிர்விற்குத் (Discussion) தயாராக வந்திருந்தனர்.

காத்திருந்த பொறுமை பறந்துவிட, “சிகா எங்கே…? நேரந்தவறாமை பற்றி உங்களுக்கு நான் தனியாக சிறப்பு வகுப்பெடுக்க (Special class) வேண்டும் போலஅபி…. உடனடியாகச் சென்று அழைத்து வாருங்கள்உங்கள் ஆருயிர்த் தோழியைஎன்றவன் முடிப்பதற்குள்,

ஸார், அவளுக்கு மதியத்திற்கு மேல் சற்று உடம்புக்குச் சரியில்லைஅதனால் விடுப்புக்கடிதத்தினை (Leave letter) உங்கள் மேஜை மீது வைத்துவிட்டு விடுதிக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டாகிவிட்டதுமன்னித்துக் கொள்ளுங்கள் ஸார்அவள் சமாளித்துக் கொள்கிறேன் என்றுதான் கூறினாள்.. நான்தான் அனுப்பிவைத்தேன்என அபி கவலையுடன் மன்னிப்புக்கோரினாள்.

சிகா அலுவலகத்துக்கு அரைநாள் விடுப்புக் கொடுத்துவிட்டுச் சென்றதைத் தாமதமாக அறியவந்தனுடைய பகிர்ந்து கொள்ளப்படவேண்டிய ஆனந்தம் இருந்த இடம் தெரியாமல் ஆதவனைக் கண்ட பனித்துளியாக எங்கோ ஓடிச்சென்று மறைந்துபோனது.

என்னாயிற்று..? என்னிடம் சொல்லியிருக்கலாமே…? அல்லது அலுவலக ஆரோக்கியமையத்தில் (Health Center) பரிசோதித்திருக்கலாமே..?” எனக் கேள்விகளை அடுத்தடுத்து மூச்சுவிடாமல் கேட்க,

ஸார்அவளுக்குத் தலைவலிஓய்வுதான் தேவை.. மருந்து மாத்திரைகளை விட சிறிது  நேர உறக்கம் தலைவலிக்கு நல்ல பலனைத் தரும்அதனால்தான் விடுதிக்குச் சென்றிருக்கிறாள்அறிக்கையை (Report) நிச்சயம் நாளை காலை சமர்ப்பித்து விடுவாள் ஸார்…” என தோழிக்காகப் பரிந்துரைத்தாள் அபி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மனம் சற்றே நிம்மதியடைய, “போதும்நீங்கள் முழுநேர மருத்துவராகப் பிறகு முயற்சி செய்யலாம்விட்டால் அவளுக்கும் சேர்த்து உங்கள் அறிக்கையையே நகலெடுத்துச் சமர்ப்பித்துவிடுவீர்கள் போலஎன அபியின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நால்வரின் அறிக்கைகளை நோட்டம் விட்டான்.

ஏனோ அறிக்கையில் கவனத்தைச் செலுத்த முடியாமல், காற்றில் சிக்குண்ட சிறகாக அவன் மனம் அலைமோதிக்கொண்டிருந்தது. பின்னர், அறிக்கைகளைத் தன்னுடன் எடுத்துக்கொண்டவன், “ஸாரிஎனக்கு அவசர வேலை ஒன்று இருக்கிறதுநாளை காலை சந்திக்கலாம்என்று அறையைவிட்டு வெளியேறினான்.

நல்லவேளைஸாருக்கு அவசர வேலைசிகாவும் நாளை காலையில் அறிக்கையை சமர்ப்பித்து விடலாம்என மனதிற்குள் மகிழ்ந்தவாறே, சிகாவினைத் தொடர்புகொண்டவள், ‘நீங்கள் தொடர்புகொள்ளும் சந்தாதாரர் எண் தற்சமயம் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதுஎன்ற செய்திகேட்டு யோசனையில் ஆழ்ந்தாள்.

விடுதியில், ‘பதினெட்டுப் பட்டிக்கு மகாராஜா என்ற நினைப்புஎன்ன இளக்காரம் குரலில்சற்று வேகம் குறைவாகச் சொன்னால், வாய் வலித்துவிடவா போகிறது..? இல்லை என் கைதான் வலித்துவிடப் போகிறதா..? எல்லாம் திறமையால் வந்த அகங்காரம்…! எந்நேரமும் ஹிட்லர் போல ஒரு கடினத்தன்மையுடன் உலா வந்து மற்றவர்களையும் வார்த்தைகளால் வசைபாடுவது..’   என்றெழுந்த எண்ணங்களுடன் தன் தாயிடம் ஆறுதல்தேடி அவளை அழைத்தவள், “சிகாஇப்போதுதான்டா உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன்நூறு ஆயுசுநீயே அழைத்து விட்டாய்என்ற தாயின் நெகிழ்ந்த குரலில் கண்ட தனக்கான தேடலில் முழுவதும் தொலைந்துபோனாள். தாயுடன் வழவழத்துவிட்டு கைபேசியை அணைத்துப்போட்டுச் சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.

மனிதனின் மனம் ஒரு வினாடிக்குள் ஒளியைவிட எவ்வளவு அதிவேகமாகப் பயணிக்கிறது…! பல கடல்களையும், மலைகளையும், நிலப்பரப்புக்களையும் அதிவிரைவில் காற்று, வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் கடந்து தன் விருப்பப்பட்டவரின் இருப்பிடத்தை அடைகிறது…!!! ‘அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம்’, ‘சுதந்திரமாக இருஎவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதேஎன்ற பொன்மொழிகள் அருளிய தவப்புதல்வர் விவேகானந்தரின் வாக்குகளைக் கடைப்பிடிக்க மறுத்துத்தானே இன்றுவரை மனிதமனங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது…!

வளரும் பருவத்தில் பெற்றோர் மீது குழந்தைகளின் எதிர்பார்ப்பு, தளரும் பருவத்தில் பிள்ளைகள் மீது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, இடைப்பட்ட பருவத்தில் கன்னியர்கள் மீது இளங்காளைகளின் எதிர்பார்ப்பு என வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நம்மைச் சூழ்ந்துள்ளவர்கள் மீது எதிர்பார்ப்புக்கள் வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 03 - சந்யோகிதாmahinagaraj 2019-01-07 13:45
ரொம்ப அழகான வார்த்தை வர்ணனைகள்... :clap: :hatsoff:
அருமையா இருக்கு மேம்.. :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 03 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-07 15:16
கருத்துகளுக்கு மிகவும் நன்றி மகிநாகராஜ் ஜி :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 03 - சந்யோகிதாmadhumathi9 2019-01-07 07:32
:clap: (y) nice epi.waiting to read more. :thnkx: 4 this epi.interesting aaga irukku. :GL: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 03 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-07 10:23
Thank u Madhumathi jiii :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 03 - சந்யோகிதாAdharvJo 2019-01-06 19:55
:Q: Sika, kavi-a theriyadha mathiri acting panurangalo-n doubt :Q: Exactly Hitler thaan ivarukku apt ana name :D Your pure Tamil usage is an add on beauty to d story ma'am :clap: :clap: :hatsoff: Kavithagalum :cool: thozhigalin convo was nice so abhi inime adikadi vara matangalo facepalm Hitler sema perfectionist and expects the same :yes:
thank you for this interesting update (y) ini ena agumn therindhu kola waiting. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 03 - சந்யோகிதாசந்யோகிதா 2019-01-06 20:10
Thank u AdharvJo jii for the beautiful comments :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# வர்ணம் காதல் தீட்டிய சிற்பமே-3Renuga siva 2019-01-06 14:50
அழகான தமிழ் நடை.கதை நன்றாக உள்ளது.வாழ்த்துங்கள்.
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் காதல் தீட்டிய சிற்பமே-3சந்யோகிதா 2019-01-06 15:12
வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ரேணுகா சிவா ஜி :thnkx: :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

YNEA
13
VD

KNP

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

IOKK
16
Siva

NKU

Tha
17


VTKS

UNMT

Mor

AN

Eve
18
EVUT



NiNi
19
MMSV

ILU

YNEA
20
GM

KNP

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24


VTKS

UNMT

* Change in schedule / New series
* On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top