Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

முதனுக்குக்குள் ஒரு பரபரப்பு ஒரு வழியாக இந்தப் பெண் காதலை ஒத்துக் கொள்ளப் போகிறாள். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலுடன் வாசிக்கத் தொடர்ந்தான்.

வெள்ளைத்தாமரை இதழ்-13     இதோ ஒரு காதல் கதை  பகுதி-13

யாருடி அது ? - சத்யா வினவ குரல் முழுக்க ஆச்சரியமும், அதிர்ச்சியும். எனக்கு தான் அப்படி ஒரு எண்ணம் தோணுது. ஆனால்  அங்கேயிருந்து என்ன பதில்னு தெரியல. தெரிஞ்சதும் கண்டிப்பா சொல்றேன் என்றாள் ரம்யா நிதானமாக. ஏய் என்னடி இது? என்கிட்டே கூட சொல்லமாட்டியா?

கண்டிப்பா சொல்றேன். ஓகே ன்னு பதில்  வந்த பின்னர் சொல்றேன். ரம்யா புன்னகைக்க, அடிப்பாவி! நான் இத்தனை நாளா  உன்னோட உயிர்த் தோழி டி! சத்யா கேட்கவும் , இப்பெல்லாம் என் உயிரே என்னோடது இல்லன்னு தோணுது ! என்றாள் ரம்யா. என்னடி லூஸு மாதிரி உளறிட்டு இருக்க? சத்யா தொடர்ந்து கேட்க,  சரி அம்மா தேடுவாங்க. நான் கிளம்புறேன் என்று கிளம்பத் தயாரானாள் ரம்யா. எனக்கு அதிர்ச்சியக் கொடுத்துட்டு நீ ஹாயாத் தான் இருக்க, சத்யாவுக்கு பதட்டம், எனக்கும் எப்பவுமே படபடப்பாகத் தானிருக்கு. உன்கிட்ட எப்படா இந்த விஷயத்தைச்  சொல்லுவோம்னு தவிச்சுட்டிருந்தேன்.  நான் காலேஜ் பங்க்சன்ல பிசியா இருந்த ரெண்டு வாரம்  உன்னைப் பார்க்க முடியல . அதுக்குள்ள இப்படி அணுகுண்டு போடுறே என்று புலம்பியா சத்யாவிடம், இல்லடி, இது ஆறு மாசமா உள்ளுக்குள்ளே தான் இருந்திருக்கு. எனக்கு இப்போ தான் புரிஞ்சிருக்கு. எதுக்கும் நல்லா யோசி ரம்மி. தேவை இல்லாத பிரச்சனை உனக்கு வேண்டாம்.  அம்மா அப்பாக்கு மனக்கஷ்டம் வரும் என்றாள் சத்யா. எல்லாம் சரியா தான் இருக்கும்னு நம்பிக்கை இருக்கு.  சரி நேரமாச்சு நான் வரேன். திரும்பவும் பொறுமையா யோசி ரம்மி என்றாள் சத்யா விடாமல்,  “சரி பார்ப்போம். வர்றேன்!பை!” என்று கிளம்பினாள் ரம்யா.

வீட்டுக்குள் நுழைந்தால்,  கண்மணி வந்து காத்திருந்தாள்.  சாரி கண்மணி, சத்யா வீட்டுக்குப்  போய்  இருந்தேன்., ரம்யா சொல்லவும்” அது பரவாயில்லை ரம்மி. நாம இந்த கெமிஸ்ட்ரி செமினார் நோட்ஸ் மட்டும் சேர்ந்து எழுதிக்கலாம். நானும் சீக்கிரம் போகணும். என்றாள் கண்மணி.”வா மாடில போய்  உக்கார்ந்து எழுதுவோம்” என்று ரம்யா அழைக்க, இருவரும், மாடி அறையில் சென்று அமர்ந்தனர். சில நிமிடங்கள் செல்லவும், கண்மணி, எனக்கு போன்  அடிக்கிற மாதிரி சத்தம் கேட்குது . நான் என்ன னு  பார்த்துட்டு வரேன்.!

அம்மா, அதுக்குள்ளே  எழுதி முடிச்சிட்டீங்க ?என்று கேட்க, இல்லமா.  போன் அடிக்கிற மாதிரி சத்தம் கேட்டது என்றாள் ரம்யா. அதெல்லாம் போன் அடிக்கலையே என்று அம்மா பதில் சொல்ல, திரும்ப ரம்யா மாடிக்குக் சென்றாள். மேலே ஏறிச் சென்றதும்,  யார் போன்ல? - கண்மணி 

கேட்டதற்கு, போன் கால் வரவே இல்லையாம் என்றாள் ரம்யா சலிப்புடன். “ஏன் ரம்மி, யார் கிட்டயாவது இருந்து எதிர் பார்த்துட்டு இருக்கியா?கண்மணியின் கேள்விக்கு, ம் ..ஒரு எழுத்தில் பதில் சொன்னாள்  ரம்யா. இன்னும் சற்று நிமிடங்கள் கழித்து, மாடியில் இருந்தே தம்பிக்குக் குரல் கொடுத்தாள். ரகு எதாச்சும் போன் வந்துச்சா? ஒண்ணும்  வரல என்றான் ரகு.

ஏன்  ரம்மி  தவிச்சிட்டு இருக்க?  என்று கேட்ட கண்மணியிடம், அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல என்று சமாளித்தவாறே, எழுதி முடிச்சாச்சு கண்மணி. நாளைக்குப் பார்ப்போம் என்றாள்.

உன்கிட்ட ஒண்ணு  கேட்கட்டுமா ரம்மி?

என்ன?

நீ தினேஷைப் பத்தி என்ன நினைக்கிற? 

அவனைப் பத்தி நினைக்க என்ன இருக்கு?

அவ்ளோதானா ?

அவ்ளோதான் !

இருவரும் கீழே சென்றதும்,  கண்மணி சாப்பிட்டு போம்மா என்றார்கள் அம்மா. 

இல்லம்மா ஏற்கனவே நேரம் ஆகிடுச்சு. வீட்ல அம்மா தேடுவாங்க. இன்னொரு சமயம் சாப்பிடுறேன். 

இவ ஒழுங்கா சாப்பிடறதே இல்ல. எந்நேரமும் எழுதணும் படிக்கணும்னு எதையாவது சொல்லிக்கிட்டு சாப்பாட்டை ஓரங்கட்டுறா.  நீ எப்படி? நீயாவது ஒழுங்கா சாப்பிடுவியா ?

சாப்பிடுவேன்மா! . அவளையும் சொல்றேன். வரேன் மா !

சரிம்மா. பார்த்துப் போ. வீட்டுக்குப் போய் சேர்ந்ததும் போன் பண்ணி ரம்யாகிட்ட சொல்லிடு. தம்பியை வேணா கூட துணைக்கு அனுப்பவா.

இருக்கட்டும்மா நானே போய்டுவேன். வீட்டுக்குப் போனவுடன் போன் பண்றேன். கண்மணி கிளம்பிச் சென்றாள். தம்பியின் வாக்மென் அங்கே மேஜை மேல் இருந்தது. அதை  எடுத்துக் காதில் வைத்து ஒலிக்கவிட்டாள் !

"வேணா வேணா விழுந்திடுவேனா 

கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா "

அடாடா இந்த பாட்டா  வேண்டவே வேண்டாம்.  பார்வர்ட் பட்டனை அழுத்தினால் அடுத்த பாடல்.

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-06-16 13:32
wow interesting & nuce epi. :Q: avanga amma phone pandraangale enna nadakka pogutho theriyavillai.eagarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-06-20 16:04
Thank you friend :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharv 2019-06-16 11:27
:dance: sema interesting flow ma'am 👏👏👏 marubadiyum aunty kitta Sika vachitingale facepalm ;-) 6 masam ulla than irundhachama :D 😍😍 sema dialogue 👍

Hello hello andha pakkam dhinesh thana adha sollunga indha pakka rummy than 😝😝 curious to see aunt's reaction. Thank you and keep to rocking. Parunga adutha varum amudhan ninga pattu dedicate seithey epi mudichitingale nu feel panuvaru 😑
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 14 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-06-20 16:04
Thank you friend :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top