Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

தினேஷ் என்ன சொல்ல போகிறான், ரம்யா என்ன சொல்லப்போகிறாள் என்று அமுதனுக்கு உள்ளும் ஓர் குறுகுறுப்பு. தொடர்ந்து அடுத்த இதழை எடுத்தான்.

வெள்ளைத்தாமரை இதழ்-15    இதோ ஒரு காதல் கதை  பகுதி-15

ன்னது இது பிசிக்ஸ் மேடம் குடுத்தாங்களா?”

“இல்ல !  மேடம் உன்னைக் கூப்பிடவில்லை!”. 

“நான் தான் உன்னைக் கூப்பிட்டேன். இதைக் கொடுக்க. பிரிச்சுப் பார்.” 

பிரித்தாள் .. 

அதில் "ஐ  லவ் யூ " என்று   ரத்தத்தால் எழுதி இருந்தது.

பதறிப் போனாள் ரம்யா.

ஒரு நிமிட அதிர்ச்சிக்குப் பிறகு..

"என்னது இது? யார்கிட்ட  கொடுக்கணும்?" என்றாள்.

தினேஷ் "உனக்குத் தான் ரம்யா,  உன்னைத் தான் ரம்யா நான் ! எப்படி சொல்றதுன்னு தெரியல?” " “நீயும், நீயும் தானே?சொல்லு!”

"நோ! நோ !" பேப்பரைக்  கசக்கி அவன் முகத்தில் எறிந்து விட்டு வேகமாகப் படியிறங்கினாள்.

“ரம்யா! சொல்லிட்டுப் போ! ப்ளீஸ் ! “

“நோ!” என்றாள்  மறுபடியும் திரும்பி. 

வகுப்புக்குள் மறுபடியும் நுழைந்து தன்  இடத்தில் உக்கார்ந்தாள் , அவள் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. எல்லாரும் தன்னையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.  

“என்ன ஆச்சு? என்ன ஆச்சு ?” மெல்லிய குரலில் கேட்டாள் கண்மணி. ஒன்றுமில்லை “கண்மணி, எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணுவியா  ?”

என்ன சொல்லு பண்றேன் ?

இன்னிக்கு ஈவ்னிங் கிளாஸ் முடிஞ்சதும்  நீ கார்த்திக் கிட்ட பேசுவ தானே ?

ஆமா !

நீ கார்த்திக்கிட்ட சொல்லி தினேஷையும் இருக்க சொல்றியா? 

இருக்க சொல்றேன் கண்டிப்பா !

நீ கொஞ்சம் தண்ணி குடிக்கிறியா ?ஏன்  இவ்வளவு பதட்டமா இருக்க?. கையெல்லாம் நடுங்குது பாரு .

இல்ல வேணாம் நீ மறக்காம சொல்லிரு கண்மணி! அது போதும்!

ராபினும்,  கார்த்திக்கும் ஒர்க்ஷாப்  முடிந்து கிளாஸுக்கு  வந்தனர். தினேஷ் மேசை மீது தலை வைத்துப் படுத்து இருந்தான்.  

என்னடா இன்னும் தலைவலி சரி ஆகலையா? என்றான் ராபின்.

ஒர்க் ஷாப்ல நோட் ஃபோனபைட் அப்புறமா வேணா வந்து  ஃ சைன் வாங்கிக்கலாம்னு சார் சொன்னார். 

சரி ராபின். எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும். கொண்டு வரியா ?

சரிடா!

ராபின் வெளியேறிச் செல்லவும்..கார்த்திக் மட்டும் இருக்கையில்,

“சொன்னேன்டா, முகத்தில் வீசி அடிச்சிட்டுப் போயிட்டாடா!” அழுகிற குரலில் சொன்னான் தினேஷ். 

இப்போ தாண்டா கண்மணியைப் பார்த்தேன். ரம்யா உன்னை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னாளாம் .

ரம்யாவா? நிஜமாவா சொல்ற? நிஜமா தானா  ?

சரி , ராபின் இருப்பானே.

நான் ராபினைக் கூட்டிட்டு கிளம்புறேன். நீ பேசிட்டு வா. நல்லதே நடக்கும். கவலப்படாதடா !

ராபின் தண்ணீர் கொண்டு வரவும்,  வாங்கிக் குடித்தான் தினேஷ். 

கார்த்திக், "ராபின் நாம கிளம்புவோம், அவன் ரெக்கார்ட் எழுதி முடித்து விட்டு வர்றானாம்.!

“சரி தினேஷ், நாங்க கிளம்பறோம். சீக்கிரமா எழுதி முடி. அடுத்து ஸ்டடி ஹாலிடேஸ்ல எப்ப கம்பைன்  ஸ்டடி பண்ணலாம்னு சொல்லு. போன் பண்ணுறா. பை 

பை கார்த்திக்! பை ராபின் !

சில நிமிடங்களில், அவன் வகுப்பு வாசலில் ரம்யா, "வா ரம்யா ! சாரி உன்கிட்ட தடால்னு அப்படி சொன்னது கஷ்டமா இருக்கு . சாரி !"

நீதான் என்னை மன்னிக்கணும் தினேஷ். நான் உன்னை இந்த மாதிரி யோசிக்க வச்சிருப்பேன்னு நினைக்கவே இல்ல. என்னை மன்னிச்சிரு. இந்த மாதிரி  உனக்கு தோன்ற நான் காரணமா இருந்திருந்தா ஐ ஆம் வெரி  வெரி  சாரி.

என்னை உனக்குப்  பிடிச்சிருக்கா இல்லையா ? ஆமாவா  இல்லையான்னு தெளிவா சொல்லிடு. இப்பவே சொல்லிடு ப்ளீஸ் ரம்யா . என்னால இந்த படபடப்பைத் தாங்க முடியல !

எனக்கும் அதே பிரச்சினைதான் தினேஷ். என்னாலும் இந்த படபடப்பைத் தாங்க முடியல!

“இங்க பாரு!” என்று தான் வாங்கி வைத்து இருந்த பூவையும், சாக்லேட்டையும் எடுத்துக் காட்டினாள்.

“என்ன சொல்ற ?எனக்கு ஒண்ணும்  புரியல!”.  தினேஷ் சொல்ல

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharv 2019-06-30 09:28
:D idhu konjam expected than a'am 😜 irundhalum dhinesh pavam than facepalm something is fishy let us wait and see what happens next....but indha Ramya correct ah dhinesh enga ellam confuse agi iruparunu solluradhu partha muname idha clarify seithu irukalame :Q: steam curious to see amudhan's expression 😍😍 interesting update ma'am 👏 👏👏 👏 super 👌 who this new guy jumping now??

thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-07-03 07:53
கதையில் என்னுடனேயே பயணித்து, கதையின் போக்கை கணித்த ரசனைக்கு நன்றி தோழி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்திSrivi 2019-06-30 09:02
So aahamotham expect panna madhiri pudhu aal vandhachu.. Great .. Interesting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-07-03 07:54
கதையின் போக்கை ரசித்துக் கணித்த உங்கள் ரசனைக்கு நன்றி தோழியே :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-06-30 07:14
:clap: ohno ippadi aagivittathey? :sad: dhinesh enna panna porangannu paarppom.🤔antha pudhu aal yaar? Waiting to read more. (y) :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-07-03 07:55
ஆர்வத்துடன் ரசிக்கும் தங்களுக்கு நன்றி தோழி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்திPrathap jansi 2019-06-30 06:56
Aioooooo Dinesh paavam :sad: 😩😩😩😩😩😩😩 but enakku guess irundhichi ipd nadakkumnu :-)

En manam dineshkaga padupadudhu he is innocent :sad:
But interesting ma'am this twist is superb :grin:

Thanku so much :thnkx: Dinesh Enna seiya poraro. Waiting for next epi :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 16 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-07-03 07:55
கதையின் போக்கை ரசித்து சரியாகக் கணித்த ரசனைக்கு நன்றி தோழி :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top