Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 17 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 17 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

முதனுக்கு கதையின் போக்கு ஆச்சரியமாக இருந்தது. சில நேரம் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சம்பவங்களும் நடக்கும்தான் என்று தோன்றியது. இன்னும் என்ன தான் நடக்கும் எனத் தொடர்ந்து கதையைப் படித்தான்.

வெள்ளைத்தாமரை இதழ்-16     இதோ ஒரு காதல் கதை  பகுதி-16

ம்யாவின் கரம் தடுத்து நிறுத்தியது. முதலில் இங்கே உக்காரு தினேஷ்.  இந்தா கொஞ்சம் தண்ணி குடி என்று வாட்டர் பாட்டிலை நீட்டினாள். அவளிடம் வாட்டர் பாட்டிலை நடுக்கத்துடன் வாங்கியவனுக்குத் தண்ணீரைக் குடித்த பின்னர், கொஞ்சம் பதட்டம் குறைந்தது. தினேஷுக்கு ரம்யா சொன்னவை அதிர்ச்சியாக இருந்தாலும்,  பின்னர் தன் உணர்வுப்பெருக்கைச் சற்று சமாளித்துக் கொண்டு நிதானமாகப் பேசத் தொடங்கினான்.  “சாரி ரம்யா, நான்  தான்  உன்னை தப்பாகப் புரிஞ்சுகிட்டேன். காலேஜ் பஸ் ஸ்டாப்ல, கிளாஸ்ரூம் மாடி வராந்தாவில்,  கேண்டீனில் தேடினது எல்லாவற்றிலும் நீ எதிர்பார்த்தது என்னைத்தான்னு நினைச்சிட்டேன்.  அது என்னோட தப்புத்தான்!”. என்றான்

தினேஷ் சொன்னதற்கு ரம்யாவால் பதில்  ஒன்றும் சொல்லமுடியவில்லை. மனதில் இருப்பதை வார்த்தைகளாக மாற்றுவதில் தடுமாறிக்கொண்டு இருந்தவளிடம்  தொடர்ந்து தினேஷ், “என்னால உனக்கு ரொம்ப கஷ்டம், மன்னிச்சிரு ரம்யா!” என்றான். “ பரவாயில்லை தினேஷ், உனக்குக் குழப்பம் வருகிற மாதிரி நடந்ததுக்கு நீ தான் என்னை மன்னிக்கணும்!” என்று சொன்ன ரம்யா, மேலும் “தினேஷ்!உன்னோட மனசு வருத்தப்படுற மாதிரி பல தடவை நான் பேசியிருக்கேன், என்னை அதுக்காக நீ மன்னிக்கணும்!” என்றாள். நான் அதெல்லாம் சீரியசாவே எடுத்துக்கல ரம்யா என்றான். ஒரு தடவை என் பேரைச் சொல்லிப் பேசுவாளான்னு யோசிச்சேன், இன்னிக்கு இத்தனை தடவை தினேஷ்னு கூப்பிட்டு என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாளே உள்ளுக்குள் வலித்தது தினேஷுக்கு, எதையும் வெளிக்காட்ட முடியாமல் தத்தளித்தான்.

இவர்களின் உரையாடலை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த அந்த புதிய நபரைக் காட்டி, எப்படி ரம்யா இவரைத் தெரியும் உனக்கு ? என்ற தினேஷிடம், “காலேஜ்ல சேர்றதுக்கு முன்னாடியே இங்கே தானே  என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத வந்தேன். அன்னிக்கு எல்லாருக்கும் உதவி பண்ண ஒரு வாலண்டியரா இருந்தாரு. பார்த்தவுடனே எனக்கு ரொம்ப புடிச்சது. முதன் முதல் நாளில்  இவரைப் பார்த்தது இன்னும் என் கண்ணுக்குள் இருக்குது.” “இங்கே வந்து சேர்ந்ததும் அவரைப் பத்தி இன்னும் தெரிஞ்சது! எங்களுக்கு லேப் ஒர்க் பண்றதுக்கு கைடு பண்ண வேற இவங்க தான் வந்தாங்க. இவங்களைப் பத்தி தெரியத் தெரிய எனக்கு ரொம்பப் புடிச்சது. அதை வெளிப்படையா நான் சொல்லவும் செஞ்சேன். சில தடவை துணிஞ்சு வீட்டுக்குப் போன்லாம் பண்ணிருக்கேன். ஆனால் பேசக் கூட ரொம்ப பயமா இருக்கும், எனக்குப் பிடிச்ச பாடல் வரிகளைப் போட்டுட்டுப் பயந்து போனை வச்சிருவேன். நான் உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கே விலகி விலகி ஓடிட்டாரு. இன்னிக்கு தான் என்னைப் புரிஞ்சிக்கிட்டு திரும்ப வந்து பேசவே செஞ்சிருக்கார். !”  எதோ மனப்பாடம் பண்ணிய செய்யுள் பகுதியைக் கடகடவென்று ரம்யா ஒப்பிப்பது போலத் தோன்றியது தினேஷுக்கு. எந்த ஒரு உணர்ச்சி மாறுபாடுகளும் அதீதமாய் அவள் கண்களில் எப்போதும் தெரியும், அந்தளவு தெரியவில்லையே இவரைப் பற்றி பேசுகையில் என்று நினைத்தான்,

மறுகணமே, இல்லையில்லை, என் காதல் கைகூடவில்லை என்ற எண்ணத்தில் அவள் உள்ளத்தைப் புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறேன். உண்மையில் அவரைப்  பத்தி சொல்கையில் தான் எத்தனை தெளிவு இந்த பெண்ணிடம். எவ்வளவு ஒளி அவள் கண்களில், அதை  என் மனவிருப்பத் தோல்வியின் அதிர்ச்சியில் என்னால்தான் சரியாகக் கணிக்க முடியவில்லை என்று தோன்றியது தினேஷுக்கு. உண்மையில் எல்லாவற்றையும் நான் தான்  தவறாகப் புரிந்து கொண்டுவிட்டேன். அவள் போன் போட்டு பேச நினைத்து, பாடல் ஒலிக்கச் செய்தது எல்லாம் இவருக்காகத் தான் இருக்கும்.

இவ்வளவு சொல்லிட்டேனே .  இவர் இவர் என்று .. ரம்யா நிறுத்திவிட

முகிலன் - எம். இ . கம்ப்யூட்டர் சயின்ஸ் செகண்ட் இயர்  , பார்ட் டைம் லெக்சரர்  என்று சொன்னான் தினேஷ். 

உனக்கு எப்படித் தெரியும்? என்றாள் ரம்யா மெல்லிய குரலில், 

“அவரைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிக்கட்ட நீ, முக்கியமா ஒரு விஷயம் தெரிஞ்சிக்காமல் போய்ட்ட!” தினேஷ் நிறுத்த..

“அது என்ன ?”  என்பது போல் ரம்யாவின் பார்வை..

“இவர் என்னோட அண்ணன்.  என் பெரியம்மா பையன். நாங்க எல்லாரும் ஒரே வீட்ல தான் இருக்கோம். ஒரே காலேஜ்ல வேற படிக்கிறோம். அதனால் பல குழப்பங்கள்.!பரவாயில்லை. இன்னையோடு என் மனபாரம் குறைந்தது. அதில் எனக்கு நிம்மதி! உங்க காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள்!” என்று கிளம்பினான் தினேஷ்.

தினேஷ் வெளியேறியதைப் பார்த்தபின் முகிலனைப் பார்த்து தலையைக் குனிந்தவாறே ரம்யா, நானும் கிளம்புறேன், என்று அங்கிருந்து நகர்ந்தாள். எவ்வளவு பரபரப்புடன் தினேஷும் ரம்யாவும் அந்த நாளை எதிர்பார்த்து இருந்தார்களோ அதைப் போலவே பரபரப்புடனும் பல்வேறு உணர்ச்சிகளின் கலவைகளான ஒரு நாளாக முடிந்து விட்டது.

தினேஷின் நண்பர்கள் அவனை ஓரளவு தேற்றினாலும், அவன் மனத்தின் ஆழத்தில் இருந்து

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Completed Stories
  • NA
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 17 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-07-08 20:14
:clap: nice epi.eagarly waiting 4 next epi.iteresting aaga poguthu kathai. :GL: :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 17 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharv 2019-07-07 12:56
Awesome!! :hatsoff: Penulti chumma dhool ma'am. certainly indha twist ethir parkadhau :clap: :clap: Teaser parthu oru velai ivaru dhinesh squre ah iruparonu ninaichen :D

wow Rombha crisp aga irundhadhu your narration so far (y) :dance: I am very sure Dhinesh and Ramya's love will win our hearts in the finale too :yes: :yes:

Something sounds fishy btw mugilan and ramya oru velai annaikku phone seithapo mugilen eduthu plan change panitaronu thonnudhu ma'am...wat you say :P considering dhines's future :Q: Dhinesh perusa kalata panama odhungi nindradhu simply superb ma'am :hatsoff:

Amuthanai hot pan la nikka vachittu poitingale ma facepalm curious to read the ultimate epi. :GL: and dhool kalakungal :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 17 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-07-08 10:21
Thank you for the motivating comment friend. Thanks a zillion :thnkx: :thnkx: :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 17 - பூர்ணிமா செண்பகமூர்த்திPrathap jansi 2019-07-07 07:15
Very sad epi Dinesh paavam pa :sad: pachcha pulla avara poi paduthi eduthutangale facepalm enakku ennamo Ramya mugilan kadhal poinu thonudhu but not sure it's just a thought waiting for last epi Ramya in nilamai therinjika :thnkx: and :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 17 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-07-08 10:21
thank you friend! :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top