Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
மனம் விரும்புதே உன்னை... - 19 - 5.0 out of 5 based on 1 vote

19. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

MVU 19

ஞ்சீவ் மனதில் பல கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கும் போது இந்து அதை எதையும் பற்றி சிந்திக்கவோ, அறிந்திருக்கவோ இல்லை. அவள் மனம் இன்னமும் குழப்பத்தில் தான் இருந்தது. அனிச்சை செயலாக சஞ்சீவின் மீது படும் படி சாய்ந்த போதும் அது அவளின் சிந்தனையை கலைக்கவில்லை. அம்மாவை பற்றி, கீதாவை பற்றி, அதை எல்லாம் மீறி சஞ்சீவை பற்றி என எண்ணி அவள் மனம் குழம்பிக் கொண்டிருந்தது. அவர்கள் இறங்கும் நிறுத்தம் வந்த போது, சஞ்சீவ் அவளிடம் சொல்லி விட்டு முன்னே சென்றான். அவனை பின் தொடர்ந்து இந்துவும் இறங்கினாள்.

மழை இன்னமும் தூறல் போட்டுக் கொண்டு தான் இருந்தது. கூடவே இரவு நேரத்து சில்லென்ற காற்று வேறு, சென்னையில் கூட கொஞ்சம் குளிர தான் செய்தது. இருவரும் அமைதியாக இறங்கி நடந்தனர். முன்பு போல் அல்லாது சஞ்சீவ் அவளின் அருகில் தான் நடந்தான். அவளின் துப்பட்டாவை எடுத்து தலை முடியை சுற்றி போட்டு விட்டு,

“இப்படி போட்டால் நல்லது தானே...” என்றான்.

அவனின் செயலில் கொஞ்சம் திடுக்கிட்டவள், அவன் துப்பட்டாவை எடுத்து போட்ட போது முகத்தில் லேசாக பட்ட அவனின் கைகளினால் சிலிர்த்தாள். அதுவரை எதோ உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தவள் அப்போது தான் இறங்கி வந்தாள். பேருந்தில் ஏறும் முன் இருந்த சஞ்சீவின் ஒதுக்கத்திற்க்கும் இப்போது நெருங்கி நடக்கும் சஞ்சீவிர்க்கும் இருக்கும் வித்தியாசம் உடனே உரைத்தது. விசித்திரமான முறையில் அவளுக்கு மகிழ்ச்சியுடன் கூடவே சற்று கலக்கமும் ஏற்பட்டது. சஞ்சீவ் பழைய மாதிரி பேசுவதில் மகிழ்ச்சி. அவன் மீண்டும் காதல் திருமணம் என்று பேச தொடங்கினாள் எப்படி மறுப்பது என்ற கலக்கம்...

“இந்து, ஒரு விஷயம் சொல்லனும்... நீ எனக்கு போன் செய்த போது நான் எடுத்து பேசலைன்னு ஏதாவது கோபமா?”

“இல்லை அப்படி எல்லாம் எதுவும் இல்லை... உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்னு நினைச்சேன்...”

“அன்னைக்கு நான் என்னோட போனை ஆபிஸில் மறந்து வச்சுட்டு வந்துட்டேன் அது தான் பேச முடியலை... சாரி, வேண்டிய நேரத்தில் உனக்கு ஹெல்ப் செய்ய முடியலை...”

“பரவாயில்லை... நீங்க மறந்து வச்சுட்டு வந்ததற்கு என்ன செய்ய முடியும்...”

பேசிய படி இருவரும் இந்துவின் வீட்டை அடைந்தனர். ஆச்சர்யமாக பார்த்த, இப்போது பழக்கமாகி விட்டிருந்த செக்யூரிட்டியிடம், கார் ரிப்பேர் ஆனதை சுருக்கமாக சொல்லி விட்டு உள்ளே சென்றனர். சஞ்சீவை எப்படி போக சொல்வது என்று இந்து குழம்பிக் கொண்டிருந்தாள். வீணா சீக்கிரம் வந்து விட்டால் பரவாயில்லை...

அவளின் எண்ண ஓட்டத்தை அறிந்ததுப் போல், சஞ்சீவின் முகத்தில் மந்தகாச புன்னகை ஒன்று தோன்றி இருந்தது. கதவை திறந்து உள்ளே வந்தவள், சஞ்சீவை கேள்வியாக பார்த்தாள்.

“இப்போ கிளம்ப வேண்டியது தானேன்னு தானே கேட்குறீங்க? உங்க பிரெண்ட் வரட்டும் அப்புறம் கிளம்புறேன்...” என்றான் சஞ்சீவ்.

ஆம் என்றும் சொல்லாமல் வேண்டாம் என்றும் சொல்லாமல்,

“உட்காருங்க... நான் உங்களுக்கு ஜூஸ் ஏதாவது எடுத்துட்டு வரேன்...” என்றாள் இந்து.

அவள் காட்டிய ஷோபாவில் அமர்ந்தவன்,

“ஜூஸ் வேண்டாம், காபி டீ ஏதாவது கிடைக்குமா?”

“ஓ தாராளமா, வெயிட் பண்ணுங்க நான் வரேன்...” என்று உள்ளே சென்றாள் இந்து.

ஐந்து நிமிடத்தில் காபியுடன் வந்தாள். வாங்கி பருகியவன்,

“பரவாயில்லையே, இதெல்லாம் கூட தெரியுமா உங்களுக்கு?”

“இன்ஸ்டன்ட் காபி தானே, இதில என்ன கஷ்டம்... “

“நீங்க தலையை எல்லாம் துவட்டியாச்சு போல.. நானும் உங்க கூட தானே வந்தேன்... டவல் வேணுமான்னு கூட கேட்க மாட்டீங்களா?”

வனுக்கு இன்று என்னவாகி விட்டது என்பதுப் போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, அமைதியாக உள்ளே சென்று ஒரு டவலுடன் வந்தாள் இந்து.

வாங்கி தலையை துவட்டியவன்,

“ஏன் இந்து நீ யூஸ் செய்த அதே டவலா ஒரே வாசனையா இருக்கு...” என்றான் கண்களில் குறும்பு மின்ன.

“ப்ச்... சஞ்சீவ் இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு? ப்ளீஸ் இந்த மாதிரி பேச்சு எல்லாம் வேண்டாம்...”

“சரி இந்த மாதிரி வேண்டாம், வேற எந்த மாதிரி பேசலாம் சொல்லுங்க மேடம்...”

“எந்த மாதிரியும் வேண்டாம், வீணா கொஞ்ச நேரத்தில் வந்துருவா, நீங்க கிளம்புங்க, உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்...”

“நிஜம் தான்... நிறைய வேலை இருக்க தான் செய்யுது... அதை விட இங்கே முக்கியமான வேலை ஒன்னு இருக்கே...”

அவன் பதிலின் அர்த்தம் என்ன என்பதை அறிய அவனை அவள் கூர்ந்து பார்க்கும் போதே, சஞ்சீவ் எழுந்து அவள் அருகில் வந்தான். அவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன்,

“இந்து யூ லுக் வெரி பியூட்டிபுல்... அதுவும் இந்த மாதிரி எல்லாம் பார்த்தால் நான் என்ன செய்றது...”

பேசியபடி குனிந்து அவள் இதழ்களில் மெதுவாக முத்தமிட்டான்.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# mvbJayakumar 2013-03-07 15:02
whr is the mvu -20 to 27 th part... pls help.. i need to know the full story...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 19Vadhana 2012-11-30 23:32
Hello nice story..
but today date is Nov 30th where is the next update.
post it .. its going nice
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 19Admin 2012-12-01 01:12
Hi Vanthana, parts 20 & 21 are avl. . :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 19Thenmozhi 2012-12-01 04:04 Reply | Reply with quote | Quote
# hivens 2012-11-10 21:39
:-)
Reply | Reply with quote | Quote
# mvuchandra.e 2012-11-07 13:46
super update.
Reply | Reply with quote | Quote
# மனம் விரும்புதே உன்னைmalathimarianandan 2012-11-07 10:27
Hi Aadhi,
Nice update.

Irandu pageku mela kodukka matteergala.

Aduththu yenna nadakka poguthu yentru yethirparppu athigamayettey poguthu.

Waiting for nxt update.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 19Admin 2012-11-06 06:55
Nice update Aadhi :-) Last time expected the fight but you gave a twist and now just when I thought all is well, there's one more unexpected twist....
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 19shak 2012-11-05 16:45
I Like the story very much. waiting for this 19 part very long time. why dont u write more instead of only 2 pages
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 19supriya 2012-11-05 05:51
good but little sad twist
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 19Thenmozhi 2012-11-04 22:00
Hello Readers, MVU 19 is online now :-) Enjoy!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top