Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 23 - 5.0 out of 5 based on 4 votes

23. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

Manam virumbuthe unnai 23

ன்று இரவு, அர்ச்சனாவிற்கு தந்திருந்த மாத்திரைகளை கொடுத்து விட்டு, அவர் பக்கத்தில் அமர்ந்த இந்து,
"ரொம்ப டையர்டா இருக்கா அம்மா???"

மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"நீ தான் ஒண்ணுமே இல்லாததை பெரிசாக்கிட்ட இந்து... எனக்கு ஒண்ணுமே இல்லை..."

"ப்ச்... இப்போ தெரியும் அம்மா ஆனால் அன்னைக்கு என்ன எதுன்னு புரியாமல்..."

அவள் முடிக்கும் முன், குறுக்கிட்டு,
"பிடிச்சாலும் பிடிக்காட்டாலும், நடக்க வேண்டியது நடந்து தான் இந்து ஆகும்... உன்னுடைய அம்மா ஆயிரம் வருஷம் உயிர் வாழ போவதில்லை தானே???"

இந்துவிற்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. அதை புரிந்துக் கொண்டு, ஒரு புன்னைகையோடு பேச்சை மாற்றினார் அர்ச்சனா,
"சொல்லு கண்ணா ஏதோ சொல்ல நினைச்ச போலும்...."

"ஆமாம் அம்மா... இந்த அப்பாவுடைய கம்பெனியில் நமக்கு இருக்கும் ஷேர்சை நந்தினிக்கு கொடுத்துட்டு, உண்மையை அத்தைக்கும் எல்லோருக்கும் சொல்லிடலாமா???"

இந்துவின் பேச்சை கேட்டு அர்ச்சனா திகைத்து போய் சில வினாடிகள் அமைதியாக அமர்ந்திருந்தார். அன்னையின் மன நிலை புரிந்ததால் இந்துவும் உடனே எதுவும் சொல்லவில்லை. பின்,
"எனக்கு புரியுது அம்மா இது சின்ன விஷயம் இல்லை, ஆனால் நந்தினியும் அவங்க அம்மாவும் பாவம் தானே..."

"அது சரிடா... ஆனால் அப்பா..."

"அம்மா, நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... ஒரு விதத்தில், அப்பா இப்போ இல்லாததும் நல்லது தான்... அவர் இருந்திருந்தா இப்படி சொல்ல எனக்கும் தைரியம் வந்திருக்காது..."

"ம்ம்ம்ம்..."

"நீங்க மெதுவா யோசிச்சு சொல்லுங்க.... அப்புறம், அம்மா, நாம கொஞ்ச நாள் ஊட்டி போய் இருக்கலாமா????"

மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"அங்கே போனால் சஞ்சீவ் ஞாபகம் காணாமல் போயிடுமா என்ன???" என்றார் அர்ச்சனா.

இப்போது திகைப்பது இந்துவின் முறையானது. ஆனாலும் வழக்கம் போல் சமாளித்துக் கொண்டு,
"போக தான் வேணும்... அந்த பேச்சு இப்போ எதுக்கு அம்மா..." என்றாள் .

"சரி நீ இப்படியே இருக்க முடியுமாடா? என்னை பத்தி யோசிச்சு பாரு, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா... சரி சஞ்சீவை உனக்கு பிடிக்கலைனா விடு... உனக்கு எந்த மாதிரி பையன் பிடிக்கும்னு சொல்லு..."

"ப்ச்... நான் எப்படி அம்மா உங்களை விட்டுட்டு, கல்யாணம் செய்துட்டு சந்தோஷமா இருக்க முடியும்?"

"தப்பு இந்து, உன் சந்தோசம் தான எனக்கு முக்கியம்... நீ சந்தோஷமா கல்யாணம் செய்துக்கிட்டா எனக்கு இந்த தனிமை எல்லாம் பிரச்சனையே இல்லை... நான் லக்ஷ்மி, கல்பனா இப்படி இவங்க கூட பேசியே நேரத்தை ஓட்டிடுவேன்... எந்த அம்மாவும் அவங்க பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைப்பாங்க ...."

"அப்படி பொதுபடையா சொல்ல முடியாது, அம்மா..." என்று மனதில் காஞ்சனாவை நினைத்துக் கொண்டு சொன்னாள் இந்து. பின்,

"சரி அம்மா, நீங்க தூங்குங்க... நாம நாளைக்கு பேசுவோம்... குட் நைட்..." என்று சொல்லிவிட்டு, அர்ச்சனா வசதியாக படுக்கும் வரை பார்த்து விட்டு, போர்வையை சரி செய்து விட்டு, தன் அறைக்கு சென்றாள் இந்து.

டந்த சில நாட்கள் போலவே இந்துவிற்கு அன்றும் தூக்கம் வர மறுத்தது. கைபேசியை எடுத்து சஞ்சீவ் முன்பு அனுப்பிய எஸ்.எம்.எஸ்களை படித்தாள். அவன் அவளுக்கு பெயர் வைப்பதாக சொல்லி அனுப்பியிருந்த மெசேஜை படித்த போது, அவள் மனதில் இன்பமும் துன்பமும் கலந்து ஒரு வித உணர்வு தோன்றியது. கைபேசியை வைத்து விட்டு படுத்தவள், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். தன்னால் சஞ்சீவ் மனதில் ஏற்பட்டிருக்கும் வருத்தத்தை தீர்க்க வழி கிடைக்காதா என்று வருந்தினாள்.... ஒரு நிமிடம் காஞ்சானவிர்க்காக, கீதாவிர்க்காக சிந்தித்தாள்... மறு நிமிடம், வீணா சொன்னது போல் சஞ்சீவையும், அவளுடைய காதலையும் எண்ணி மருகினாள்... இந்த சித்ரவதையில் இருந்து மீளவாவது, இரவு முடிந்து விடியல் வராதா என்று இறுதியில் எண்ண துவங்கினாள். அவள் விரும்பியது போல் சற்றே வெளிச்சம் வர துவங்கியதுமே படுக்கையில் இருந்து எழுந்து விட்டு, முகம் கழுவி, பல் துலக்கி விட்டு, தோட்டத்தில் உலாவினாள்.

எவ்வளவு நேரம் என்று உணர்ச்சி இல்லாமல் நடந்தவள், கால்கள் வலிக்க துவங்கவும், வீடு செல்ல திரும்பினாள். இரவு தூங்காததால் தலையும் வலித்தது. அவள் உள்ளே வந்த போது, அர்ச்சனாவும், கனகாவும் மும்முரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவளை பார்த்த உடன் அவர்கள் பேச்சு சட்டென்று நின்றது. இந்து அப்போதிருந்த மனநிலையில் எதை பற்றியும் விளக்கம் கேட்க தோன்றவில்லை. மகளின் வாடியிருந்த முகத்தையும், சிவந்திருந்த விழிகளையும் பார்த்து விட்டு,
"என்ன இந்து, உடம்பு சரி இல்லையா என்ன??" என்றார் அர்ச்சனா.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை அம்மா... வாக்கிங் போயிட்டு வந்தேன் அது தான்... நீங்க ரெண்டு பேரும் டிபன் சாப்பிட்டாச்சா???"

"இல்லை டா...."

"எங்கே இந்தும்மா, நீங்க வந்த பிறகு தான சாப்பிடுவேன்னு, அம்மா அடம் பிடிக்குறாங்க... சரி உங்களை கூப்பிடலாம்னாலும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க...."

"சாரி அம்மா... இன்னைக்கு இதுக்கு காம்பன்ஸேட் செய்ய நானே தான் ப்ரேக்பாஸ்ட் செய்ய போறேன்... ஏன் அக்கா நீங்க ஏதாவது செஞ்சுட்டீங்களா என்ன?"

அர்ச்சனாவை பார்த்து விட்டு,
"இல்லைம்மா, தோசை தான் ஊத்தனும்... நீங்க வந்த பிறகு செய்யலாம்னு...."

"ரொம்ப நல்லதா போச்சு நானே செய்றேன்...." என்றாள் இந்து.

"ஏன் இந்து, உனக்காக வெயிட் செய்ததற்கு எங்களுக்கு கிடைச்ச தண்டனையா இது?" என்றார் அர்ச்சனா புன்னகையோடு.

"அம்மா, என்னை உங்களை மாதிரி நினைக்காதீங்க... உங்களுக்கு தான் சமையல் சுத்தமா வராது, கனகா அக்கா மாதிரி யாராவது வேணும்... எனக்கு எல்லாம் அப்படி இல்லை..."

"அதையும் தான் பார்ப்போமே..."

"பார்க்கலாமே..." என்றபடி ரோஷத்துடன் சமையலறை பக்கம் சென்றாள் இந்து.

ல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சஞ்சீவ் எங்கேயோ கேட்ட சத்தத்தில் கண் விழித்தான். என்ன சத்தம் என்று கவனித்தவன், அவனின் அறையின் கதவு தட்டபடுவதை உணர்ந்து கோபப் பட்டான். அவனே தூக்கம் வராமல் புரண்டு புரண்டு இறுதியில் சில மணி நேரம் முன்பு தான் உறங்க தொடங்கி இருந்தான். சலிப்போடு சென்று கதவை திறந்தவன், கதவருகில் நின்ற காஞ்சனாவை கண்டு சிடு சிடுத்தான்.
"என்னம்மா அப்படி அவசர வேலை? கொஞ்சம் நேரம் நிம்மதியா தூங்க கூட விட மாட்டீங்களா??"

"கொஞ்ச நேரம்??? மணி ஒன்பது ஆக போகுது... உன்கிட்ட முன்னாடியே சொன்னேன் தானே பொண்ணு பார்க்க போகணும்னு... இப்படி நீ தூங்கிட்டே இருந்தா நான் வேற என்ன செய்றது?"

"ஓ !!!"

"என்னடா??? அதுக்குள்ளே மறந்து போயிடுச்சா? இல்லை உன் மனசு மாறிடுச்சா?"

"மனசெல்லாம் ஒன்னும் மாறலை... எந்த பொண்ணா இருந்தாலும் சரி தான்... நான் வரணும்னே இல்லைன்னு சொன்னேன் தானே?"

"திரும்ப இதையே ஆரம்பிக்காதே... சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பி வா... போயிட்டு வர வழியில சாப்பிடலாம்... பத்து நிமிஷத்தில வந்து சேர்ந்திருக்கணும்..." சற்றே அதட்டல்லாக சொல்லி விட்டு சென்ற காஞ்சனாவை கோபமாக முறைத்து விட்டு, அதனால் பலன் இல்லை என்பதை உணர்ந்து, கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தான் சஞ்சீவ். முகம் கழுவி, பல் துலக்கி, குளித்து  முடித்து கிளம்பிய போதும், அவன் மனதில் ஒரே கேள்வி தான் இருந்தது. ஒரு வேளை எல்லாம் சரியாக அமைந்து எல்லோருக்கும் இன்று பார்க்க போகும் பெண்ணை பிடித்து விட்டால், வீம்புக்காக அவளை திருமணம் செய்துக் கொள்ள முடியுமா??? இந்த கேள்வியின் கூடவே இந்துவின் முகமும் புன்சிரிப்பும் அவன் கண் முன்னே வந்து போனது. கூடவே அவள் அன்று அவனை அறைந்ததும் நினைவில் வந்தது. உடனேயே அவன் கோபமும் சிலுப்பிக் கொண்டது.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23sathya 2013-11-30 02:01
ஐ லைக் யூ
Reply | Reply with quote | Quote
# மனம் விரும்புதே உன்னைSaravana - Afghan 2013-01-23 11:30
Good Job, I love the character of Indhu, Veena and Keetha...awaiting for next update ..........
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23Thenmozhi 2013-01-13 02:24
Hello all,
Sorry for keep you waiting.... The update will be published within 12 hrs from now that is before 2PM Indian Time....

Apologies....
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23Anu_sha 2013-01-13 07:12
Hi Addhi i juz cant wait for up coming episode.....
the story s awesome....
wat a magic in ur finger.....
Mizz ur story....
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23sumathisbs 2013-01-12 17:55
when will you update adhi...... :-|
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23shanmugapriya 2013-01-12 14:42
hi aadhi when will u upate the next part
Reply | Reply with quote | Quote
+2 # மனம் விரும்புதே உன்னை... - 23Shalini 2013-01-11 14:14
Where is the update aadhi :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 23saividhya 2013-01-11 13:59
please update as soon as possibly and i want happy ending.
Reply | Reply with quote | Quote
+4 # mvukokila Rajaram 2013-01-10 13:36
hi when will update the 24th part
Reply | Reply with quote | Quote
-3 # RE: மனம் விரும்புதே உன்னை... - 23Thenmozhi 2013-01-10 07:02
Hello everyone,
This time there's going to be a single day delay in posting the next episode.

Will post it without fail tomorrow.

Thanks.
Reply | Reply with quote | Quote
+1 # மனம் விரும்புதே உன்னை...23Mahi 2013-01-09 17:40
Hi Aadhi..

I started to read this story two days back and today i completed upto part 23. It is really SuPeRb :-) without doing my job i am reading this story in office :P .. Good work and my best wishes to you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை...23Thenmozhi 2013-01-10 07:01
Thanks Mahi :-)
Reply | Reply with quote | Quote
# மனம் விரும்புதே உன்னை... 23Mahi 2013-01-09 17:24
Interestind Aadhi :-) let me know when u r gng to update the next part :roll:
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 23Vadhana 2013-01-02 18:08
Good Update aadhi :-) . dont make it as tragedy please :-|
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23Thenmozhi 2013-01-07 03:35
Point noted :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 23Sasireka A 2012-12-31 17:58
OMG.. :-) ..i expected this turning point..nice aadhi
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23Thenmozhi 2013-01-01 18:46
Thanks Sasi Reka :) Kathaiyai ingeye mudikkalaama continue seiyyalaamaanu thana yosichittu irukken :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23sumathisbs 2013-01-01 21:00
Aadhi pls continue the story...... expecting an happy end..... :-) :roll:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23Thenmozhi 2013-01-07 03:37
Hi Sumathi,
Kathaiyai next episodile mudikkalaam... But my friends are asking me to extend it for some more weeks... athu thaan konjam kuzhappathil irukken... Let's see :-)
Reply | Reply with quote | Quote
# really niceGayathririna 2013-01-12 21:38
:-)
Reply | Reply with quote | Quote
# NiceMathu_j 2012-12-28 16:31
Hi Aadhi,

just started reading d seris now.... its really awsm 1 :)

Best wishes
Mathu
Reply | Reply with quote | Quote
# RE: NiceThenmozhi 2012-12-30 17:06
THanks mathu :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23Admin 2012-12-28 08:01
Hey Aadhi,
Good to see your reply :-)

So Sanjeev puthusaa enna condition solla poraar????
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 23Thenmozhi 2013-01-07 03:35
:-) Poruthirunthu paarungal :-)
Reply | Reply with quote | Quote
# haisupriya 2012-12-28 06:26
usual twist aadhi. r u going to end the story in few weeks?
Reply | Reply with quote | Quote
+1 # RE: haiThenmozhi 2012-12-28 07:21
Sorry, if I had disappointed you :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top