Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
கம்பன் ஏமாந்தான் - 11 - 5.0 out of 5 based on 5 votes
Pin It

11. கம்பன் ஏமாந்தான் - வினோதா

"லோ சார்!" என்றாள் பாரதி குழப்பத்துடனே .

"ஏன் பாரதி உங்களை டிஸ்டர்ப் செஞ்சுட்டேனோ?"

இது என்ன கேள்வி, என்பது போல அவள் பார்க்கவும்,
"சாரி, சனிகிழமை வந்து இப்படி பேசுறது தொந்தரவு தான், புரியுது, ஆனால் என்னவோ உங்க கிட்ட பேசணும்னு தோணிச்சு." என்றான் விவேக்.

"பரவாயில்லைங்க, எனக்கு அப்படி ஒரு வேலையும் இல்லை. சும்மா கதை தான் படிச்சிட்டு இருந்தேன்... வாங்க அங்கே போய் உட்கார்ந்து பேசுவோம்..."

அவள் சென்ற முறை அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிய பெஞ்ச் பக்கம் நோக்கி நடக்கவும், விவேக்கும் கூட நடந்தான்.
"நான் அப்போதே நினைச்சேன், நீங்க நிறைய கதை படிப்பீங்கன்னு. ஆனால் கதை எழுதவும் செய்வீங்களோ?"

அவனை ஆச்சர்யமாக பார்த்தவள்,
"ம்ம்ம்... முன்பெல்லாம் நிறைய எழுதுவேன், அது என்னவோ இப்போதெல்லாம் எழுத மனம் வரதில்லை..."

"ஏன்?"

"ம்ம்ம்... தெரியலை, அது என்னவோ எழுத தோண மாட்டேங்குது."

இருவரும் காலியாக இருந்த அந்த பெஞ்சில் அமர்ந்தார்கள்.
"அப்புறம் உங்க கனவு கம்பெனி எல்லாம் எப்படி இருக்கு?" என்றாள் பாரதி.

"இன்னமும் கனவாகவே தான் இருக்கு" என்றான் அவன், அவளை ஆச்சர்யமாக பார்த்து விட்டு.

"ஏன் அப்படி? காலம் தாழ்த்தும் ஒவ்வொரு வினாடியும், நீங்க பொன்னான நேரத்தை இழந்துட்டே இருக்கீங்க."

"நிஜம் தான். எனக்கும் சீக்கிரம் எனக்கு பிடிச்ச பிசினஸ் ஆரம்பிக்க ஆசை தான்... ஆனால் அதில் கொஞ்சம் சிக்கல் இருக்குங்க.."

"சிக்கலா?"

"ஆமாம். அண்ணனுக்கு அப்பாவுடைய டெக்ஸ்டைல் பிசினசிலேயே ஆர்வம் இருக்கு. அதனால அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் இப்போ புதுசா தொழில் ஆரம்பிக்கனும்னா முதலீடுக்கு பணம் வேணும் தானே? நான் மட்டும் அப்பா அம்மா கிட்ட எனக்காக தனியா பணம் கேட்டு ஆரம்பிச்சா, நிறைய குழப்பம் வர வாய்ப்பு இருக்கு. இப்போ அமைதியா இருக்கிற குடும்பத்தில என்னால புயலடிக்க கூடாதுன்னு தான் யோசிக்கிறேன்."

"ம்ம்ம்... அதுவும் சரி தான் நீங்க உங்க அண்ணன், அம்மா, அப்பா, தங்கை எல்லோர் கிட்டேயும் நேரா பேசி பார்க்கலாமே, அவங்க புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்."

"எல்லோருக்கும் தெரியும். நான் இப்போ உங்க கிட்ட சொன்னதை சொன்னதே அம்மா தான். யோசிச்சு பார்த்தால் அவங்க சொல்றதும் சரி தான்..."

"ம்ம்ம்... உங்க அண்ணா பத்தி தெரியலை, ஆனால் உங்க அண்ணி அப்படி எல்லாம் இல்லை... சரி ஆனாலும் நீங்க ஏன் லோன் ஏதாவது முயற்சி செய்ய கூடாது?"

மீண்டும் அவள் பக்கம் ஆச்சர்யமாக பார்த்து விட்டு,
"அதில் கொஞ்சம் சிக்கல் இருக்கு, பாரதி. நான் போய் லோன் வாங்கினேன்னு வைங்க உடனே, நரேந்திரன் குடும்பத்தில குழப்பம், பாரு அவருடைய மகன் வெளியே பாங்க்ல லோன் வாங்குறான் அப்படி இப்படின்னு கதை கட்டி விடுவாங்க. எந்த காரணத்திற்காகவும் குடும்பத்துக்கு கெட்ட பெயர் வர மட்டும் நான் விட மாட்டேன்." என்றான் விவேக்.

"புரியுது... நீங்க சொன்ன மாதிரி இது சிக்கலான விஷயம் தான். உங்க அம்மா அப்பா கிட்ட திரும்ப பேசி பாருங்க..."

"பார்ப்போம்.. அப்புறம் நீங்க எப்போ அடுத்த கதை எழுத போறீங்க?"

"என்னவோ என் கதை எல்லாம் படிச்சிருக்கிற மாதிரி இவ்வளவு ஆர்வத்தோடு கேட்குறீங்க?"

"நீங்க எழுதினா அது நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை தான்..." என்றான் விவேக் ஒரு புன்னகையோடு.

அவளின் பார்வை அவனின் புன்னகையில் நிலைத்தது. அவனின் கண்கள் தன் முகத்திலே தான் பதிந்திருப்பதை உணர்ந்து அவசரமாக பார்வையை திருப்பிய பாரதி,
"நான் ஒரு இருபது சிறுகதை கிட்ட எழுதி இருக்கேன், அதை வெளியிட்டது எல்லாம் இல்லை... "

"ஏன்???"

"என்னவோ தோணலை..."

"காப்பி இருந்தா தாங்களேன்..."

"நீங்க கதை படிப்பீங்களா என்ன?"

பாரதியின் கேள்வியில் வியப்பை கவனித்து விட்டு,
"நிறைய படிப்பேன்... எல்லா விதமான கதையும் படிப்பேன்..."

"நிஜமாவா?"

"சத்தியமா, ஏன் இப்படி ஒரு சந்தேகம்?"

"இல்லை பொதுவா பிசினஸ் மக்கள் எல்லாம் பிஸ்னஸ் பற்றி நினைத்தே தான் காலம் தள்ளுவாங்கன்னு கேள்வி..."

"இப்படி பொதுபடையா நினைப்பதே தப்பு... எங்க வீட்டில் எல்லோருக்கும் படிக்கும் பழக்கம் உண்டு..."

"ஓ !"

"சரி உங்க கதையை..."

"தரேன்... படிச்சு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க..."

"கட்டாயமாக..."

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# LovelyKiruthika 2016-06-28 14:11
Very nice
Reply | Reply with quote | Quote
# Kamban yemaanthansumis 2013-02-04 11:51
When will you update next episode?
Reply | Reply with quote | Quote
# கம்பன் ஏமாந்தான்Saravana 2013-01-23 11:22
Wow, It's great........Thank You.... awaiting for read next update.
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 11sumathisbs 2013-01-16 08:03
hi vino, when will you update the next part?
i am eagerly waiting to read!!!!!! :-* :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கம்பன் ஏமாந்தான் - 11sumathisbs 2013-01-12 18:09
why delay in the update? ;-)
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 11Vadhana 2013-01-10 19:27
hey vino kalakiteenga .. it very nice..
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 11Admin 2013-01-07 08:06
Very nice Vinodha :-) Keep it going....
Reply | Reply with quote | Quote
+2 # RE: கம்பன் ஏமாந்தான் - 11Thenmozhi 2013-01-07 03:39
Vinodha, Romba nallaa iukku.. Appadiye oru thendral veesum feeling :-)

I like your heroine and also the hero :-)

Good going madam :-)
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 11Sasireka A 2013-01-04 20:22
nice:)
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 11Vadhana 2013-01-02 18:04
Good Update .. :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top