ஆனால் இன்றோ ஆலிவ் க்ரீன் 3/4த் ஹேண்ட் கேஷுவல் ஷேர்ட், கருப்பு நிற ஏன்க்கில்(ankle) ஃபிட் ஜீனில் மற்றும் சீராக வெட்டப்பட்ட குட்டை முடியை அழகாக விரித்துவிட்டிருந்தவளின் அழகு அவனது மனதை கொள்ளையடித்தது..
இவ்வாறு அவளை அரை நொடியில் அவனது லேசர் கண்களில் ஸ்கேன் செய்ய.. நமது நாயகியும் அவனது நெடு நெடு வென்ற உயரத்தைப்பார்த்து அசந்துதான் நின்றுவிட்டாள்.. கடந்த இருமுறையும் அவனை உட்கார்ந்து இருந்த நிலையில் தான் பார்த்திருந்தாள்.. ஆதலால் அவனது ஆறடி உயரம் அவளது கண்களுக்கு தென்படவில்லை.. ஃபேடெட் ரெட்டில் கருப்பு புள்ளிகளிட்ட போலோ டீஷர்ட் அடர்ந்த கருநீல ஜீனில் அட்டகாசமாக இருந்தான்..
“ப்லெசன்ட் சர்ப்ரைஸ் ஷைலாரன்யா.. உங்கள இங்கே பார்ப்பேன்னு எதிர்ப் பார்க்கலை..” என சிறு புன்னகையுடன் கூற.. ஷைலாரன்யாவின் மனமோ.. ‘இப்படி சிரிக்காத டா.. நா அப்படியே உருகிருவேன்..’ என புலம்ப.. அதற்குள் தமக்கை தங்களையே கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவள்,
“ஹெல்லோ ரிஷி சார்.. நானும் தான்.. அக்கா இவரு தான் எங்க ஸ்கூல் கம்ப்யூட்டர் லேப் ரெனோவேஷனிற்கு ஸ்பான்சர்.. ரிஷி வந்தியத் ஹை-டெக் ஐ.டி. நெட்வ்ர்கின் எம்.டி..” என ரிந்துவிடம் அறிமுகப்படுத்த அதற்குள் சூர்யாவும் இவர்களிடம் வரவே.. முறையே அக்கா அத்தானையும் ரிஷிக்கு அறிமுகப் படுத்தினாள்.. ரிஷியின் கைகளைப் பற்றி குலுக்கிய சூர்யாவிடம் ஓர் இரு நிமிடம் பேசியவன் வினய் பில்லிங்க் முடித்து வரவும் மூவரிடமும் விடைப் பெற்று தன் நண்பன் வினய்யை அழைத்துக் கொண்டவன்.. திரும்பி ஷைலுவைப் பார்த்து தலை அசைத்து சென்றான்.. அவனது தலை அசைப்பு அவளுக்கு சொல்லண்ணா உணர்வை தந்தது..
நண்பனுடன் வெளியே வந்தவன் தனது மொபைலை பார்த்துக் கொண்டே “வேந்தன் எங்கே டா.. ஆளையேக் காணோம்..” என விசாரிக்க..
“ஹப்பா.. இப்பவாச்சு உனக்கு கேட்கனும் தோனுச்சே.. நீ அந்த பொண்ணுக் கிட்ட பேசப் போனப்பவே அவனுக்கு ஒரு இம்பார்டன்ட் கால் வந்திச்சுனு கீழேப் போயிட்டான்.. பார்க்கிங்க் ல வெய்ட் பண்ணறேன்னு”.. என்ற வினய் மீண்டும் தொடர்ந்தான்..
“சரி யாரு டா அந்த பொண்ணு.. நீ இப்படி எல்லம் தானாக போய் பேசும் ரகம் இல்லையே..” என சந்தேகமாக கேட்க..
பதிலொன்றும் கூறாமல் வெறும் புன்னகையை சிந்தியவன்.. நண்பனின் கழுத்தை இழுத்துக் கட்டி கொண்டு சென்றான்..