(Reading time: 8 - 15 minutes)

01. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

"ன்னடா மப்புல இருக்கியா?" வந்தது ஒரு பெண் குரல் அவள் ஓட்டி வந்த வாகனத்தின் சத்தத்துடன்.

தனது பைக்கை நிறுத்த முயன்ற கார்த்திக் கால் இடறி தடுமாறிய போது அவனது பின்னாலிருந்து  வந்த குரல்.

"ரெம்ப நல்ல பையன்னு இவ்ளோ நாள் கஷ்டபட்டு பில்ட் அப் பண்ண இமேஜ் கெட்டுடும் போல இருக்கே. என் குப்பய கிளறாளே - எவ இவ ?" என்று எண்ணியபடியே சற்றே திரும்பி பார்த்தான்.

 

கார்த்திக் நின்ற வரிசையின் எதிர் வரிசையில் சுவரை பார்த்தவாறு ஸ்கூட்டியை நிறுத்தி  ஆப் செய்த  அவளை திரும்பி பார்த்த அவன் அவளை பின்னாலிருந்து தான் பார்க்க முடிந்தது.  பளிசென்ற வெள்ளை நிற சுடிதாரில், தோள் பட்டை க்கும் இடுப்பிற்கும் நடுவில் வரை வளர்ந்த கூந்தல் காற்றில் அலைபாய  ஒரு கையால் அதை அவள் அடக்க  முயன்று கொண்டிருந்தாள்.தம்மாதுண்டு கீரை கட்டு  கூந்தல்  அவளுக்கு அடங்க மறுத்து போராடி கொண்டிருந்தது.

                                 

கார்த்திக்கிற்கு சற்று குழப்பமாக இருந்தது. சுற்றும் முற்றும் யாரும் இல்லை. "என்னை தான் சாடமாடையாக கிண்டல் செய்தாளோ ? ஹும்... இன்றைக்கு எனக்கு  நேரமே  சரியில்லை.  முதல்ல கார் மக்கர்... அப்புறம் நண்பேன்டானு  தோளில் கைபோட்டு வழக்கம் போல கால வாரிய சிவா...இப்போ நிஜமாவே காலை வார இவளிடம்  இப்படி ஒரு பேச்சு கேட்க வேண்டிய நிலைம.. ஹ்ம்ம்... ஆல் மை பேட் டைம்ஸ்"  மனதிற்குள் நொந்தான்.

 

"எதுக்கு காலங்காத்தால இப்படி நொந்துகிற மச்சி? இன்னைக்கு ரொம்ப நல்ல நாள்..." மீண்டும் அவள் குரல்.  

 

இப்போ தெளிவானது நம்ம ஹீரோக்கு.... அவள் ஹான்ட்ஸ் ப்ரீ மூலம்மா அலைபேசியில் யாருடனோ பேசுவது. ஹப்பா என்று ஒரு பெருமூச்சுடன் தனது பைக்கை நிறுத்திய  போது  sms வந்ததை அறிவிக்க வைபரேட்  ஆன  ‘ ஐ போனை’ எடுத்தான்.

 

"உனக்கெல்லாம் எதுக்குடா ஐபோன்?"..."அட்லீஸ்ட் sms கூட பாக்க மாட்டியா? " ... அவள் அர்ச்சனை தொடர்ந்தது.

"இதோ பார்க்கிறேன்" மனதுக்குள் சொல்லியபடி வந்திருந்த குறுஞ்செய்தியை படித்து விட்டு அவன் அலைபேசியில் தெரிந்த  நீல நிற "f " ஐ தட்டினான். அதாங்க ஃபேஸ் புக் - நாகரீக தகவல் தொடர்பு மாய வளை..இன்றய உலகத்தில்... முக்கியமாக  இளைய சமுதாயத்தில் ஒன்றி விட்ட இன்றியமையாத ஒன்று. நம்ம ஹீரோக்கு இது ஒரு ஜன்னல் - அவன் நட்பு  வட்டார செய்திகளையும் கருத்துக்களையும் பகிரவும் தெரிந்து கொள்ளவும்  அவனுக்கு கிடைத்த வசதி. அதற்கும் மேலாக அவன் முக்கிய பொழுது போக்கான "போட்டோ க்ராப்பி " தெறமைய வெளிபடுத்த கிடைத்த ஆயுதம். அதற்காக வார விடுமுறையின் பொழுது சிறிது நேரம் ஒதுக்குவான்.

"தேங்க்ஸ் யாதவ் ... அப்பாடா ஒரு பர்த்டே விஷ் வாங்குறதுக்கு உனக்கு எத்தனை வாட்டி  ரிமைன்ட் பண்ண வேண்டிருக்கு.. பட் இனிமே ஃபேஸ் புக்ல விஷ் அனுபாத ...என்  அக்கௌண்ட்டை திறந்து பாக்க கூட மாட்டேன்.   எனக்கும் அதற்கும் ரெம்ப தூரம்.. இன் மி ஒபினியன் இட் இச் ஜஸ்ட் வேஸ்ட் ஒப் டைம். அதை  பாக்கிற அளவுக்கு நான் வெட்டியா இல்ல." கருத்தை அழுத்தமாக உரைத்தாள்.

 

வள் வெட்டியா விட்ட 'வெட்டி' வார்த்தை, இது வரைக்கும் பொறுமையாக  இருந்த கார்த்திக்கை  நொடி பொழுதில் உசுபேற்றிவிட சட்டென்று சிவாவை அழைத்தான். எப்போவுமே கார்த்திக்கின் கோபத்தை தாங்கும் சக்தி சிவாக்குதான் உண்டு. ஏன்னா சிவா ரெம்ப நல்லவரு. எவ்வளோ திட்டினாலும் தாங்கிடிவாரு

கார்த்திக் கோபமும் கண்டிப்புக்கும் உள்ள குரலில்,

"ஒரு பப்ளிக் ப்ளேசில் சுத்தி உள்ளவங்களுக்கு இடைஞ்சலா போன் பேசி வெட்டியா (அதீதமான அதிக அழுத்தத்துடன்)  அரட்டை அடிக்க வேண்டாமேன்னு   வாய மூடிட்டு  ஃபேஸ் புக் பாத்துகிட்டு இருக்கேன். நாம சாயங்காலம் மீட் பண்றப்போ நேரில் பேசலாம்"

அதற்கு சிவா,

"வெட்டியா போன் பேசமாட்டன்னு  சொல்றதுக்கு ஒரு போன்.... நீ எப்போ மாப்ள ஃபேஸ் புக்கின் கொள்கை பரப்பு செயலாளரான ?"  கேட்ட பின் தான் அவனுக்கு தெரிந்தது எதிர்முனை எப்போதோ துண்டிக்கபட்டதென்று

கார்த்திக்கின் அழுத்தமான அந்த கோப குரலில் சட்டென்று திரும்பிய அவளுக்கு அவனின் குரலா இல்லை அதற்கு ஏற்ற கம்பீர தோற்றம்மா   எதோ ஒன்று அவளை வசீகரித்தது. அவன் சாடைமாடையாக தன்னுடைய தவறை உணர்த்தியதை அறிந்த அவள்

"யாதவ் சி யு. ஐ ஹவ் டு கோ நொவ்" ரகசியமாய் போனில் உரைத்தாள். எதிர் முனையில் பதில் வந்ததும், அழைப்பை துண்டித்து அலைபேசியை கைப்பையில் வைத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.