(Reading time: 8 - 15 minutes)

 கார்த்திக் அவளை நேராக பார்க்கவில்லை தான். இருந்தாலும் அந்த எரியாகே கேட்கும் அளவிற்கு ஓங்கி ஒலித்த அவள் குரல், முனுமுனுப்பாய் மாறியதை உணர்ந்தவனாய் சிறுமுறுவலுடன் பைக்கை விட்டு இறங்கி முன்னே நடக்க முயல, அவளும் அவனை

"எக்ஸ்க்யூ ஸ்  மீ " என மன்னிப்பையே அழைப்பாக அழைத்து வைக்க... அழைத்து முடிக்கும் சமயத்தில் அவள் துப்பட்டா ஸ்கூட்டிஇல் சிக்கி கையில் வைத்து இருந்த பொக்கே சரிந்து கீழே விழ... அதிலிருந்த அன்றே மலர்ந்த ரோஜா பூக்கள் சிதறின.

 

சட்டேன்று திரும்பிய கார்த்திக் அவளை பார்க்க, அவளுக்குளே ஒரு வித உணர்வு பரவ அவள் மனதோ பாடு பாடி கொண்டிருந்தது  

ஒரு மின்சார பார்வையின் வேகம் வேகம்

உன்னோடு உன்னோடு நான் கண்டு கொண்டேன்

ஒரு பெண்னோடு தோன்றிடும்  தாபம் தாபம்

என்னோடு என்னோடு நான் கண்டு கொண்டேன்

என்னை மறந்து விட்டேன் இந்த உலகத்தில் நான் இல்லை நான் இல்லை

உன்னை இழந்து விட்டால் எந்த மலரிலும் தேன் இல்லை

இது கனவா இல்லை நனவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்

சட்டென்று தன்னை கிள்ளிக்கொண்டு "ஐயோ சந்தியா மே பெ ஹி இச் ஹன்ட்சம். அதுக்கு இப்படியா பட் டிக்காட்டான் பிட்ட்சா ஹட்ட பார்த்த மாதிரி பார்ப்ப. பாக் கிரௌண்ட் ல  கண்ணாலனே பாட்டு வேற ..  இப்போ தான் திட்டு வாங்கின.. அவனுக்கு சிம்பதி உண்டாக்க, இந்த பூனையும் பால் குடிக்குமா எக்ஷ்ப்ரெசென் கொடு   .." தன்னை உணர்ந்தவளாய், பார்வை தாழ்த்திய அவளுக்கு இப்போது தான்  கீழே விழுந்த ரோஜாக்கள் மீது கவனம் திரும்பியது. கைகளில் வைத்திருந்த  பொக்கேவில் சில பூக்கள் எஞ்சிருக்க மாற்றவை கீழே சிதறி விழுந்திருந்தது. அவளின் பாச மலர்கள் கொடுத்த பாச மலர்கள் அல்லவோ அவை!

அதை பார்த்த உடன் மனது வலிக்க, பரபரப்புடன் பொக்கேவை ஒரு கைக்கு  மாற்றி,  மற்றொரு கையினால் சிதறியிருந்த ரோஜாக்களை சேகரித்தாள்.  பூவுக்கு வலிக்கும்மோ என மெல்ல வருடியாவரே  அதில் ஒட்டியிருந்த மண்ணையும் தூசியையும் தட்டினாள். "அக்கா சாரி செல்லங்களா...எவ்வளோ ஆசையாய் கொடுத்தீங்க. இப்படி கீழ போட்டேனே. " என்று மனதுக்குள் நொந்தாள். அவளுக்காக பன்னிரெண்டு மணியாகும் வரை கண்விழித்து பிறந்த நாள் கொண்டாடிய அவள் செல்லங்களை நினைக்க அவளுக்கு புள்ளரரிதது.

சில நொடிகளுக்கு முன் ஒரு ஜீவனை அழைத்தோமே என்ற நினைவே இல்லை அவளுக்கு.

 

வள் தான் அப்படி என்றால் நம்ம ஹீரோ எப்படி? இப்படி ஒரு அழகான பொண்ணு ஒரு லுக் வுட்டுட்டு கண்ணு முன்னாடி ரோசெஸ் ஸ நழுவ விட்டா, டக் ன்னு ஒரு ரோஸ் எடுத்து கொடுத்து திரும்ப  ரொமாண்டிக் லுக் விட்டு இருந்த இது சிறு கதையா இங்கயே முடிஞ்சிருக்கும், ஏன் இப்படி  தொடர் கதையா வரணும்?

 

கார்த்திக் என்ன செய்து கொண்டிருந்தான் தெரியுமா... அவனக்கு் ஏனோ பட படத்த பட்டாம்பூச்சி யின் இறக்கைகளை வெட்டியது போன்று இருந்தது. "எவளோ துரு துறுன்னு போன்ல பேசுச்சே, நாம கொஞ்சம் சாப்டா பேசி இருக்கலாம். நம்மள தப்பா நினைப்பாளோ... ஒட்டு கேட்டேனோ .... " பலவித எண்ணங்களை கலைத்தது அவளின் அழைப்பு.

அவனும் அவளை சட்டேன்று திரும்பி பார்க்க, தலையை லேசாக சரித்து ஒரு சாய்த்து பார்த்து கொண்டிருந்த அவளை பார்க்க அவனுக்கோ  "சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது .." என மனது பாட்டு பாட முயலும் வேளையில் “ இப்போ இந்த  பூனையும் பால் குடிக்குமா மாதிரி பாத்துட்டு பின்னால டாம் அண்ட் ஜெர்ரில வர்ற டாம் மாதிரி ஏமாந்த பூனையா நம்மள ஆகிடுவா.. distract... திசை திருப்பு உன் கவனத்தை" அவனின் இன்னொரு மனது அபாய எச்சரிக்கை விட அவனும் பார்வையை அங்கே சிதறி கொண்டிருந்த அழகிய ரோஜாக்கள் மீது திருப்பினான். அந்த காட்சியை கண்டதும் அவன் கேமரா கண்களால் அதை மனதில் படம் பிடித்தான். ஆனால் அவன் அதோடு நிற்கவில்லை.

அப்போது தான் ஆதவன் அந்த காலை வேளையில் மெதுவாக தனது கதிர்களை பரப்பிகொண்டிருந்தான். காலை இள வெயிலின் லேசான ஒளிக்கீற்று அந்த கட்டத்தின் கீழ்த்தளமாகிய பார்கிங் லாட்டின் ஒரு பகுதியை வெளிச்சமாக்கி கொண்டிருந்தது.

அந்த ஒளிவீச்சின் பேரொளியாக அவள்  அவளின் வெள்ளை சுடிதாரில் தேவதையாய் தோன்ற, துப்பட்டாவின் ஒரு முனை ஸ்கூடியின் சிக்கி இருந்தது தேவதையின் விரித்த ஒரு சிறகை போல அழகூட்டியது. அவள் கையில் இருந்த அழகான வேலைபாடுடன் கூடிய கிழிந்த பௌகெய் கூட வாய் திறந்து சிரிக்கும் நங்கை போல அழகாய் தான் காட்சி அளித்து கொண்டு இருந்தது. அவள் முன் தூசி படிந்த தரையில் சிதறிய ரோஜாக்களோ தாயின் வருடலுக்கு ஏங்கி கிடக்கும் குழந்தை போல தோன்ற!  அவள் குனிந்து ரோஜாவை கையில் எடுத்து மென்மையாக வருட கிளிக் சத்தம் கேட்டு கேள்வியுடன் நிமிர்ந்தாள்.

அவள் கார்த்திக் போனில் தன்னை படம் பிடித்ததை பார்த்து கோபமும் அதிர்ச்சியும் அடைந்தாள். அவள் முக மாற்றத்தை பார்த்த பிறகு தான் நிகழ் காலத்திற்கு வந்தவனாய் தான் செய்த தவறை உணர்ந்தான்.

 

"போச்சுடா.. உணர்ச்சிவசப்பட்டு லைடிங் எப்பெக்ட் நல்லா இருக்குன்னு  போட்டோ எடுத்து தொலசுட்டோம். வெள்ளை டிரஸ்ல அப்போ தேவத மாதிரி இருந்தா இப்போ இவள் முறைப்பதை பாத்தா எப்பா... பேய் மாதிரி இருக்கா! என்ன கடிச்சு கோதறதுக்கு முன்னாடி சரண்டர் ஆக வேண்டியது தான்" நினைத்தபடியே அவளை நோக்கி நடந்தான்.

Go to Episode 2

                                                                        ஆட்டம்தொடரும் ...           

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.