“கார் வந்திருச்சு மேடம்” – பவ்யமாக அமுதவள்ளியிடம் சொன்னான் அவளுடைய மெய்க்காப்பாளன் உமேஷ்.
“வரேன் உமேஷ்” – அமுதவள்ளி திரும்பவும் ஒருத் தடவை அவளுடைய கருத்தை கவர்ந்த இயற்கை அழகை விழிகளால் ரசித்தாள். பின் புதிய காரை நோக்கி நடந்தாள். வழியில் இருந்த புதியவனை பார்த்து பெயருக்கு புன்னகைத்து விட்டு கடந்துப் போனாள்.
இவன் வந்திருக்கா விட்டால் இன்னும் கொஞ்சம் நேரம் வானத்தை ரசித்து இருக்கலாம் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
கார் சீட்டில் சாய்ந்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். அப்படியே சில நிமிடங்கள் இருந்தாள்.
“கார் ப்ரேக்டவுன் ஆன இடத்துல வந்தது யாருன்னு டிடேயில்ஸ் கலக்ட் செய்தீயா உமேஷ்?” – விழிகளை திறக்காமலே உமேஷிடம் கேட்டாள்.
“பார்த்துட்டேன் மேடம். உங்க கிட்ட பேசினவர் பேரு பிரணய். பார்க்க சிம்பிளா தெரிஞ்சாலும் பெரிய மல்டி நேஷ்னல் கம்பெனியோட எம்.டி. அவரோட கம்பெனி இந்தியால இல்லை. ஆனா சிங்கப்பூர், மலேஷியா, கல்ஃப் கண்ட்ரீஸ்ன்னு எல்லா இடத்திலேயும் இருக்கு. இப்போ இந்தியாலயும் வர வேலையை ஸ்டார்ட் செய்துட்டதா பிஸ்னஸ் சர்க்கிள்ல பேசிக்குறாங்க.”
“பிரணய்? கேள்விப்பட்ட பேரு மாதிரி இல்லையே. என்ன டொமேயின்ல கம்பெனி இருக்கு? நம்ம கம்பெனிக்கு போட்டியா ஏதாவது வச்சிருக்காங்களா?”
“இல்ல மேடம். நம்ம கூட அப்படி ஓவர்லேப் எதுவும் இல்லை. இந்த பிரணய் எப்போவும் லோ ப்ரோஃபைல் வச்சிருப்பாராம். அதான் அவர் பேரை கேள்வி பட்டிருக்க மாட்டீங்க. கம்பெனி பேரு இன்ஃபினிட்டி க்ரூப்”
“ஒ! கம்பெனியை கேள்விப்பட்டிருக்கேன். மெடிகல் டிவைசஸ், ரிஅது லேட்டட் சர்வீஸ் தான செய்றாங்க?”
“எஸ் மேடம்” – உமேஷின் பதிலில் மதிப்பு இருந்தது.
உமேஷ் அமுதவள்ளி உடன் பத்து வருடங்களுக்கும் மேலாக வேலை செய்கிறான். மெய்க்காப்பாளன் என்பதை விட இப்படி பயணம் செய்யும் நேரங்களில் அவளுடைய பர்சனல் செக்ரட்டரி பார்வதி போலவே இன்னொரு அசிஸ்டன்ட் என்றும் சொல்லலாம்.
அதில் உமேஷுக்கு எப்போதுமே பெருமை உண்டு.
உதவாக்கரை என்று எல்லோரும் திட்டியவனுக்கு வேலைக் கொடுத்து, பயிற்சியும் கொடுத்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி தந்திருந்தாள் அமுதவள்ளி. அவளுக்காக உயிரைக் கொடுக்கவும் அவன் தயங்க மாட்டான்.
pranai nalavana. ena seiya try seiran avan? amuthavaliyai avanuku epadi deriyum? ena nadaka pogudhu