Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Thaayumanavan
Pin It

தொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா

முன்னுரை

ல்லா கணவன் மனைவிக்குள்ளும் ஏற்படும் கருத்து மோதல்தான் இக்கதையின் நாயகிக்கும் நாயகனுக்கும் ஆரம்பத்தில் ஏற்படுகிறது. அந்த மோதலால் ஏற்படும் இருவரின் பிரிவும் அதிலும் அந்த சமயம் நாட்டில் ஏற்பட்ட லாக் டவுன் பிரச்சனையால் இருவரும் இறுதியில்  இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும், இதில் கதைக்காக முக்கியமான ஒருவரின் பாத்திரத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன், இக்கதை முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக மட்டுமே எழுதப்பட்டது இக்கதையை படித்துப் பாருங்கள் தங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி


பாகம் 1

சென்னை

விஜய் தன் மனைவி ஜனனியுடன் திருமண கோலத்தில் தனது வீட்டு வாசலில் நின்றான். ஜனனி மணப்பெண் அலங்காரத்தில் வெட்கத்துடன் கன்னம் சிவந்து கணவனின் கையை கோர்த்தபடி நின்றாள். விஜயோ மணமகன் அலங்காரத்தில் அதீத மகிழ்ச்சியுடன் தனது காதல் மனைவியை கஷ்டப்பட்டு கரம்பிடித்த நிம்மதியுடன் அவளின் கையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றான். இருவருக்குள்ளும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. பேசாவிடினும் அவர்களின் மனங்கள் பேசிக் கொண்டன, அவ்வப்போது காதல் மனைவி ஜனனி வீசும் ஓரக்கண் விழிப்பார்வையில் சொக்கித்தான் போனான் விஜய் ஆசையாக தன் மனைவியிடம்

வெல்கம் மிஸஸ் விஜய்என அன்பாக அழைக்க அவளுக்கு கூச்சமும் நாணமும் ஒட்டிக் கொண்டது.

சட்டென சொல்லிவிட்டான் ஆனால் இந்த அங்கீகாரத்தை அடைய அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்.

வேண்டாம் வேண்டாம், காதல் வேண்டாம், விஜய் வேண்டாம் என சொல்லிய தன் தாய் அமுதாவை சமாளிக்க முடியாமலும் விஜயுடன் திருமணமனால் உன் வாழ்க்கையே நரகமாகிவிடும் என ஜனனிடம் சொல்லிய அவளின் தந்தை கதிரவனின் கோபத்தை கஷ்டப்படுத்தி அடக்கிக் கொண்டும் காதல் திருமணம் செய்தால் நம் வீட்டு மானம் மரியாதை காற்றில் பறக்கும், ஊர் சிரிக்கும் என சொல்லிய அவளின் தம்பி கௌதமின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டும் உற்றார் உறவினர் ஏசிய பேச்சுகளையும் வீசிய கேவலமான பார்வைகளையும் கண்டும் காதலை விடாமல் விஜயை கரம் பிடித்து கர்வத்துடன் இருந்தாள் ஜனனி.

ஜனனியை அடைய பெரிய பாக்கியம் செய்திருக்கிறேன் என பல நூறு முறையாவது விஜய்

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Aanantham enakkethu anbe neeyillaathuAanantham enakkethu anbe neeyillaathu
  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Naan vazhum vazhve unakkagathaaneNaan vazhum vazhve unakkagathaane
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகாAdharvJo 2020-10-28 21:30
Starting-a argument ah...namba mudiyadha oru dealing ah irukke 😁...veetulayum prichanai office layum prichanai facepalm title kum hero Kum samandhame illaiye :Q: janani-i samadhanam panama ivaru pattuku laptop nonduraru 😈 janani partha laptop thukki poduranga....back up irukku pole adhan cool ah irukaru :D lockdown start aguradhukku munadi ippadi lockdown period la mental agiduvanga pole :eek: imbalanced work life!!
nice start ma'am 👏👏👏👏👏 look forward to see what happens next...varum updates la entertainment kk panjam vaikamatinga nu namburen....😜
Thank you and best wishes 💐
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகாSabariraj 2020-10-28 18:34
So sad. மனைவியை தொலைத்து விட்டு தேடப் போறானா
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகாmadhumathi9 2020-10-28 18:30
:clap: nalla thodakkam sasi (y) eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top