Ladies and gentlemen, on behalf of the crew I ask that you please direct your attention to the monitors above as we review the emergency procedures.
விமானத்தின் ஸ்பீக்கர் வழியே குரல் கேட்கவும், மஞ்சு அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர் எதிரே இருந்த திரையின் மேலே பார்வையை பதித்தாள்.
மஞ்சுவின் அருகே இருந்த மனோஜ் அவளின் அருகே நெருங்கி, முகத்தை குனிந்துப் பேசினான்.
“இன்னும் 5 மினிட்ஸ்ல பறக்க ஆரம்பிச்சிடும் PBS”
கிட்டத்தட்ட அவளின் காதுகளில் முத்தமிடுவதுப் போல அவன் உதட்டை உரசிப் பேசவும், சிலிர்த்து, கூடவே அதிர்ந்து, முகத்தை விலக்கி அவனைப் பார்த்தாள் மஞ்சு!
மனோஜின் உதட்டில் ஒட்டிக் கொண்டிருந்த சிரிப்பு அவன் அதை தெரிந்தே தான் செய்தான் என்பதை அவளுக்கு சொன்னது!
“மனோஜ்...” என்று அவள் சிணுங்கவும், இன்னும் அதிகமாக அவளின் அருகே நெருங்கி அமர்ந்துக் கொண்டு, அவளின் கையை தன் கையோடு சேர்த்துக் கொண்டான் மனோஜ்.
மஞ்சுவிற்கு இது முதல் விமானப் பயணம் தான்! ஆனால் மனோஜ் அருகே இருப்பதாலோ என்னவோ அவளுக்கு கொஞ்சம் கூட பதற்றம் ஏற்படவில்லை.
அடுத்து விமானம் கிளம்பப் போவதற்கான அறிவிப்பும், சீட் பெல்ட் அணிய சொல்லும் அறிவிப்பும் ஒலித்தது.
தன் சீட் பெல்ட்டை சரிப் பார்த்த மனோஜ், அப்படியே மஞ்சுவின் சீட் பெலட்டையும் சரியாக இருக்கிறதா என்றுப் பார்த்தான்.
அவள் கேட்காமலே அவன் அவளுக்காக அதை செய்ததை ரசித்தாள் மஞ்சு.
அவளின் பார்வையை கவனித்தவனுக்கு அவளின் மனநிலை புரிந்ததுப் போலும்... அவனின் கைப்பிடியில் இருந்த அவளின் கையை இன்னும் இறுகப் பற்றினான்.
“என்னால நம்பவே முடியலை pbs! நாம கல்யனாதுக்கு அப்புறம் ஹனிமூன் கூட போகலை... இப்போ, நேரா இரண்டு வருஷத்துக்கு தனியா சிகாகோல இருக்க போறோம்... ஐ ஆம் வெரி ஹாப்பி...”
மஞ்சு பதில் சொல்வதற்கு முன் விமானம் மெல்ல ஓடத் தொடங்கி இருந்தது.
மஞ்சு சீட்டில் சாய்ந்து அமர்ந்து தன் முதல் விமான டேக்-ஆஃபை எதிர்கொள்ள தயாரானாள்.
சில நிமிடங்கள் ரன்வேயில் மெதுவாக நகர்ந்த விமானம், மெல்ல மெல்ல வேகம் எடுத்து பூமியில் இருந்து மேலே கிளம்பியது. எத்தனை தைரியமானவள் என்றாலும் அந்த சில வினாடிகள் மஞ்சுவும் வித்தியாசமாக உணர தான் செய்தாள்! அவளைப் புரிந்துக்
Lovely update bindu ma'am 👏👏👏👏👏👏 Manju eppadi compromise ananga nu parka waiting.
Thank you.