மித்ரன் புதிதாக வந்திருக்கும் கல்யாண சிக்கலை தீர்க்க ஆதாரங்களை திரட்ட நினைத்தான். 'அவள் சரியில்லை' என்று வார்த்தையால் சொல்வதைவிட டாக்குமெண்ட்ஸாக காட்டினால் நல்லது என்று நினைத்தான். எனவே டெல்லியில் காவல்துறையில் இருக்கும் மேத்தாவை தொடர்பு கொண்டு மயூரியை பற்றிய தகவல்களை அனுப்ப சொல்லி இருந்தான்.
அவன் கேட்ட தகவல்கள் அனைத்தும் சாப்ட் காப்பியாக வந்து விட்டன. ஆனால் அவனுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. மயூரியை பற்றிய தகவல்களை ஜ்வாலேஷின் மனைவிதான் சொல்லி இருந்தாள்.அன அவை விசாரிக்கப்படவும் இல்லை உறுதிபடுத்தப் படவும் இல்லை. அரைகுறையாக நிற்கும் விசாரணை கோப்புகளை காட்டி அப்பாவிடம் எதையும் பேச முடியாது.
அடுத்து என்ன செய்வது?.
மயூரியிடமே பேசி விடலாம். ஜ்வாலேஷ் காணாமல்போன வழக்கை பற்றி பேசாமல் ஹைந்தவியை பற்றி சொல்லி அவளை விலக சொல்லலாம். நட்பிற்காக அவள் இதை செய்தே ஆக வேண்டும். அவன் தீர்மானித்தான். மறுநாள் மயூரியை ஆலோசனை செய்ய முடிவெடுத்தான்.
ஆனால் இரவு உணவு முடித்த பின் தங்களுடைய அறைக்கு சென்ற ராம்குமார் பூரணிக்கு சிக்கலை புரிய வைக்க நினைத்தார்.
"பூரணி… நீயா ஒரு முடிவெடுத்து பேசிட்டே. நான் சொல்வதையும் கேட்கலாமே" என்றார்.
"நீங்க என்ன வேணாலும் பேசிக்கோங்க. ஆனா மிஸ்ஸுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன்."
" சரி நான் ஒத்துக்குறேன். நீ அவங்களுக்கு என்ன வாக்குறுதி கொடுத்த... மயூரியை உன்னோட மருமகளா ஏத்துக்கிறேன்தானே சொல்லி இருக்கற. சைத்ரனுக்கு மனைவினு பேசவில்லை. உனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. நீ மித்ரனுக்கு மயூரியை கல்யாணம் செய்து வைக்கலாமே."
"நீங்க தேவை இல்லாம குழப்பறீங்க. மித்ரனுக்கு லவ் மேரேஜ்தான்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Nee proof pannu rasa unnala mudiyada enna ahaan
and mithranai nall lock panitaru!!😁😁😁 Good father too
Interesting update ma'am 👏👏👏👏👏
Look forward to see what happens next.
Thank you.