அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்... கொரோனா அடுத்த அவதாரம் எடுத்து இருக்காம்... அதனால அனைவரும் எச்சரிக்கையோட பாதுகாப்பா இருங்க... கடவுள் அருளால வரும் வருடம் நல்ல முறையில் பிறக்கட்டும்...
தன் அன்னை கிளம்பியவுடன் வீட்டை சற்று ஒழித்து, விழுந்திருந்த பாத்திரங்களைத் தேய்த்து என்று முடிந்த வேலைகளை செய்த சாந்தி தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள தரையிலமர்ந்தாள்....
கல்யாணம் ஆகிய சில நாட்களிலேயே முதல் முறை கருவுற்றபோது அத்தனை ஆனந்தம் இரண்டு வீட்டிற்கும்... சாந்தியின் கணவனும், மாமியாரும் அவளைப் பூப்போல் தாங்கினார்கள்... ஆனால் திடீரென்று வந்த காய்ச்சலால் அவளின் கரு நான்காம் மாதத்தில் கலைந்தது...
அதன் பிறகு அதோ இதோ என்று ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன... ஒவ்வொரு மாதமும் இந்த மாதமாவது குழந்தை தங்குமா என்று ஆவலுடன் எதிர்ப்பார்பதும், அது கலைவதுமாக இருக்க வருடங்கள்தான் ஓடின... இதோ ஐந்து வருடங்களுக்கு பிறகு சாந்தி கருவுற்றாள்...
இந்த முறை எந்த பிரச்சனையும் வரக்கூடாதென்று அவள் மாமியாரும், அம்மாவும் அப்படி பார்த்துக்கொண்டார்கள்... இன்னும் இரண்டு வாரங்களில் மருத்துவர் குறித்துக் கொடுத்த டெலிவரி தேதி வருகிறது... அவள் கணவரும், மாமியாரும் அவளுடனே வந்து தங்குவதாக இருந்தது... கொரோனா பாதித்ததால் அவர்கள் தெருவிற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்க கணவனால் வர முடியவில்லை... நல்ல காலமாக மாமியார் அவள் தங்கை வீட்டில் இருந்ததால் தப்பித்தாள்... அங்கிருந்து வேலைக்கு செல்ல முடிந்தது... போன முறை காய்ச்சல் காரணமாக கரு கலைந்ததால், மாமியாரும் வெளி வேலைக்கு வருவதால் அதன் மூலமாக ஏதேனும் நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில் மாமியார் அவள் வீட்டிற்கு வரவில்லை...
இந்த குழந்தை உருவாவதற்குள் தான் பட்ட பாட்டை நினைத்து, இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் பெற்று பிழைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டியபடி இருக்க, அவளின் கணவன் அழைத்தான்....
“என்ன சாந்தி பண்ணுற... டிபன் சாப்பிட்டியா.... குழந்தை அசைவு எல்லாம் சரியா இருக்கு இல்லை...”
“அம்மா இப்போதான் ஆயாவை பார்த்துக்க கிளம்பிச்சு... இனிதான் சாப்பிடணுங்க... நீங்க என்ன பண்றீங்க.... என்னைய தூங்க விடாம இப்போவே உங்க புள்ள வயித்துக்குள்ள நல்லா ஆட்டம் போடுது...”
“வேலை வெட்டி ஒண்ணியும் இல்லை... பொழுது போவாம அல்லாடிட்டு இருக்கேன்...
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Shanthi, Rahul, lakshmi oda father, eand that one more person ellarum safe paniduvingala??? Corona kuda tie vaikadhinga!!
Andha summar munji kumar oda love story cut panidalam 😈😈 senseless fellow!!
Look forward to see what happens next.
Thank you .