“மே ஐ கம் இன் மேம்... “ என்று மெதுவாக கதவை தட்டிவிட்டு பணிவாக ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்..
அதைக் கேட்டதும்
“எஸ் கம் இன்... “ என்று மிடுக்காய் மொழிந்தாள் மணிகர்ணிகா..
அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஒரு நடுத்தர வயது பெண்..
கிட்டதட்ட பின் முப்பதுகளில் இருப்பாள் போல..ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சிப்பந்திகள் உடுத்தியிருக்கும் உயர்தரமான சீருடை போல அவளும் சீருடையை அணிந்திருக்க, அவள் கைகளில் ஒரு தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்..
அப்பொழுது தான் சூடான காபியை குடித்து முடித்தவள் அன்றைய தினசரியில் அவள் பார்த்த புகைப்படம், படித்த செய்தி அவள் உள்ளே சுழற்றி அடித்துக் கொண்டிருக்க அந்த துஷ்டனின் மீதான கோபத்துடன் பொங்கியவாறு அந்த சோபாவில் அமர்ந்திருந்தாள் மணிகர்ணிகா..
அதே நேரம் அந்த பெண்மணி உள்ளே வந்து இருக்க, அவள் கைகளிலும் ஏதோ ட்ராலி போல வைத்துக் கொண்டு வருவதை கண்டதும் அவளுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் சர்விஸ்க்கு வரும் சிப்பந்திகள் போலவே தோன்றினாள்..
மணுவின் அருகில் வந்தவள் காலை வணக்கத்தை சொல்லி அழகாக புன்னகைத்தாள்..
“மேம். என் பெயர் கலா...உங்கள் தேவையை கவனித்து கொள்வது என் பொறுப்பு.. உங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் கொண்டு வந்திருக்கிறேன்.. சாப்பிட வர்றீங்களா?” என்று பணிவுடன் அழைத்தாள்..
அப்பொழுதுதான் துஷ்யந்த் அவளை கீழே வரும்படி சொன்னது நினைவு வந்தது..
தன்னால் கீழ வரமுடியாது என்று மறுத்து சொல்லி அவன் கட்டளையை உதாசீனப்படுத்தியவள் கீழே செல்லாமல் இங்கேயே அமர்ந்து கொண்டாள்..
“அதற்காகத்தான் காலை உணவை மேலேயே அனுப்பி விட்டான் போல.. இருக்கட்டும்.. இந்த பயமாவது இருக்கட்டும்.. அவன் சொல்வதற்கெல்லாம் ஆடமாட்டாள் இந்த மணிகர்ணிகா என்று நன்றாக தெரிந்து கொள்ளட்டும்.. “ என்று உள்ளுக்குள் நொடித்தவள் அடுத்ததாய் அந்த கலா கொண்டு வந்திருந்த உணவை பார்த்தாள்..
அதே நேரம் அந்த பெண்ணும் மூடியிருந்த மூடியை எடுத்து விட்டு அவளுக்கு பரிமாறுவதற்கு ஆயத்தமாக அதில் இருந்த பதார்த்தங்களை கண்டதும் மயக்கமே வந்தது மணிகர்ணிகா விற்கு..
காலை உணவிற்கு இத்தனை ஐட்டங்களா? என்று வாயை பிளந்தாள்..
“அடங்கொய்யால..! ஒரு ஆள் சாப்பிட இத்தனை ஐட்டங்களா? ஓ..இதுதான் ராஜவிருந்து