விடிந்தது
இம்முறை ஜனனியின் வீட்டில் அனைவரும் எழுந்து ரெடியாகி வந்து டிவி முன் அமர்ந்துவிட்டனர், விஜயும் ஹனிகாவும்தான் உறங்கி வழிந்துக் கொண்டிருந்தார்கள் அதில் அமுதாவோ அனைவருக்கும் டிபன் செய்து சாப்பிட வைத்துவிட்டு வந்து அமர கௌதமோ
“அம்மா மதியம் சமைச்சிடும்மா”
”அப்புறம் போறேன்டா“
”இல்லைம்மா நீ போகமாட்ட டிவியை பார்த்துக்கிட்டு உட்கார்ந்துடுவ, நாங்க வேணா உதவி செய்றோம் வாம்மா”
”இல்லைடா அவங்க எழுந்திருச்சிடுவாங்க”
”அவங்க எழுந்தா சகானா சொல்வா நீ வாம்மா” என அவரை அழைத்துக் கொண்டு அனைவரையும் கூட்டிக் கொண்டு மதிய சமையலை காலை 9 மணிக்கே முடித்துவிட்டு ஓய்ந்தார்கள் அந்த வீட்டில்
இங்கோ விஜய் பொறுமையாக எழுந்தான். அவன் எழுந்து அமர்ந்து கொட்டாவி விட்டு பார்க்கையில் ஹனிகா மெல்ல அசைய அவளை தூக்கிக் கொண்டான், அவளும் மெல்ல கண்கள் திறந்து உடனே மூடிக் கொண்டாள்
”ஐ என்னடா கண்ணா மூச்சி விளையாடறியா இரு இரு நானும் உன் கூட விளையாடறேன்” என சொல்லியவன் அவளிடம் தன் முகத்தை மூடி மூடி திறந்து விளையாட அதில் அவளின் தூக்கம் கலைந்தது.
கலகலவென சிரிக்க அவளை அழைத்துக் கொண்டு குளிப்பாட்டி தானும் குளித்து ரெடியாகி அவளையும் ரெடியாக்கி தோட்டத்தில் பூத்திருந்த பூவை அவளின் பவுன்டையின் ஜிட்டில் சொருகிவிட்டு பூஜையறைக்குச் சென்று பக்தி சிரத்தையாக கடவுளிடம் ஜனனி வரவேண்டும் என வேண்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி சென்றவனுக்கு ஜனனியின் அறைக்கதவை கண்டதும் ஏதோ நெருடலாக இருந்தது, அவளின் அறை முன் நின்றான்
”ஹனி குட்டி எனக்கென்னவோ உங்கம்மா போறப்ப ஏதாவது லெட்டர் எழுதி வைச்சிருப்பாள்னு தோனுதுடா, நீ என்ன சொல்ற உள்ள போய் பார்க்கலாமா” என கேட்க ஹனிகாவோ அந்த அறையை கைகாட்டி ம்ம்ம் ம்மா என முனக அதை சம்மதமாக எடுத்துக் கொண்டவன்
”நீ பாப்பா உள்ள போனா ஜனனி தப்பா நினைக்க மாட்டா, நான் போனா அது மேனர்ஸா இருக்காது எதுக்கும் நீ முன்னாடி போ நான் பின்னாடியே உனக்காக வர்ற மாதிரி வர்றேன், அப்ப ஜனனி என்னை தப்பு சொல்ல மாட்டா” என சொல்லி அவளை இறக்கிவிட அவளும்
Thank you.