அங்கே சற்றே சங்கடமான அமைதி நிலவியது.
கத்தப் போகிறாள்... திட்டப் போகிறாள்... லெக்சர் கொடுக்கப் போகிறாள்... என அகிலாவின் மனம் அதன் போக்கில் யோசித்துக் கொண்டிருக்க... மெல்ல சமாளித்துக் கொண்ட பிறைநிலா,
“சாரி ஆனந்த் நீ தனியா இருக்கேன்னு அப்படியே வந்து பேசிட்டேன். நீ ஃப்ரீ ஆன அப்புறம் வா... நான் என் வொர்க் ரூம்ல இருக்கேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
அதன் பிறகே உணர்வுப் பெற்ற ஆனந்த், அகிலாவின் கையை விடுதலை செய்தான்... அவன் முகத்தில் குற்ற உணர்வு வந்து இருந்தது...
அகிலாவால் (முதல் முறையாக) பிறைநிலா 'சிச்சுவேஷனை' அமைதியாக கையாண்டதை மெச்சாமல் இருக்க முடியவில்லை... அவளின் அமைதியான ரியாக்ஷன் அகிலாவிற்கு ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது... அன்று அகிலாவைப் பார்த்து முகத்தை சுளித்தவளும் இவள் தானே...
அதற்குள் ஆனந்தின் முக மாற்றம் அவளின் கருத்தில் படவும், பிறைநிலாவை பற்றி யோசிக்கும் வேலையை விட்டு விட்டு ஆனந்திடம் தன்னுடைய கவனத்தை திருப்பினாள்.
“ஆனந்த்...”
“அகிலா... நான்...” என தடுமாறிய ஆனந்தின் முகம் சில நாட்களுக்கு முன் ஹெவன் ரிசார்ட்டில் சோகமாக பார்த்த ஆனந்தை அவளுக்கு நினைவுப் படுத்தியது.
இவனை சந்தித்து சில நாட்கள் தான் ஆகிறது என்பதை நம்புவது கூட அகிலாவிற்கு கடினமாக இருந்தது.
“ஆனந்த், எனக்குப் புரியுது!”
அகிலாவின் அமைதியான அந்த மூன்று வார்த்தைகள் ஆனந்தின் முகத்தில் சற்றே அமைதியை வரவழைத்தது.
“என் மனசை கவர்ந்தது நீ தான் அகிலா. ஆனால் இது சரியான நேரமான்னு தெரியலை...”
அகிலா தன் கையால் ஆனந்தின் முகத்தை பற்றினாள்.
“ஆனந்த், உங்களைப் போலவே தான் நானும்! என் மனசிலேயும் நீங்க தான் இருக்கீங்க! நம்ம வாழ்க்கையை பத்தி யோசிக்க நமக்கு நிறைய டைம் இருக்கு... அதுக்கு முன்னாடி சரி செய்ய வேண்டிய விஷயங்கள் அதிகமா இருக்கு... உங்க நாட்டோட மொக்கை ரூல்ஸ் படி உங்க அக்கா ராணி ஆக சான்ஸே இல்லைனாலும் தன்னோட சொந்த சந்தோஷத்தை பின்னால போட்டுட்டு உங்க குடும்பத்துக்காக பொறுப்பை அவங்க எடுத்திருக்காங்க...”
“உண்மை தான் அகிலா... அதுவும் விஜயனோட குடும்பம் எங்க அரசக் குடும்பத்தை விட மிகவும் பழமையான, புகழ் பெற்ற குடும்பம்... நிச்சயமான கல்யாணம் நிக்குறது... அந்த இளவரசன் அந்த பெண்ணுக்காக காத்திருக்கிறது எல்லாம் அங்கே நடந்ததே இல்லை...”
அகிலாவின் மனதில் பிறைநிலா மீதான மதிப்பு இன்னும் உயர்ந்தது! அத்தனை பெரிய குடும்பத்தில் மருமகளாக போவதை விட்டு விட்டு, தன் வீட்டில் பிரச்சனை என்ற உடன் பொறுப்பை எடுத்துக் கொள்ளவும் ஒரு கெத்து வேண்டும் தானே...!!!!
Look forward to read the next update.
Thank you.
more page kutuga sis
Ha ha nizha vuku enna kobam