“ANGER” and “LOVE” have NO Limits…
The Choice is yours…
“சார்” – ஹரீஷ் அதை சொல்லி முடிப்பதற்கு காத்திருக்காமல் அந்தப் பக்கம் மாதேஷ் பேசத் தொடங்கி இருந்தார்.
“ஹரீஷ் உன் டிசைனை வித்துட்டீயா என்ன? புது இன்வெஸ்டர் கிட்ட பேசுறேன்னு தானே சொன்ன?” – மாதேஷ்.
“ஆமாம் சார். அதுவும் டெட் என்ட்ல வந்து நிக்குது. கான்ட்ராக்ட் பேப்பர் தரேன்னு சொன்னாங்க. அப்புறம் அப்டேட்ஸ் இல்லை” – ஹரீஷ்.
“ஹரீஷ், உன் டிசைனை அவங்க கிட்ட தந்தீயா என்ன?”
“என் ப்ராடக்ட் பத்தின முழு டீடெயில்ஸ் வேணும்னு சொன்னாங்க சார். டிசைன் காப்பியை கொடுத்தேன்”
“அந்த அளவுக்கு நீ முட்டாளா? எத்தனை தடவை சொன்னேன் தெரியாதவங்க கிட்ட அப்படி கொடுக்காதேன்னு”
எப்போதும் பொறுமையாக பேசும் மாதேஷ் அப்படி குரலை உயர்த்தி சத்தமாக திட்டவும், ஹரீஷ்க்கு பெரிய தவறு நடந்திருக்கிறது என்று புரிந்தது.
“சார், எதுக்கு என் டிசைனை வித்துட்டேனான்னு கேட்டீங்க?”
“நான் உனக்கு ஒரு லிங்க் அனுப்புறேன். அதை ஓபன் செய்துப் பாரு. புது ப்ராடக்ட்க்கான அனவுன்ஸ்மென்ட். அப்படியே அச்சு அசல் உன்னுடைய ரோபோ தான் அது. அதுல பேடன்ட் பென்டிங்ன்னு நம்பர் வேற கொடுத்திருக்காங்க”
ஹரீஷ்க்கு தொண்டையை அடைத்தது. அவனுடைய பல வருட உழைப்பு அது!
மாதேஷிற்கு ஹரீஷை தெரியும். இந்த செய்தி அவனை எப்படி பாதித்திருக்கும் என்பதை உணர்ந்ததால் தொடர்ந்து அவனை திட்டிக் கொண்டிருக்காமல் பொறுமையாக பேசினார்.
“ஹரீஷ் எப்படியோ எல்லாம் தப்பா போயிடுச்சு. இப்போ முதல்ல உன் டிசைனை பாதுகாக்க வேண்டியது முக்கியம். உன் பேருல நான் முதலேயே பேடன்ட் ஃபைல் செய்தது நல்லதா போச்சு. நான் இதை பார்த்துக்குறேன். நீ அந்த லிங்க் பாரு. அந்த ப்ராடக்ட் அனவுன்ஸ்மென்ட் பின்னால யாரு இருக்கான்னு கண்டுப்பிடி. அவங்களை கான்டாக்ட் செய்து இந்த ப்ராடக்ட் பத்திக் கேள்வி கேளு. தைரியமா பேசு. உடனே இந்த அட்வர்டைஸ்மென்ட் வித்ட்ரா செய்யலைனா அதை செய்வேன் இதை செய்வேன்னு மிரட்டு”
“ஓகே சார்”
கோபம், இயலாமை இரண்டும் சேர்ந்து ஹரீஷை சோர்வடைய செய்தது. இருந்தாலும்
Thank you.